இஞ்சி தொக்கு--சமையல் குறிப்புகள்
இஞ்சி தொக்கு தேவையானவை: பொடியாக நறுக்கிய இஞ்சி - 3 டேபிள்ஸ்பூன், சாம்பார் வெங்காயம் - 3 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய்...

https://pettagum.blogspot.com/2011/08/blog-post_24.html
இஞ்சி தொக்கு
தேவையானவை:
பொடியாக நறுக்கிய இஞ்சி - 3 டேபிள்ஸ்பூன்,
சாம்பார் வெங்காயம் - 3 டேபிள்ஸ்பூன்,
பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - அரை டீஸ்பூன்,
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
கடுகு - ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2,
கறிவேப்பிலை - ஒரு கொத்து,
புளி தண்ணீர் - ஒரு கப்,
பொடியாக நறுக்கி வறுத்த தேங்காய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன்,
சீரகப்பொடி - கால் டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
வெந்தயம் - அரை டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
மைக்ரோ பாத்திரத்தில் எண்ணெய்விட்டு காய்ந்ததும்
கிள்ளிய காய்ந்த மிளகாய், தனியா, சீரகம், மஞ்சள்தூள் சேர்த்து
2 அல்லது 3 நிமிடம் பொன்னிறமாகும் வரை வைக்கவும்.
வெளியே எடுத்து அதனுடன் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
மைக்ரோ பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, மிளகாய், வெந்தயம்,
கறிவேப்பிலை போட்டு வறுக்கவும். பிறகு நறுக்கிய இஞ்சி, வெங்காயம், உப்பு, அரைத்த மசாலா விழுதைப் போட்டு மேலும் 2 அல்லது 3 நிமிடம் 'மைக்ரோ ஹை'-ல் வைக்கவும்.
நடுவில் கிளறிவிடவும்.எண்ணெய் மேலே மிதக்க ஆரம் பிக்கும் போது சிறிது தண்ணீர் விட்டு 2 நிமிடம் கொதிக்கவிடவும். பிறகு புளி தண்ணீர், உப்பு, தேங்காயைப் போட்டு கெட்டியாகும் வரை 5 அல்லது 7 நிமிடம் சமைக்கவும்.
Post a Comment