கொத்துக்கறி புட்டு--சமையல் குறிப்பு
கொத்துக்கறி புட்டு தேவையானவை கொத்துக்கறி - 200 கிராம் வெங்காயம் - 100 கிராம் இஞ்சி - 15 கிராம் பூண்டு - 30 பற்கள் நெய் - 20 கிராம்...
https://pettagum.blogspot.com/2011/08/blog-post_7228.html
கொத்துக்கறி புட்டு
தேவையானவை
கொத்துக்கறி - 200 கிராம்
வெங்காயம் - 100 கிராம்
இஞ்சி - 15 கிராம்
பூண்டு - 30 பற்கள்
நெய் - 20 கிராம்
மிளகாய்ப்பொடி - 1 தேக்கரண்டி
பட்டை - 4
கிராம்பு - 4
ஏலக்காய் - 2
முந்திரி பருப்பு - 2
முட்டை - 2
மல்லி இலை - சிறிதளவு
மிளகாய் - 3
மஞ்சள் பொடி, உப்பு - சிறிதளவு
செய்முறை
* கறியுடன் மிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம், அரைத்த இஞ்சி- பூண்டு, மஞ்சள், உப்பு, மிளகாய்த்தூள் போட்டு வேக வைக்கவும்.
* தண்ணீர் வற்றியதும் அம்மியில் வைத்து சொர சொரப்பாக அரைக்கவும்.
* வாணலியில் நெய் ஊற்றி வாசனை சாமான்களைப் போட்டு அதனுடன் அரைத்து வைத்திருக்கும் கறி, மல்லி இலை, கறிவேப்பிலை போட்டு நன்றாக கிளறி விடவும். அப்போதே உப்பு போட்டு அடித்து வைத்துள்ள முட்டையையும் ஊற்றி மேலும் நன்றாக கிளறி விடவும்.
* கறி வறுபட்டதும் வறுத்த முந்திரிப் பருப்பை போட்டு கிளறி இறக்கவும்.
* கொத்துக்கறி புட்டு தயார்.
குறிப்பு
* கொத்துக்கறிக்குப் பதில் கூனி மீனைப் போட்டும் புட்டு தயாரிக்கலாம்.
**************************************************************************
Post a Comment