நெத்திலி வறுவல்--சமையல் குறிப்புகள்
நெத்திலி வறுவல் தேவையான பொருட்கள் நெத்திலி மீன் - 1/2 கிலோ மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் தனியாத் தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்...
https://pettagum.blogspot.com/2011/07/blog-post_4778.html
நெத்திலி வறுவல்
தேவையான பொருட்கள்
நெத்திலி மீன் - 1/2 கிலோ
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
தனியாத் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
பொட்டுக் கடலைப்பொடி - 1 கையளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு
செய்முறை
* நெத்திலி மீனை தலை, குடல் எடுத்துவிட்டு நன்கு அலசி சுத்தம் செய்யவும்.
* தனியாத் தூள், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பேஸ்ட் பதத்தில் ரெடி செய்து வைத்துக் கொள்ளவும்.
* நெத்திலி மீனை, கரைத்து வைத்துள்ள பேஸ்ட்டில் தடவி பொட்டுக் கடலைத் தூளில் புரட்டி எடுக்கவும்.
* மீன் சிறிது நேரம் ஊறிய பிறகு, கடாயில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் நெத்திலி மீன்களை எண்ணெயில் போட்டு உதிரி உதிரியாகப் பொரித்தெடுக்கவும்.
* பொன்னிறமாக மொறுமொறுவென்று வந்ததும் தட்டில் போட்டுப் பரிமாறவும்.
குறிப்பு
கெட்டியான பதத்தில் சிக்கன் முட்டை மிளகு சாப்ஸ் செய்து குழம்பு போல ருசிக்கலாம்.
Post a Comment