நாபித் தோழர், தோழியர் பற்றிய வினா விடைகள் நாயகம் (ஸல்) அவர்களைத் தெரிந்து கொள்வதிலும், அவர்களின் தோழமையைப் பெற்றதிலும் நபித்தோழர்களின் தனித...
நாபித் தோழர், தோழியர் பற்றிய வினா விடைகள்
நாயகம் (ஸல்) அவர்களைத் தெரிந்து கொள்வதிலும், அவர்களின் தோழமையைப் பெற்றதிலும் நபித்தோழர்களின் தனித்தன்மையும் சிறப்பும் வரலாற்றில் தனியிடம் பெற்று விளங்குகிறது. அவர்கள் நபி பெருமானார் அவர்களின் பிரச்சாரப்பணியில் உறுதுணையாக இருந்தனர். இஸ்லாத்திற்காக தன் இன்னுயிரையும், செல்வத்தையம் தியாகம் செய்தனர். இறைச் செய்திகள் வருவதை கண்கூடாகக் கண்டு, மார்க்க நெறிகளைப் பேணிப்பாதுகாத்து வாழ்ந்தனர். அவர்களின் ஒரே குறிக்கோள் அல்லாஹ்வின் ஏகத்துவக் கொள்கையான ‘லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்’ என்ற கலிமாவை மேலோங்கச் செய்வதாகும்.
1. ‘உம்முஹாத்துல் முஃமினீன்’(இறைநம்பிக்கையாளர்களின் அன்னையர்)களில் ஒருவர் ‘ஸவ்வாமா- கவ்வாமா’ (மிக அதிகமாக நோன்பு நோற்பவர், நின்று தொழுபவர்) எனச் சிறப்பிக்கப்பட்டார். அவர் யார்?
ஹஃப்ஸா பின்த் உமர் (ரலி)
2. யாருடைய மரணத்திற்காக அல்லாஹ்வின் அர்ஷ் நடுங்கியது ?
ஸஃது இப்னு மஆத் (ரலி)
3. அஸ்மா பின்த் அபீ பக்ர் (ரலி) அவர்களின் கணவர் யார்?
அஸ்ஸுபைர் இப்னுல்; அவ்வாம் (ரலி)
4. கிஸ்ரா மன்னரின் முத்துப் பதித்த காப்புகளை அணியும் பேறு பெற்றவர் யார்?
ஸுராகத் இப்னு மாலிக் (ரலி). ( இவரே நூறு சிவப்பு ஒட்டகங்களைப் பரிசாக்பெறும் ஆசையில் ஹிஜ்ரத்தின் போது நபிகளைத் துரத்தி வந்தவர். அவர்களை எதிரிகளிடம் காட்டிக் கொடுக்கமாட்டேன் என வாக்குறுதி அளித்ததற்குப் பரிசாக பாரசீகத்தை வெல்லும் போது அந்த மன்னரின் காப்புகள் பரிசாக அணிவிக்கப்;படும் என முன்னறிவிப்புச் செய்யப்பட்டார். அவை பிறகாலத்தில அந்நாட்டை வென்றபோது வழங்கப்பட்டன.)
5. நாயகத்தின் ‘ஹவாரிய்யூன்கள்’ என்னும் தோழர்களில் ஒருவர் எனந் கூறப்பட்டவர் யார்?
அஸ்ஸுபைர் இப்னுல்; அவ்வாம் (ரலி)
6. பெருமானார் (ஸல்) காலத்தில் இருபதிற்கும் குறைவான இளைஞர் ஒருவர் படைத்தளபதியாக நியமிக்கப்பட்டார்? அவர் யார்?
உஸாமா இப்னு ஸைத் ரலி)
7.. உத்மான் இப்னு மள்வூன் (ரலி) யார்?
நபி (ஸல்) அவர்களின் பால் குடி சகோதரர். உமர் (ரலி) மாமா மகன், மனைவி ஸைனப் (ரலி) யின் கணவர். முஹாஜிர்களில் மதீனாவில் முதன் முதலாக மரணித்தவர்.
