வெஜிடபிள் சூப்--உடலுக்கு வலிவு தரும் சூப்
வெஜிடபிள் சூப் தேவையான பொருட்கள் வெங்காயம் (நறுக்கியது) - 1 கப் பூண்டு - 1 டீஸ்பூன் கோஸ், கேரட், பீன்ஸ், காலிபிளவர் (நறுக்கியது) -...
https://pettagum.blogspot.com/2011/08/blog-post_5678.html
வெஜிடபிள் சூப்
தேவையான பொருட்கள்
வெங்காயம் (நறுக்கியது) - 1 கப்
பூண்டு - 1 டீஸ்பூன்
கோஸ், கேரட், பீன்ஸ், காலிபிளவர் (நறுக்கியது) - ஒரு கப்
பச்சைப் பட்டாணி - 2 டேபிள் ஸ்பூன்
கறுப்பு மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு எண்ணை - 2 டீஸ்பூன்
வெண்ணை - 1 டேபிள் ஸ்பூன்
ஒயிட் சாஸ் தயாரிக்க
பால் - 1 கப்
மைதாமாவு - 2 டீஸ்பூன்
சோளமாவு - 1 டீஸ்பூன்
வெண்ணை - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை
சிறிய பிரஷர் குக்கரில் 1 டேபிள் ஸ்பூன் வெண்ணை
போட்டு பொடியாக அரிந்த வெங்காயம்,பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.பிறகு பொடியாக அரிந்த மற்ற காய்கள்,பச்சைப்
பட்டாணி சேர்த்து மேலும் சிறிது வதக்கி 5 கப் தண்ணீர்
ஊற்றி கறுப்பு மிளகுத்தூள்,உப்பு சேர்த்து நன்கு கலந்து
குக்கரை மூடி கொதிக்கவிட்டு 2 விசில் விட்டதும் அணைக்கவும்.
விசில் அடங்கியவுடன் குக்கரை திறந்து வெந்த காய்களுடன் கூடிய தண்ணீரை ஒரு உலோக வடிகட்டியில் போட்டு வடிகட்டவும்.பிறகு உலோக வடிகட்டியில் தங்கியுள்ள காய்களை ஒரு மிக்சியில் 1 கப் தண்ணீருடன் நன்கு அரைத்து மீண்டும்
உலோக வடிகட்டியில் போட்டு கசக்கி வடிகட்டவும்.குக்கரில் 2 டேபிள் ஸ்பூன் வெண்ணை போட்டு மைதாமாவு சேர்த்து மிதமான தீயில் சிறிது வதக்கவும்.சோள மாவை 2 டேபிள் ஸ்பூன் நீரில் நன்கு கரைத்து வதங்கும் மைதாமாவுடன் சேர்த்து மிதமான சூட்டுடன் கூடிய பாலை ஊற்றி கட்டி தட்டாமல் நன்கு கலந்து ஒரு கொதி கொதிக்கவிடவும்.இதுவே ஒயிட் சாஸ் ஆகும்.
ஒயிட் சாசுடன் காய்கறிகளை வேகவிட்டு வடிகட்டிய
நீரைச் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கினால் சூடான சூப் ரெடி.
Post a Comment