`வெஜிடபிள்' கட்லெட்---சமையல் குறிப்பு
`வெஜிடபிள்' கட்லெட் தேவையான பொருட்கள் உருளைக்கிழங்கு - 4 கேரட் - 1 வெங்காயம் - 2 பச்சைப் பட்டாணி - 100 கிராம் அம்ச்சூர் பொடி ...
https://pettagum.blogspot.com/2011/08/blog-post_2510.html
`வெஜிடபிள்' கட்லெட்
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு - 4
கேரட் - 1
வெங்காயம் - 2
பச்சைப் பட்டாணி - 100 கிராம்
அம்ச்சூர் பொடி - 1/4 டீஸ்பூன்
சிவப்பு, மிளகாய்த் தூள் - 1/4 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1/4 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - 1/4 டீஸ்பூன்
தனியாத் தூள் - 1/4 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 1/2 கப்
உப்பு - 11/2 டீஸ்பூன்
பிரட் துகள்கள் - 4 டேபிள் ஸ்பூன்
சோளமாவு - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை
* உருளைக் கிழங்கை குக்கரில் வேக வைத்து தோலுரித்து நன்கு மசிக்கவும்.
* வாணலியில் 8 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி இஞ்சி-பூண்டு விழுது, வெங்காயம், அனைத்து தூள்கள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
* பிறகு துருவிய கேரட், பச்சைப் பட்டாணி சேர்த்து எல்லாம் நன்கு வதங்கும் வரை வதக்கவும்.
* இப்போது மசித்த உருளை சேர்த்து எல்லாம் ஒன்று சேர திரண்டு வரும்வரை வதக்கவும்.
* ஆறியவுடன் இவற்றை விருப்பமான வடிவில் உருண்டை அல்லது இதய வடிவில் சிறு சிறு கட்லெட்களாக வடிவமைத்து, தண்ணீர் கலந்த சோளமாவில் தோய்த்து பிரட் துகள்களில் புரட்டி வைக்கவும்.
* தோசைக் கல் அல்லது நான்ஸ்டிக் தவாவில் நடுவில் மீதி எண்ணெய் முழுவதையும் ஊற்றி மிதமான தீயில் சுடவைத்து கட்லெட்களை எண்ணெயில் போட்டு திருப்பி இருபுறமும் பொன்மஞ்சள் நிறமாக வரும்வரை லேசாக வறுத்து எடுக்கவும்.
குறிப்பு
* 4 பிரட் துண்டுகளை எடுத்து பிரட் துகள்கள் செய்ய உபயோகப்படுத்தலாம்.
* மேற்சொன்ன காய்களுடன் துருவிய பீட்ரூட் அல்லது துருவிய பன்னீர் சேர்த்து கட்லெட் செய்தால் வேறுபட்ட சுவையுடன் இருக்கும்.
***********************************************************************************
Post a Comment