தேவையான பொருட்கள் காரட் துருவல் - ஒரு கப் நறுக்கிய கோஸ் - ஒரு கப் தேங்காய்த் துருவல் - ஒரு கப் நறுக்கிய தக்காளி - இரண்டு நறுக்கிய வெள்ளரிக...
தேவையான பொருட்கள்
காரட் துருவல் - ஒரு கப்
நறுக்கிய கோஸ் - ஒரு கப்
தேங்காய்த் துருவல் - ஒரு கப்
நறுக்கிய தக்காளி - இரண்டு
நறுக்கிய வெள்ளரிக்காய் - ஒரு கப்
இவைகளுடன் எலுமிச்சம்பழச்சாறு பிழிந்து மிளகுத்தூளும், உப்புத்தூளும் சேர்த்துக் கொள்ளலாம். நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்துக் கொண்டால் மேலும் சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
தேங்காய்த் துருவல் - ஒரு கப்
நறுக்கிய தக்காளி - ஒரு கப்
கேரட் துருவல் - ஒரு கப்
பீட்ருட் துருவல் - ஒரு கப்
ஒரு கப் நறுக்கிய வெங்காயத்தை இவைகளுடன் சேர்த்து மிளகுத்தூள், சீரகத்தூள் கலந்து உட்கொள்ளலாம். மேலும் சுவை சேர்க்க எலுமிச்சபழச்சாறு பிழிந்து சிறிது உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
பெரிய காலிபிளவர் - ஒன்று
சாலட் எண்ணெய் - 3 மே.கரண்டி
வைன் வினிகர் - 1 மே.கரண்டி
மிளகுத்தூள் தேவைக்கேற்ப
காலிபிளவரை நன்றாகக் கழுவி சிறு பூக்களாகப் பிரித்தெடுக்கவும். மென்மையாகும் வரை உப்பு சேர்த்து வேக வைக்கவும். மிளகுத்தூளை தூவவும். சாலெட் எண்ணெய் மற்றும் வைன் வினிகரை காலிபிளவர் மீது ஊற்றவும். நன்றாகப் புரட்டி எடுத்துவிட்டு ஃபிரிஜ்ஜில் வைக்கவும்.
தேவையான பொருட்கள்
மாங்காய் துருவல் - ஒரு கப்
பீட்ருட் துருவல் - ஒரு கப்
காரட் துருவல் - இரண்டு கப்
நூக்கல் துருவல் - ஒரு கப்
இத்துடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்துக் கொள்ளவும்.
மற்றும் மிளகுத்தூள், உப்புத்தூள், நறுக்கிய கொத்தமல்லி சேர்த்துச் சாப்பிட சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
முளைவிட்ட பயறு - ஒரு கப்
தேங்காய்த் துருவல் - ஒரு கப்
நறுக்கிய வெங்காயம் - ஒரு கப்
இவைகளுடன் சிறிது உப்பு சேர்த்து எலுமிச்சம்பழம் பிழிந்து தேவையெனில் நறுக்கிய தக்காளியும் கலந்து சாப்பிட சுவையாக இருக்கும். பல வகையான உயிர்ச்சத்துக்களை இது உடலுக்கு அளிக்கும்.
நல்ல வெண்டைக்காய்களாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்துமல்லி இலை இவைகளை எடுத்து மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்த்து சட்னி போல அரைத்துக் கொள்ளவும். இதை ஒரு துணியால் பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும். டாக்டர்கள் ஊசிபோட பயன்படுத்தும் சிரின்ஜ் ஊசி செட் ஒன்றை வாங்கி அதில் இந்தச் சாற்றை உறிஞ்சி வெண்டைக்காய்க்குள் செலுத்தவும். இதுவே சுவையூட்டப்பட்ட வெண்டைக்காய் சாலட்டு ஆகும்.
