சிக்கன் சூப்--உடலுக்கு வலிவு தரும் சூப்
சிக்கன் சூப் தேவையான பொருட்கள் சிக்கன் துண்டு - 4 பெரியது எலும்புடன் பேபி கார்ன் - 100 g மிளகு தூள் - 1 ஸ்பூன் சோயாசாஸ் - 1/2 ஸ்ப...
https://pettagum.blogspot.com/2011/08/blog-post_8984.html
சிக்கன் சூப்
தேவையான பொருட்கள்
சிக்கன் துண்டு - 4 பெரியது எலும்புடன்
பேபி கார்ன் - 100 g
மிளகு தூள் - 1 ஸ்பூன்
சோயாசாஸ் - 1/2 ஸ்பூன்
முட்டை வெள்ளை கரு - 1
பால் - 1 கப்
உப்பு தேவையான அளவு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 ஸ்பூன்
பட்டர் - தேவையான அளவு
செய்முறை
சிக்கனில் நன்கு கழுவி 3 கப் தண்ணீர் சேர்த்து உப்பு,சோயா சாஸ் சேர்த்து வேக வைக்கவும்.வெந்தததும் தண்ணீரை வடிகட்டி தனியாக வைக்கவும்.சிக்கனில் உள்ள துண்டுகளை தனியாக பிரித்து எடுத்து உதிர்த்து கொள்ளவும்.ஒரு வாயகன்ற பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் எண்ணை 1 ஸ்பூன் பட்டர் சேர்த்து சிக்கனை போட்டு மிளகு தூள் உப்பு சேர்த்து வதக்கி சிக்கன் வடித்த தண்ணீரை ஊற்றி கானையும் சேர்த்து நன்கு வேக விடவும்.தனியாக பால்,தண்ணீர் சேர்த்து காய்ச்சி சேர்க்கவும்.
கடைசியாக முட்டை வெள்ளை கருவை நன்கு நுரை பொங்க அடித்து ஒரு கையால் ஊற்றி கொண்டே மறு கையால் கிளறவும்.தேவைக்கு மிளகு தூள்,உப்பு சேர்க்கவும்.
சுவையான சிக்கன் சூப் ரெடி.
Post a Comment