9.”அபஸ வத்தவல்லா அன் ஜாஅஹுல் அஃமா” என்னும் 80-வது அத்தியாயம் யார் விசயமாக அருளப்பட்டது? அந்தகரான அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் (ரலி) விசயமாக.
10.. உஹதுப் போர்களத்தில் பெருமானார் (ஸல்) அவர்களை அரணாகக் காத்து நின்றோரில் ஒரு பெண்மணியும் இருந்தார். அவர் யார்?
‘உம்மு உமாரா’ என்னும் நுஸைபா பின்த் கஃபில் மாஸினிய்யா (ரலி)
11. ‘தாத்துந் நிதாகைன்’ (இரு அரைக்கச்சையுடையவர்) என நபியால் போற்றப்பட்டவர் யார்?
அஸ்மா பின’த் அபீ பக்ர் (ரலி)
12. தன் கணவர் விசயமாக நபிகளாரிடம் முறையிட்ட பெண்மணி யார்?
கவ்லா பின்த் தஃலபா (ரலி) (அல் குர்ஆன் 58:1)
13. ‘உம்முல் மஸாகீன்’ ( ஏழைகளின் அன்னை) என அழைக்கப்பட்டவர் யார்?
‘உம்முல் முஃமினீன் ஸைனப் பின்த் ஜஹ்ஷ; (ரலி) ஆவார்.
14. பெருமானாரின் முஅத்தின் (முதல் முஅத்தின்) யார்?
பிலால் இப்னு ரபாஹ் (ரலி)
15. நபி(ஸல்) மதீனா சென்றதும் யாருடைய வீட்டில் தங்கினார்கள்?
ஆபூ அய்யூபில் அன்ஸாரி (ரலி) வீட்டில்.
16. ‘முஸ்தஜாபுத்தஃவா’ ‘துஆ (பிரார்த்தனைகள்) அங்கீகரிக்கப்படுபவர்’ என சிறப்பிக்கப்பட்ட நபித் தோழர் யார்?
ஸஃது இப்னு அபீ வக்காஸ் (ரலி)
17. ஹிஜ்ரத்தின் போது வழியில் எந்த பெண்மணியின் இல்லத்தில் பால் அருந்தி களைப்பாறிச் சென்றார்கள்?
உம்மு மஃபத் (ரலி)அவர்கள், (‘ஷமாயிலுந்நபி)’ பெருமானார் தோற்றத்தைப்பற்றி தம் கணவரிடம் மிக அற்புதமாக வர்ணித்துக் கூறியவர். அவர்களின் சொல்லழகு அரபு இலக்கத்தில் தனி இடம் பெற்றவளங்குகிறது.
18.பெருமானாரின் எந்த மனைவியர் “தம் சமூகத்தரிடம் தனி மதிப்பும் மரியாதையும் பெற்றவர்” ?
உம்முல் முஃமினீன் ஜுவைரிய்யா பின்த் ஹாரித் (ரலி)
19. ஜின்னால் கொலை செயயப்பட்ட நபித் தோழர் யார்?
ஸஃது இப்னு உப்பாதா (ரலி)
20. எந்த நபித்தோழரைப் பார்த்து வானவர்களும் நாணமுறுவார்கள்?
உத்மான் இப்னு அஃப்பான் (ரலி)
21. ‘ஸைய்யிதுல் குர்ராஃ’ காரிகளின் தலைவர் என சிறப்பிக் கப்படுபவர் யார்?
உபை இப்னு கஃபு (ரலி)
22. யாரிடம் குர்ஆனின் முதல் பிரதி (அல் முஸஹஃபுல் அவ்வல்) ஒப்படைக்கப்பட்டது?
ஹஃப்ஸா பின்த் உமர் (ரலி)
23. யாரிடம் குர்ஆனை ஒன்று திரட்டும் பணியை முதற் கலீஃபா அபூபக்கர் (ரலி) ஒப்படைத்தார்கள்?
