செட்டிநாடு எலும்புக் குழம்பு--சமையல் குறிப்பு
செட்டிநாடு எலும்புக் குழம்பு தேவையான பொருட்கள் ஆட்டு எலும்பு - 1/2 கிலோ துவரம்பருப்பு - 100 கிராம் கத்தரிக்காய் - 150 கிராம் முரு...
https://pettagum.blogspot.com/2011/08/blog-post_4067.html
செட்டிநாடு எலும்புக் குழம்பு
தேவையான பொருட்கள்
ஆட்டு எலும்பு - 1/2 கிலோ
துவரம்பருப்பு - 100 கிராம்
கத்தரிக்காய் - 150 கிராம்
முருங்கைக் காய் - 2
சின்ன வெங்காயம் - 100 கிராம்
பெரிய வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 1/4 கிலோ
பச்சைமிளகாய் - 10
வர மிளகாய் - 10
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
பட்டை - 4
பிரியாணி இலை - 1
மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்
சாம்பார் தூள் - 2 டீஸ்பூன்
எண்ணை - தேவையான அளவு
செய்முறை
ஒரு குக்கரில் 5 டம்ளர் தண்ணீர் எடுத்துக் கொண்டு அதனுள் ஆட்டு எலும்பு,துவரம் பருப்பு இரண்டையும் போடவும்.மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்துக் கொதிக்கவைக்கவும்.கடாயில் எண்ணை ஊற்றி சீரகம்,சோம்பு,பட்டை,பிரியாணி இலை, பச்சைமிளகாய் வர மிளகாய் என அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து நன்கு வதக்கவும்.தொடர்ந்து சிறிது வெங்காயம்,தக்காளியை சேர்த்து வதக்கவும்.இப்போது கத்தரிக்காய்,முருங்கைக்காய்,உருளைக் கிழங்கு சேர்க்கவும். பிறகு சாம்பார் தூள் தூவி விடவும்.காய்கறிகள் நன்றாக வதங்கியதும் இதனுடன் வேக வைத்த ஆட்டு எலும்புக் கலவையை ஊற்றி நன்கு வேக வைக்கவும்.தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளுங்கள்.நன்றாக வெந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் கமகம செட்டிநாடு எலும்புக் குழம்பு தயார்.
Post a Comment