தேவையான பொருட்கள்
மெல்லிய துண்டுகளாக நறுக்கப்பட்ட வாழைப்பழம் -நான்கு
பன்னீர் -கால் கோப்பை
துருவிய தேங்காய் - கால் கோப்பை
சர்க்கரை - 2 மே.கரண்டி
பொடி செய்த வலங்கப்பட்டை - அரை மே.கரண்டி
எலுமிச்சம்பழச்சாறு - 1 தேக்கரண்டி
பாலேடு (அ) கிரீம் - அரைக்கோப்பை
இன்ஸ்டன்ட் காப்பி - 2 மே.கரண்டி
வாழைப்பழ வில்லைகளோடு எலுமிச்சம்பழச் சாற்றைச் சேர்க்கவும். வாழைப்பழம், பன்னீர், தேங்காய்ச் சர்க்கரை, லவங்கப்பட்டை ஆகியவற்றைஒன்றாகச் சேர்த்து ஃப்ரிஜ்ஜில் வைக்கவும். கிரீமை இன்ஸ்டன்ட் காப்பியோடு சேர்த்து தேக்கரண்டியால் லேசாக அடித்துக் கொள்ளவும். இதை பரிமாறும் போது பழ சாலட்டின் மீது ஊற்றவும்.
தேவையான பொருட்கள்
வெங்காயம் - ஒன்று
பூண்டு - 2 பற்கள்
மசாலா இலை - 2
பச்சை மிளகாய் - 2
காரட் - 2
எண்ணெய்- 3 மே.கரண்டி
வினிகர் -1 மே.கரண்டி
உப்பு, மிளகுத்தூள் -தேவையான அளவு
பூண்டை நசுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தைத் தோல் உரித்து நீளவாட்டில் நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளிப் பழத்தை வில்லைகளாக நறுக்கவும். மசாலா இலையுடன் எல்லாக் காய்கறிகளையும் சேர்த்து ஐந்து நிமிடங்கள் எண்ணெயில் வதக்கவும். உப்பு, மிளகுத்தூள் சேர்க்கவும். ஒரு மணி நேரம் ஃப்ரிட்ஜ்ஜில் வைக்கவும். மசாலா இலையை நீக்கிவிட்டு குளிர்ச்சியாகப் பரிமாறவும்.
தேவையான பொருட்கள்
மஞ்சள் பூசணிக்காய் - 250 கிராம்
கெட்டியான தயிர் - ஒரு கோப்பை
சீரகம் -அரை தேக்கரண்டி
கொத்துமல்லி பொடியாக நறுக்கியது -அரை தேக்கரண்டி
மிளகு - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
பூசணிக்காயைத் துருவி வேக வைக்கவும். சீரகத்தையும், மிளகையும் வெறும் வாணலியில் இரண்டு நிமிடம் வறுக்கவும். மிக்ஸியில் போட்டு பொடி செய்யவும். எல்லாப் பொருட்களையும் ஒன்று சேர்த்து ஃபிரிட்ஜ்ஜில் வைக்கவும். எலுமிச்சை அல்லது தேங்காய் சாதத்துடன் பரிமாறவும்.
பீட்ரூட்டை நூறு கிராம் அளவுக்கு எடுத்துக் கொண்டு தோல் நீக்கி வட்ட வட்டமாக மெல்லிய பிஸ்கட் போல் நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு எலுமிச்சம்பழம் எடுத்து அரிந்து சாறு பிழிந்து வைத்துக் கொள்ள வேண்டும். சிறு துண்டு இஞ்சி எடுத்து நசுக்கிச் சாறு எடுத்து எலுமிச்சம்பழச்சாற்றுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். தேவைக்கேற்ப சிறிது உப்பு சேர்த்துக் கொள்ளவும். இந்தச் சாற்றுடன் நறுக்கிய பீட்ருட்துண்டுகளைக் கலந்து பத்து நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். இது தான் பீட்ருட் டிக்கி சாலட்.
Post a Comment