தோசை சாண்ட்விச் - சமையல் குறிப்பு
தேவையானவை: தோசை மாவு - 2 கப், உருளைக்கிழங்கு - 2, நறுக்கி, வேக வைத்த காய்கறிகள் (கலந்தது) - ஒரு கப், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், துருவிய ...
https://pettagum.blogspot.com/2011/07/blog-post_5225.html
தேவையானவை: தோசை மாவு - 2 கப், உருளைக்கிழங்கு - 2, நறுக்கி, வேக வைத்த காய்கறிகள் (கலந்தது) - ஒரு கப், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், துருவிய பனீர் - அரை கப், கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வேக வைத்த உருளைக்கிழங்கை நன்கு மசித்து... காய்கறிகள், மிளகாய்த்தூள், கொத்தமல்லி, துருவிய பனீர், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். தோசை மாவை, சிறுசிறு தோசைகளாக வார்த்துக் கொள்ளவும்.
ஒரு தோசையின் மேல், காய்கறிக் கலவையை சிறிதளவு வைத்து, மற்றொரு தோசையால் மூடி, சாண்ட்விச் போல செய்ய... தோசை சாண்ட்விச் ரெடி! குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.
---------------------------------------------------------------------
Post a Comment