பித்த வெடிப்பு நீங்கி பாதம் அழகுபெறும்.....சில டிப்ஸ்..
பித்த வெடிப்பு சிலருக்கு பாதங்களில் வெடிப்புகள் தோன்றி பாதங்களின் அழகைக் கெடுக்கும். மேலும் சிலருக்கு நடக்கும்போது வலியை உண்டாக்கும். இந...

https://pettagum.blogspot.com/2011/07/blog-post_1725.html
பித்த வெடிப்பு
சிலருக்கு பாதங்களில் வெடிப்புகள் தோன்றி பாதங்களின் அழகைக் கெடுக்கும். மேலும் சிலருக்கு நடக்கும்போது வலியை உண்டாக்கும்.
இந்த பிரச்சனை உள்ளவர்கள்
தேவதாரம், ராமிச்சம், எலுமிச்சை தோல் உலர்ந்தது, நெல்லி வற்றல், சிறு பயறு, கருஞ்சீரகம், பவளப்புற்று, மாசிக்காய் இவற்றை நாட்டு மருந்துக் கடைகளில் வாங்கி சம அளவு எடுத்து இடித்து பொடியாக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
இதில் சிறிதளவு எடுத்து நீர்விட்டு கலக்கி சிறிது நேரம் கொதிக்க வைத்து, குழம்பு பக்குவத்தில் வந்ததும் எடுத்து ஆறவைத்து பாதங்களில் பூசிவரவேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் பித்த வெடிப்புகள் நீங்கி பாதம் அழகுபெறும். உப்பு நீரில் கால்களை கழுவி வந்தால் பாத வெடிப்புகள் மாறும்.
Post a Comment