ஸைத் இப்னு தாபித் (ரலி) . (இவரே பல மொழிகளைத் தெரிந்து மொழிபெயர்ப்பும் செய்தவர்)
24. அன்னை ஆயிஷா(ரலி) விசயத்தில் (இஃப்கு )அவதூறாகப் பேசப்பட்ட நபித் தொழர் யார்?
ஸஃப்வான் இப்னுல் முஅத்தல் (ரலி). (பின்னர் இவர்கள் நிரபராதிகள் என இறைச்செய்தி வந்து அவதூறு கூறியோருக்கு கசையடி வழங்கப்படது)
25. துந்நூரைன் ( இரு ஒளிகளைப் பெற்றவர்) எனப் புகழப்பட்டவர் யார்?
உத்மான் இப்னு அஃப்பான் (ரலி). பெருமானாரின் பெண்மக்கள் ருகைய்யா(ரலி), உம்மு குல்தூம்(ரலி) ஆகிய இருவரை (ஒருவர் மரணத்திற்குப்பின் மற்றொருவரை) மணந்தவர்.
26. ‘துந்நூரைன்’ ஒளிச்சுடரைப் பெற்றவர் என்னும் பேறு பெற்றவர் யார்?
அத்துபைல் இப்னு அம்ர் (ரலி)
27.. நபி(ஸல்) அவர்களின் அவைக் கவிஞர் யார்?
ஹஸ்ஸான் இப்னு தாபித் (ரலி)
28. குர்ஆனின் பல கிராஅத் முறைகளை ஒரே கிராஅத் முறையாக ஆக்கியவா யார்?
மூன்றாவது கலீபா உத்மான் இப்னு அஃப்பான் (ரலி)
29. அதிகமான நபி மொழிகளை அறிவித்தவர் யார்? எத்தனை ஹதீஸ்கள் ?
அபூ ஹுரைரா (ரலி) . 5374 நபி மொழிகள்.
29. கந்தக் போரில் அகழ் வெட்டுவதற்கு பரிந்துரைத்தவர் யார்?
ஸல்மானுல் பார்ஸி (ரலி)
30. ஏழுவானத்திற்கு மேலிருந்து குற்றமற்றவர் என இறைவனால் தீர்ப்பு வழங்கப்பட்டவர் யார்?
உம்முல் முஃமினீன் அன்னை ஆயிஷா ஸித்தீகா (ரலி)
31. இந்த சமுதாயத்தின் அறிவுக்கடல் ‘ ஹிப்ருல் உம்மத்’ எனச் சிறப்பிக்கப்பட்டவர் யார்?
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி)
32. அர்ஷின் மேலிருந்து அல்லாஹ்வால் திருமணம் செய்விக்கப்பட்டவர் என தம் சக்களத்திகளிடம் பெருமைப்படும் பெருமானார் மனைவி யார்?
உம்முல் முஃமினீன் அன்னை ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி)
33. இறைவனுக்கு ஒரு ஸுஜூது கூட செய்யாமல் ஷஹீதான ஸஹாபி யார்?
அம்ரு இப்னு தாபித் இப்னு கைஸ் (ரலி)
34. நபி பெருமானாரிடம் பெண்களின் தூதுவராகச் சென்ற நபித் தோழியர் யார்?
அஸ்மா பின்த் யஸீது இப்னு ஸகன் (ரலி)
35. நஜ்ஜாஷ் மன்னரால் நபி (ஸல்) அவர்களுக்கு திருமணம் செய்வித்த பெண்மணி யார்?
உம்மு ஹபீபா, ரம்லா பின்த் அபீ ஸுஃப்யான் (ரலி)
36. நாயகத் தோழர்களில் இறுதியாக மரணமடைந்தவர் யார்?
அபுத் துபைல் ஆமிர் இப்னு வாதிலா (ரலி)
37. ஷஹீதத்துல் பஹ்ர் ( கடற்போரில் மரணமடைந்த) நாயகத் தோழியர் யார்?
உம்மு ஹராம் பின்த் மில்ஹான் (ரலி).இவர் உம்மு ஸுலைம் (ரலி) அவர்களின் சகோதரியாவார்.
