நோன்பாளி மனைவியரிடம்...அமுத மொழிகள்

நோன்பாளி மனைவியரிடம்... மீண்டும் ஒரு ரமளான்: பிறை16 நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்...

நோன்பாளி மனைவியரிடம்... மீண்டும் ஒரு ரமளான்: பிறை16 நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள். (அல்குர்ஆன் 2:187) நோன்பின்போது பகல் நேரத்தில் உண்பதும், பருகுவதும் தடைசெய்யப்பட்டது போல் தம்பத்திய உறவு கொள்வதும் தடுக்கப்பட்டதாகும். பசித்திருப்பது, தாகித்திருப்பது மட்டுமின்றி நோன்பாளி (பகல் நேரத்தில்) ஆசையை - இச்சையைக் கட்டுப்படுத்தி, தம்பத்திய உறவிலிருந்து விலகியிருக்கவேண்டும். இறைவனுக்காகப் பட்டினியையும் தாகத்தையும் சகித்துக் கொள்வதுபோல் தன்னுடைய உடல் இச்சை உணர்வுகளையும் கட்டுப்படுத்திச் சகித்திருக்க வேண்டும். வரம்பு மீறி விடாமல் நோன்பாளி மனைவியருடன், "நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்ற நிலையில் (தம் மனைவியரைக்) கட்டியணைப்பார்கள், முத்தமிடுவார்கள்! உங்களில் தம் உணர்ச்சியை அதிகம் கட்டுப்படுத்திக் கொள்பவர்களாக அவர்கள் இருந்தார்கள்!" (அறிவிப்பவர் ஆயிஷா (ரலி) அவர்கள் நூல்: புகாரி, 1927) ''நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றுக்கொண்டு தம் மனைவியரில் ஒருவரை முத்தமிடுவார்கள்'' என்று சொல்லிவிட்டு ஆயிஷா (ரலி) அவர்கள் சிரித்தார்கள். (நூல்: புகாரி, 1928) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, நோன்பாளி மனைவிகளைக் கட்டி அணைப்பது பற்றி ஒரு மனிதர் கேட்டார். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதி வழங்கினார்கள். பின்னர் மற்றொருவரும் வந்து கேட்டார் அவருக்குத் தடை விதித்தார்கள். நபி (ஸல்) அவர்களால் அனுமதிக்கப்பட்டவர் முதியவராகவும் தடுக்கப்பட்டவர் இளைஞராகவும் இருந்தார். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள். நூல்: அபூதாவூத்) எளிதில் உணர்ச்சி வசப்பட்டு எல்லை மீறிவிடும் இளவயதுக்காரர்களுக்கு நோன்பிருக்கும் நிலையில் தம் மனைவியைக் கட்டியணைக்க நபி (ஸல்) தடை விதித்தது இங்கு ஆழ்ந்து நோக்கத் தக்கது. எந்த வயதுக்காரரும் எல்லை மீறலாம்; போலவே ஓர் இளம் கணவர், நோன்பிருந்து கொண்டு தம் மனைவியைக் கட்டியணைத்தாலும் கட்டுப்பாடு குலையாதவராக இருக்கக் கூடும். ஆனால் இளவயதுக்காரர்கள் சுயகட்டுப்பட்டை இழந்து விடுவதற்குக் கூடுதல் சாத்தியம் உள்ளது. மேற்காணும் ஹதீஸிலிருந்து நாம் பெறவேண்டிய பாடம் என்னவெனில், சுயகட்டுப்பாட்டின் உறுதியைப் பற்றி அவரவருக்கே நன்கு தெரியும். எனவே, தத்தம் நிலையைக் கருத்தில் கொண்டு ஒரு நோன்பாளிக் கணவர் தம் மனைவியுடன் பகல் பொழுதுகளில் அண்மையாக/சேய்மையாக நடந்து கொள்ள வேண்டும். கட்டுபாட்டை மீறி நோன்பாளி மனைவியிடம் உடலுறவு கொண்டால் அதற்கான பரிகாரமும், பரிகாரம் செய்ய இயலாதவர்களுக்கான சலுகைகளும் நபிவழியில், நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தபோது அவர்களிடம் ஒருவர் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! நான் அழிந்து விட்டேன்!" என்றார். நபி(ஸல்) அவர்கள் 'உமக்கு என்ன நேர்ந்தது?' என்று கேட்டார்கள். 'நான் நோன்பு வைத்துக்கொண்டு என் மனைவியுடன் கூடிவிட்டேன்!" என்று அவர் சொன்னார். நபி(ஸல்) அவர்கள், 'விடுதலை செய்வதற்கு ஓர் அடிமை உம்மிடம் இருக்கிறாரா?' என்று கேட்டார்கள். அவர் 'இல்லை!" என்றார். 'தொடர்ந்து இரண்டு மாதம் நோன்பு நோற்க உமக்கு சக்தி இருக்கிறதா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், 'இல்லை!" என்றார். 'அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க உமக்கு சக்தியிருக்கிறதா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கும் அவர், 'இல்லை!" என்றார். நபி(ஸல்) அவர்களிடம் பேரீச்சம் பழம் நிறைந்த 'அரக்' எனும் அளவை கொண்டு வரப்பட்டது. அப்போது, நபி(ஸல்) அவர்கள் 'கேள்வி கேட்டவர் எங்கே" என்றார்கள். 'நானே!" என்று அவர் கூறினார். 'இதைப் பெற்று தர்மம் செய்வீராக!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அம்மனிதர், 'இறைத்தூதர் அவர்களே! என்னை விட ஏழையாக இருப்போருக்கா (நான் தர்மம் செய்ய வேண்டும்)? மதீனாவின் (கருங்கற்கள் நிறைந்த) இரண்டு மலைகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் என் குடும்பத்தினரை விடப் பரம ஏழைகள் யாருமில்லை!" என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் தங்களின் கடைவாய்ப் பற்கள் தெரியும் அளவுக்குச் சிரித்தார்கள்: பிறகு 'இதை உம்முடைய குடும்பத்தாருக்கே உண்ணக் கொடுத்து விடுவீராக!" என்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள். நூல்: புகாரி, 1936, 5368, 6087, 6164, 6709) (''அப்படியானால் நீர் முறித்த நோன்பிற்குப் பகரமாக ஒரு நோன்பு நோற்பீராக'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். என்ற கூடுதல் வாசகங்கள் இப்னுமாஜா, அபூதாவூத் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.)

Related

அமுத மொழிகள் 1617385212191627639

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item