தங்க ஒளி தருதே... தக்காளி பழமே! பழகிய பொருள்... அழகிய முகம்!

தங்க ஒளி தருதே... தக்காளி பழமே! சாம்பார், சட்னி, தொக்கு என சமையல் வெரைட்டிகளில் கைகொடுக்கும் ‘' தக்காளி', ஒரு பியூட்டீஷியனும் கூட!...

தங்க ஒளி தருதே... தக்காளி பழமே! சாம்பார், சட்னி, தொக்கு என சமையல் வெரைட்டிகளில் கைகொடுக்கும் ‘' தக்காளி', ஒரு பியூட்டீஷியனும் கூட! குறைந்த செலவில், நிறைந்த அழகை வாரித் தரவல்லது தக்காளி! ஒட்டிப்போன கன்னங்களை 'புஸ்புஸ்' ஆக்குகிறது இந்தத் தக்காளி கூழ். தோல் மற்றும் விதை நீக்கிய ஒரு தக்காளியை கூழாக்குங்கள். ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயை எடுங்கள். முதலில், முகத்தில் ஆலிவ் எண்ணெயைத் தடவுங்கள். அதன் மேல் இந்தத் தக்காளி கூழைப் பூசி, 10 நிமிடம் கழித்து . வாரம் இரு முறை இப்படிச் செய்து வர, ‘குஷ்பு’ கன்னங்கள் கிடைக்கும். நாற்பது வயதை நெருங்கும்போதே முகத்தில் சில வரிகளும் நம் முகவரி தேடி வந்துவிடும். அந்த முதுமை வரிகளை ஓட ஓட விரட்டும் சக்தி தக்காளியில் உண்டு. தக்காளி விழுது, பாதாம் விழுது... தலா அரை டீஸ்பூன் எடுத்து, இரண்டையும் கலந்து கொள்ளுங்கள். இதை முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இதைச் செய்துவர, சுருக்கம் இருந்த சுவடுகூடத் தெரியாது. கண்ணாடியைப் பார்க்கவே பிடிக்காமல், கரும்புள்ளியும் கருந்திட்டுகளும் உங்கள் முகத்தை ஆக்கிரமித்துக் கொண்டனவா? ரிலாக்ஸ் ப்ளீஸ்... உங்கள் முகத்தை கண்ணாடி போல் மாற்றிக் காட்டுகிறது, இந்தத் தக்காளி பேஸ்ட். உருளைக்கிழங்கு துருவல் சாறு & 1 டீஸ்பூன், தக்காளி விழுது & அரை டீஸ்பூன் இரண்டையும் கலந்து கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை கழுத்திலும் முகத்திலும் தடவி, 5 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். தொடர்ந்து இதைச் செய்து வந்தால், சில வாரங்களிலேயே வித்தியாசத்தை உணர முடியும். ரொம்ப நாட்களாக முகத்தை சரிவர பராமரிக்காதவர்களின் முகத்திலுள்ள செல்கள் இறந்துபோய் முகம் பொலிவிழந்து விடும். அவர்களுக்கான ஸ்பெஷல் சிகிச்சை இந்த தக்காளி ஃபேஷியல் ஸ்க்ரப். ஒரு தக்காளியின் சாறுடன் கால் டீஸ்பூன் ரவையைக் கலந்து கொள் ளுங்கள். இதை நன்றாக முகத்தில் தேய்த்து கழுவுங்கள். தொடர்ந்து இதைச் செய்து வந்தால், முகம் சூரியனாகப் பிரகாசிக்கும். சிலருக்கு முகத்தில் மிருதுத் தன்மை மாறி, முரடு தட்டிப் போய்விடும். அவர்களுக்கான டிப்ஸ் இது. ஒரு தக்காளியை கூழாக்குங்கள். இதனுடன் அரை டீஸ்பூன் தயிரைக் கலந்துகொள்ளுங்கள். இதை முகத்துக்குப் பூசி, 5 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். முகம் மிருதுவாகி, தங்கம் போல் ஒளிவீசும். கண்ணுக்குக் கீழ் கருவளையம் விழுந்து சோக ராணியாக வலம் வருகிற உங்களை உற்சாக தேவதையாக்குவதில் தக்காளிக்கு நிகர் தக்காளிதான். ஒரு வெள்ளரித் துண்டு, அரை தக்காளி இரண்டையும் அரைத்துக்கொள்ளுங்கள். இமைகளின்மேல் இந்தக் கலவையைப் பூசி, 2 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். ஓரிரு வாரங்கள் இதைச் செய்து வந்தாலே, கருவளையம் காணாமல் போவதுடன் கண்களும் பளிச்சென்று இருக்கும். கழுத்தில் கறுப்புக் கயிறு கட்டியதுபோல் கருவளையம் இருக்கிறதா? கவலை வேண்டாம்! இருக்கவே இருக்கிறது தக்காளி பேஸ்ட். தக்காளி சாறு & அரை டீஸ்பூன், தேன் & அரை டீஸ்பூன், சமையல் சோடா & ஒரு சிட்டிகை... இந்த மூன்றையும் கலந்து கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை கருவளையத்தின் மேல் பூசி, 10 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். வாரம் மூன்று முறை இப்படிச் செய்து வாருங்களேன். சங்குக் கழுத்துக்கு அர்த்தமே உங்கள் கழுத்துதான் என்றாகி விடும்! கே & ப ‘‘என் நெற்றியில் பொரிப்பொரியாக இருக்கிறது. மஞ்சள், வியர்க்குரு பவுடர் என்று எல்லாம் போட்டுப் பார்த்துவிட்டேன். கொஞ்சமும் குறையவில்லை. இப்போது கன்னங்களிலும் அது பரவிவிட்டது. இதைப் போக்க வழி சொல்லுங்களேன்...’’ ‘‘முதலில், இது ஏன் ஏற்படுகிறதுஎன்று சொல்கிறேன். தலை வாரும்போது நெற்றியில் சீப்பு படுதல், தலையைத் துவட்டும்போது ஏற்படும் அழுத்தம், பொடுகு, முகத்தில் அதிக முடி இருப்பது... இந்தக் காரணங்களால் நெற்றியில் முள் போன்று பொரிப்பொரியாகத் தோன்றும். -இதற்கு நிரந்தரமான தீர்வு உண்டு. ரோஜா இதழ்களை சந்தன மனையில் வைத்து இழையுங் கள். அதே அளவு சந்தனம் சேர்த்துக் குழையுங்கள். பொரி இருக்கும் இடங்களில் இதைப் போட்டு, பத்து நிமிடம் கழித்துக் கழுவுங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இதைச் செய்துவந்தால், பொரிகள் மறையத் தொடங்கும். இதோடு, கீழே உள்ள சிகிச்சையையும் தொடர்ந்து செய்யுங்கள். கசகசா & 2 டீஸ்பூனுடன், 10 கருந்துளசி இலைகளை சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளுங்கள். கொதிநீரில் வெட்டிவேரை போட்டு வையுங்கள். மெல்லிய ஆர்கண்டி துணியை ‘ஜில்’ தண்ணீரில் நனைத்து, பிழிந்து, நெற்றியில் வைத்து, அதன்மேல் இந்த விழுதை ‘பத்து’ போல் போடுங்கள். 15 நிமிடம் கழித்து வெட்டிவேர் தண்ணீரால் கழுவுங்கள். இப்படி, வாரம் ஒரு முறை செய்யுங்கள். இதில் சேர்க்கப்பட்டுள்ள கசகசா, பொரிகளை அடியோடு போக்குவதுடன், முகத்தையும் வழுவழுப்பாக்கும். துளசி, தோலின் முரட்டுத் தன்மையை நீக்கி மிருதுவாக்கும். இந்த சிகிச்சைகளை ஒரு மாதம் தொடர்ந்து செய்து வந்தாலே, துருத்தி நிற்கும் பொரிகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். இந்த சிகிச்சையின்போது முகத்துக்கு ‘க்ரீம்Õ போடு வதைத் தவிர்ப்பது நல்லது. கூடுதல் டிப்ஸ்: கூந்தலுக்கு இறுக்கமாக ‘க்ளிப்’ போடாதீர்கள். சுத்தமான சீப்பால் நெற்றியில் படாதவாறு வாரிக் கொள்ளுங்கள். குளிர்ந்த தண்ணீரால் மட்டுமே முகம் கழுவுங்கள்.’’

