கறிவேப்பிலை சாதம்--சமையல் குறிப்பு

ஒரேமாதிரியான சாப்பாட்டை சாப்பிட்டு சாப்பிட்டு போரடிக்குதா...இதோ ஒங்களுக்காகதான் இந்த கறிவேப்பிலை சாதம்! கறிவேப்பிலையில் நிறைய இரும்புச்சத்த...

ஒரேமாதிரியான சாப்பாட்டை சாப்பிட்டு சாப்பிட்டு போரடிக்குதா...இதோ ஒங்களுக்காகதான் இந்த கறிவேப்பிலை சாதம்! கறிவேப்பிலையில் நிறைய இரும்புச்சத்து இருப்பதால் உடலுக்கு ரொம்ப நல்லது. கறிவேப்பிலையை உணவில் நிறைய சேர்த்துக்கொண்டால் தலைமுடி நன்கு கருகருவென்று வளரும்... கறிவேப்பிலையை தனியாக சாப்பிட முடியலையென்றால் அடிக்கடி கறிவேப்பிலை சாதம் செஞ்சு சாப்பிடுங்க.... சுவையுடன் நல்ல பலனும் கிடைக்கும்! தேவையான பொருட்கள்: சாதம் - 2 கப் கறிவேப்பிலை - ஒரு கப் நல்லெண்ணை - 1 டீ ஸ்பூன் கடலைப்பருப்பு - 1/2 டீ ஸ்பூன் உளுத்தம்பருப்பு - 1/2 டீ ஸ்பூன் கடுகு - 1/2 டீ ஸ்பூன் பெரிய வெங்காயம் - 1 மிளகுத்தூள் - 1/2 டீ ஸ்பூன் வர மிளகாய் - 3 பெருங்காயம் - 1 சிட்டிகை முந்திரி - 5 எலுமிச்சை - 1/4 பழம் நெய் - 1 டீ ஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: * சிறிதளவு நெய்யில் கறிவேப்பிலையை மொறுகலாக வறுத்து, மைய பொடித்துக்கொள்ளவும். * பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். * அரிசியை சாதமாக வடித்து உதிரி உதிரியாக ஒரு அகன்ற பாத்திரத்தில் வைக்கவும். * அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு போட்டு வெடித்ததும், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு போட்டு சிவந்ததும், வர மிளகாய், ஒரு கொத்து கறிவேப்பிலைப் போட்டு தாளிக்கவும். * பிறகு நறுக்கிய வெங்காயம் பெருங்காயத்தூள் சேர்த்து சிவக்க வதக்கவும். * பிறகு பொடித்த கறிவேப்பிலையைப் போட்டு, உப்பு சேர்த்து வதக்கவும். * அதனுடன் எலுமிச்சம்பழத்தை பிழிந்து சேர்க்கவும். * பின்னர் அதனுடன் மிளகுத்தூள், நெய்யில் வறுத்த முந்திரியை சேர்த்து கிளறவும். * பிறகு ஆற வைத்த உதிரியாக உள்ள சாதத்தைச் சேர்த்து சாதம் குழையாமல் நன்றாகக் கிளறி அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறவும். குறிப்பு: * இதில் சிறிது இஞ்சி துருவலைச் சேர்த்து வதக்கினால் இன்னும் வாசனையாக இருக்கும். * முந்திரிக்குப் பதிலாக, வறுத்த நிலக்கடலை, வறுத்த பொட்டுக்கடலை போன்றவையும் சேர்க்கலாம்.

Related

சமையல் குறிப்புகள் 8676483420859975847

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item