முஸ்லிம்களிடம் பாடம் கற்க வேண்டும்: யோகி ஸ்ரீ ராமானந்த குரு

முஸ்லிம்களிடம் பாடம் கற்க வேண்டும்: யோகி ஸ்ரீ ராமானந்த குரு பல ஆலயங்களில் சிறப்பு தரிசனம் என்ற பெயரில் பணம் வசூலிக்கப்படுகிறது பெரிய பணக்க...

முஸ்லிம்களிடம் பாடம் கற்க வேண்டும்: யோகி ஸ்ரீ ராமானந்த குரு பல ஆலயங்களில் சிறப்பு தரிசனம் என்ற பெயரில் பணம் வசூலிக்கப்படுகிறது பெரிய பணக்காரர்களுக்கும் பதவியில் இருப்பவர்களுக்கும் முன்வரிசை தரப்படுகிறது ஏழைகள் பின்னுக்கு தள்ளப்படுகிறார்கள் ஆண்டவனின் சன்நிதானத்தில் ஏற்றத்தாழ்வுகள் காட்டப்படலாமா? இது சரிதானா? என்ற கொதிப்பு பலருக்கு உண்டு இந்த மாதிரியான செயல்களை சுட்டிக்காட்டியே பலர் இந்து மதம் என்பதே மனிதர்களை தரம்பிரித்து உயர்வு தாழ்வு கற்பித்து கீழே தள்ளுகிறது என விஷமப் பிரச்சாரம் செய்கிறார்கள் இந்து சமயத்தில் கூறப்பட்டுள்ள வேற்றுமைகள் ஏற்றத் தாழ்வுகள் ஆத்மாவின் தன்மையை பொறுத்ததே தவிர உடலை பொறுத்தது அல்ல. உடல் நிலையில்லாதது அழியக் கூடியது என்றே நமது மதம் கூறுகிறது. உடலை சார்ந்த நிறம், சாதி, குடும்ப பாரம்பரியம், செல்வ நிலை ஆகியவைகளுக்கு மதிப்பளிப்பதை நமது மத சாஸ்திரங்கள் ஏற்றுக் கொள்வதே கிடையாது. ஒருவனது திறமைக்கு பாராட்டும் பதக்கமும் கிடைக்கும் போது அவன் எந்த சாதியை சேர்ந்தவன் எத்தகைய செல்வாக்கு உடையவன் என்ற யாரும் பார்ப்பது கிடையாது. அவனது தனிதிறமைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இது சமூக வாழ்க்கைக்கு மட்டுமல்ல ஆன்மீகத்திற்கும் பொருந்தும். அரசியல் தலைவர்களுக்கு முதலிடம் கொடுப்பதும் நிறைய பணம் கிட்டியவனுக்கு சிறப்பு தரிசனம் வழங்குவதும் ஆண்டவன் சந்நிதானத்தை அவமானம் படுத்துவதாகும். கடவுள் முன்னால் கோவணம் கட்டியவனும் கோமகனும ஒன்று தான். சவுதி அரேபியாவிலுள்ள மெக்கா முஸ்லிம்களுக்கு புனித ஷேத்திரம் என்பது நமக்கு தெரியும். மெக்காவிலுள்ள பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நேரத்தில் சவுதி அரேபிய மன்னரே தாமதமாக வந்தால் கூட அவருக்கு கடைசி இடம் தான் கொடுக்கப்படும் ஒரு சாதாரண குடிமகன் முன் வரிசையிலும் அரசன் பின் வரிசையிலும் கடவுள் முன்னால் நிற்க வேண்டும் என்ற கொள்கை யாரால் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும் அதை எந்த மக்கள் பின்பற்றினாலும் அவர்கள் பாராட்டுக்குரியவர்களே ஆவார்கள். இஸ்லாம் மதத்திலுள்ள இந்த சிறப்பு தன்மை நமது வழிபாட்டு இடங்களிலும் பின்பற்றப்பட வேண்டும்.

Related

அமுத மொழிகள் 2031262921571826475

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item