சிக்கன் கைமா--சமையல் குறிப்பு
சிக்கன் கைமா தேவையான பொருட்கள் சிக்கன் (கொத்துக்கறி) 250 கி இஞ்சி ,பூண்டு விழுது 1 ஸ்பூன் பட்டை,லவங்கம்,கிராம்பு தலா 2 ஸ்பூன் தக்...
https://pettagum.blogspot.com/2011/08/blog-post_2599.html
சிக்கன் கைமா
தேவையான பொருட்கள்
சிக்கன் (கொத்துக்கறி) 250 கி
இஞ்சி ,பூண்டு விழுது 1 ஸ்பூன்
பட்டை,லவங்கம்,கிராம்பு தலா 2 ஸ்பூன்
தக்காளி - 50 கி
வொங்காயம் 50 கி
பச்சை மிளகாய் - 4
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மல்லித்தூள் - 1 /2 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 /2ஸ்பூன்
கரம் மசாலா - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி - தேவையான அளவு
செய்முறை
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை,லவங்கம், கிராம்பு போட்டு தாளித்து அதில் வெங்காயம்,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.பின் இதில் பச்சைமிளகாய், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். பின் அதில் சிக்கனை சேர்த்து நன்கு வதக்கவும்.அதன் பிறகு மல்லித்தூள்,மிளகாய்த்தூள், மஞ்சள்தூள்,காரம் மசாலா மற்றும் தேவையான உப்பு போட்டு பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கி சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு வேக விட்டு இறக்கினால் மிகவும் சுவையான சிக்கன் கைமா ரெடி.
குறிப்பு:
சிக்கனுடன் காளான் சேர்த்து சமைத்தால் இன்னும் சுவையாக இருக்கும்.
Post a Comment