நபிமருத்துவம் வெந்தயம்--இய‌ற்கை வைத்தியம்

நபிமருத்துவம் வெந்தயம் வெந்தயத்தைச் சாப்பிட்டு உங்கள் வியாதிகளைக் குணமாக்கிக் கொள்ளுங்கள் என்று எம்பெருமானார் நபிநாயகம் அவர்கள் கூறியதாக ...

நபிமருத்துவம் வெந்தயம் வெந்தயத்தைச் சாப்பிட்டு உங்கள் வியாதிகளைக் குணமாக்கிக் கொள்ளுங்கள் என்று எம்பெருமானார் நபிநாயகம் அவர்கள் கூறியதாக ஹதீஸ் திப்ப நபவியில் தெளிவாக்கப்பட்டுள்ளது. வெந்தயம் ஒரு மா மருந்து என்று சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பே நபி நாயகம் அவர்கள் கூறியுள்ளார்கள். பேரிச்சம்பழம், பார்லி, அரிசி, வெந்தயம் ஆகியவற்றைத் தண்ணீரில் வேகவைத்து அதைத் தேனில் கலந்து லேசான சூடு இருக்கும்போது நோயாளிகளுக்கு அக்காலத்தில் அரபு நாட்டில் கொடுப்பார்கள். இஸ்லாமியர்களின் பிடித்தமான சமையல்களில் ஆட்டுக்கறி, வெந்தயக்கீரை, உருளைக்கிழங்கு கூட்டும் ஒன்றாகும். பொதுவாக சமையல் பொருளாக அனைவரின் பழக்கத்திலிருக்கும் வெந்தயத்தின் மருத்துவ குணங்களைப் பற்றி நம்மில் பலருக்குத் தெரியாமல் இருக்கின்றது. நம் நாட்டில் அனைத்துப் பாகங்களிலும் வெந்தயச் செடியைப் பயிரிடுவார்கள். இதன் இலைகளைக் கீரையாகக் சமையலில் பயன்படுத்துவார்கள். மழைக்காலங்களில் அதிகமாக விளையும் வெந்தயச் செடியில் பூக்கள் பூத்தபிறகு சுமார் இரண்டு செண்டி மீட்டர் நீளமான காய்கள் காய்க்கும். உலர்ந்த காய்களில் மஞ்சள் நிற விதைகள் இருக்கும். இதைத்தான் வெந்தய விதைகள் என்று கூறுவார்கள். மருத்துவ விஞ்ஞானிகள் வெந்தயத்தை ஆய்வு செய்து பார்த்தனர். அதில் மீன் எண்ணெய்க்கு சமமாக எண்ணெய்ச் சத்து இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை தவிர, பாஸ்பேட், லெசித்தின் மற்றும் நியூக்லோ அல்பூமிக் ஆகியவை அதிகளவில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. எனவே ஊட்டச்சத்துக்காக மீன் எண்ணெய்க்கு மாற்றாக வெந்தயத்தைப் பயன்படுத்தலாம் என்றும் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் நரம்புத் தளர்ச்சி, நாள்பட்ட வியாதிகளுக்குப் பிறகு ஏற்படும் பலவீனம், நரம்பு வலி, தொண்டை வலி, கழலைக் கட்டிகள், வீக்கங்கள், மார்புச் சளி, நிமோனியா ஆகியவற்றுக்கும் வெந்தயத்தைப் பயன்படுத்தலாம். மாதவிலக்கில் ஏற்படும் அதிக இரத்தப்போக்கைத் தடுப்பதற்கு 3 கிராம் வெந்தயத்தைத் தேனில் கலந்து இரண்டு வேளை தரலாம். வெட்டை நோயால் தொடை மடிப்புகளில் வரும் அரையாப்புக்கட்டி, கழலைக் கட்டிகள், பொதுவான வீக்கம் ஆகியவற்றைக் குணமாக்க வெந்தயத்தைத் தண்ணீரில் அரைத்துப் பற்றுப்போடலாம். 5 கிராம் வெந்தயத்தைப் பவுடராக்கிச் சிறிது சமையல் உப்புடன் கலந்து சாப்பிட்டால் வயிற்று வலி, அஜீரணம், வாயுத்தொந்தரவு, இரைப்பை பலவீனம் ஆகியவை குணமாகும். 6கிராம் வெந்தயம், சர்க்கரை ஆகிய இரண்டையும் பாலில் கொதிக்க வைத்துப் பாயசமாகக் குடித்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். 9 கிராம் வெந்தயத்தைத் தண்ணீரில் அரைத்துத் தினசரி ஒரு வேளை சாப்பிட்டால் மூட்டுவலி குணமாகும். ஹைதராபாத்தில் ராஷ்டிரிய போசன் அனுசந்தான் ஆராய்ச்சி நிலையத்தில் பல ஆண்டுகள் சர்க்கரை வியாதியைப் பற்றிய ஆராய்ச்சி நடத்தப்பட்டது. சர்க்கரை நோயாளிகளுக்கும் இருதய நோயாளிகளுக்கும் தினசரி 20 கிராம் வெந்தயத்தை அரைத்து 10 நாட்கள் கொடுக்கப்பட்டது. இதன் பலனாக இரத்தத்தில் உள்ள ஆல்கஹால் குறைந்திருப்பதாக தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சாப்பிடுவதால் உடலுக்கு எந்தவிதத் தீங்கும் ஏற்படவில்லை என்றும், தினசரி 20 கிராம் முதல் 100 கிராம்வரை தேவைக்கேற்றபடி சாப்பிடலாம் என்றும் அந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சர்க்கரை வியாதியைக் குணமாக்க சில யுனானி வைத்தியர்கள் வெந்தயத்தை மட்டும் தனியாகப் பயன்படுத்துவார்கள். பலர் பாகற்காய், நாகப்பழக் கொட்டை, வெந்தயம் அகியவைகளைச் சமஅளவில் கலந்து பவுடராக்கி ஒரு டீஸ்பூன் அளவில் தினசரி இரண்டு வேளை சாப்பிடுவார்கள். கிராமத்தில் சில யுனானி வைத்தியர்கள் பாகற்காய், நாகப்பழக் கொட்டை, வேப்பிலை, பிரிஞ்சி இலை, வெந்தயம் ஆகிய 5 பொருட்களையும் பவுடராக்கி வேளைக்கு ஒரு டீஸ்பூன் வீதம் இரண்டு வேளைதருவார்கள்.

Related

மருத்துவ டிப்ஸ் 5814840784706782360

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item