38. கொடுங்கோலன் ஹஜ்ஜாஜ் இப்னு யூஸுபால் மக்காவில் கொலை செய்யப்பட்டு கழுகு மரத்தில் தொங்கவிடப்பட்ட நபித் தோழர் யார்?
அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் (ரலி). இவர் அஸ்மா பின்த் அபீ பக்ர் (ரலி) அவர்களின் மகன்.
39. தமது நொண்டிக்காலால் சுவர்க்கம் புகுவார் என நபியால் கூறப்பட்ட நபித் தொழர் யார்?
உஹதுப் பொரில் ஷஹீதான அம்ருப்னுல் ஜமூஹ் (ரலி).
40. நபித்தோழர்களின் மொத்த எண்ணிக்கை எத்தனை பேர்?
ஒன்றேகால் இலட்சத்திற்கும் மேலாகும்.
41. நபி யூஸுஃ ப் (அலை) அவர்களின் சந்ததியில் தோன்றிய நபித் தோழர் யார்?
அறிஞர் அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி)
42. மஸீஹுத் தஜ்ஜாலை பார்த்ததாக நபி மொழி கூறும் நபித் தோழர் யார்?
தமீம் இப்னு அவ்ஸ் அத்தாரமீ (ரலி)
43. வானவர் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் எந்த நாயகத் தோழரின் தோற்றத்தில் வருவார்கள்.?
திஹ்யத் இப்னு கலீஃபத்துல் கலபீ( ரலி) அவர்களின் தோற்றத்தில்.
44. அய்யாமுல் ஜாஹிலிய்யா என்னும் அறியாமைக் காலத்தில் குழந்தைகளை உயிரோடு புதைத்தவர் யார்?
ஸஃது இப்னு நாஜியா (ரலி)
45. எந்த முஷ்ரிக்கும் (இணைவைப்பாளரும்) தன்னைத் தொடக்கூடாது. தானும் தொடமாட்டேன் என நேர்ச்சை செய்த நாயகத் தோழர் யார்?
ஆஸிம் இப்னு தாபித் (ரலி)
46. தமது சட்டையால் கபனிட்டு நபிகளால் அடக்கம் செய்யப்பட்ட பெண்மணி யார்?
அபூதாலிபின் மனைவி ஃபாத்திமா பின்த் அஸத் (ரலி). இவர் அலி (ரலி) அவர்களின் தாயார்.
47. அபூ பக்ர் (ரலி) அவர்களின் இயற் பெயரென்ன?
அப்துல்லாஹ் இப்னு அபீ குஹாஃபா (ரலி)
48. பத்ருப் போரில் தமது வாள் உடைந்தபோது நபி (ஸல்) ஒரு பேரீத்தர மரக்குச்சியைக் கொடுத்து நபித் தோழர் ஒருவரிடம் போராடச்சொன்னார்கள். உடனே அது ஒரு வாளாக மாறியது. போராடிய அந்தத் தோழர் யார்?
உக்காஷ் இப்னு முஹ்ஸின் (ரலி)
49. உம்முல் முஃமினீன் அன்னை கதீஜா (ரலி) அவர்களை அறியாமை காலத்தில் மக்கள் எவ்வாறு அழைத்துப் பெருமைப் படுத்தினர்?
‘அத்தாஹிரா’ ( தூய்மையாளர்)
50. தபூக் போரில் கலந்து கொள்ளாது பின் தங்கிய மூன்று நாயத் தோழர்கள் யார்?
1.கஃபு இப்னு மாலிக் அஸ்ஸல்மீ அல் அனஸாரீ (ரலி), 2.மிராரத் இப்னு ரபீஃ அல்ஆமிரீ அல்அன்ஸாரீ ரலி), 3.ஹிலால் இப்னு உமய்யத் இப்னு ரபீஆ அல்-அன்ஸாரீ (ரலி). (பின்தங்கியவர்களை அல்லாஹ் மன்னித்துவிட்டதாகக்கூறுகிறான் (அல்குர்ஆன்-9:118)
Post a Comment