Related

மூட்டு வலிக்கு எளிய மருத்துவம்,---ஹெல்த் ஸ்பெஷல்

*குப்பைக் கீரை, முடக்கத்தான் கீரை, சீரகம் மூன்றையும் சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்தால் மூட்டு வலிகள் குணமாகும். *குப்பை கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் அதிகப்படியான உடல் எடை குறையும். *சி...

பல்லைப் பாதுகாக்க சில டிப்ஸ்--ஹெல்த் ஸ்பெஷல்

சிறு வயதில் இருந்தே பல்லை ஆரோக்யமாக வைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். பிரச்னை வந்து, வலிக்க ஆரம்பித்த பின்னர் தான் மருத்துவரைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணமே பலருக்கும் உள்ளது. குழந்தைகளுக்கு பல் முளைக...

வாய்ப்புண். இது வந்து விட்டால் ...? --இய‌ற்கை வைத்தியம்

* வாய்ப்புண். இது வந்து விட்டால் ஒன்றும் சாப்பிட முடியாது. ஏன்? சிலருக்கு நாக்கைச் சுழற்றி பேசக்கூட முடியாது. ஒரு துண்டு கொப்பரை தேங்காய், ஒரு ஸ்பூன் கசகசா, இரண்டையும் ஒன்றாக சேர்த்தரைத்து, ஒரு தம்ளர்...

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

Wednesday - Nov 27, 2024 8:22:20 AM

No. of Posts

8665 Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

16,087,207

Advertisement

Contributors

Popular PostsBlog Archive

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item