சமையலறை சமாச்சாரங்கள் உங்களுக்காக சில டிப்ஸ் :!!!

சமையலறை சமாச்சாரங்கள் கணவன், குழந்தைகள், குடும்பத்தினர், உறவினர்கள்... என எல்லோரையும் டேஸ்ட்டான சமையலால் அசத்த வேண்டுமா? உங்களுக்காக சில டி...

சமையலறை சமாச்சாரங்கள் கணவன், குழந்தைகள், குடும்பத்தினர், உறவினர்கள்... என எல்லோரையும் டேஸ்ட்டான சமையலால் அசத்த வேண்டுமா? உங்களுக்காக சில டிப்ஸ் : * கீரையை கூட்டு வைக்கும்போது அதனுடன் சிறிது சர்க் கரை சேர்த்துக் கொள்ளுங்கள். கீரையின் நிறம் மாறாமல் பச்சையாகவே இருக்கும். * எப்படி பிசைந்தாலும் சப்பாத்தி இருக்கமாகவே இருக்கிறதா? கவலையே வேண்டாம். சிறிது எலுமிச்சம்பழச்சாற்றை சேருங்கள். சும்மா நச்சுன்னு அழகாக பிசையலாம், சப்பாத்தி மாவை! * கோழி அல்லது ஆட்டு இறைச்சி வறுவல் செய்யும் போது, அதனுடனும் சிறிது எலுமிச்சம் பழச்சாற்றை சேருங்கள். டேஸ்ட்டும், கமகம வாச னையும் சாப்பிடுவோரை திக்குமுக்காட செய்துவிடும். * குழம்பு வைக்க வெங்காயம், தக்காளி, காய்கறி களை வதக்கும்போது வெங்காயம், காய்கறிகளை முதலில் வதக்கிவிட்டு, அதன்பின்னர் தக்காளியை சேர்த்துப் பாருங்கள். குழம்பை பார்க்கவே அழகாக இருக்கும். டேஸ்ட்டும் அசத்தும். * நெய் காய்ச்சும்போது அதோடு சிறிது முருங்கை இலையையும் சேர்த்து காய்ச்சுங்கள். நெய் கமகம வென்று மணம் வீசும். அந்த நெய்யை பயன்படுத் தினால், சாப்பாட்டையும் ஒரு வெட்டு வெட்டலாம். * தோசை மாவு புளித்து விட்டதா? 2 கை பிடி அளவு ரவையை அதனுடன் சேர்த்து கலக்கி, 10 நிமிடம் அப்படியே வைத்து விடுங்கள். அதன் பின்னர் தோசை சுடுங்கள். புளிப்பு சுவை மாயமாய் மறைந்திருக்கும். தோசையும் சூப்பர் சுவையாக இருக்கும். மேலும், தோசை மாவு புளித்து விட்டால் அதனுடன் சிறிது பால் சேர்த்தும் தோசை சுடலாம். கல்லில் ஒட்டாமல் தோசை வரும். புளிப்பு சுவையும் இருக்காது. * தோசை மாவு எளிதில் புளிக்காமல் இருக்க வேண்டுமா? மீதமுள்ள அந்த மாவிற்குள் ஒரு நீளமான பச்சை மிளகாயை கீறி போட்டு வைத்து விடுங்கள். மறுநாள் காலையில் புளிப்பு சுவை அதிகமாக இருக்காது. * பூரி அல்லது சப்பாத்தி மாவு பிசையும்போது சிறிது பால் அல்லது முட்டையை சேர்த்து பிசையுங்கள். ரொம்பவும் சாப்ட் ஆக இருக்கும். * கடலெண்ணெய் கெடாமல் இருக்க வேண்டுமா? அதனுடன் சிறிதளவு புளியை உருட்டி போட்டு வையுங்கள். அந்த எண்ணெய் கெடவே கெடாது. * தேங்காய் பத்தையை தயிரில் போட்டு வைத்தால் 2 நாட்கள் வரையில் தயிர் கெட்டுப் போகாது. * ஒரு கூடையில் பச்சைக் காய்கறிகளை போட்டு ஈரத்துணியால் அதை மூடி வைத்தால் 3 நாட்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும். * சுடு தண்ணீரில் சிறிது உப்பை போட்டு வையுங்கள். எப்போதும் இருக்கும் நேரத்தைவிட அதிக நேரம் சூடாக இருக்கும். * கிழங்குகளை மூடி வைக்கக்கூடாது. காற்றாட பரப்பி வைப்பது நல்லது. அப்போது தான் எளிதில் கெட்டுப் போகாது. * சமையல் சோடாவைத் தண்ணீரில் கரைத்து பிரிட்ஜை துடைத்தால் பளபளப்புக்கு பஞ்சம் இருக்காது. * அடுப்பு பர்னரில் ஏதாவது சிந்தி, மஞ்சள் நிறத்தில் ஜுவாலை ஏற்பட்டால், பர்னரை கழற்றி, உப்பு காகிதத்தால் தேய்த்தால், சிந்திய துகள்கள் நீங்கி, பர்னர் நீல நிறத்தில் எரியும். * பழைய நைலான் சாக்ஸ் இருந்தால், அதை, வாஷிங் திரவத்தில் தோய்த்து அடுப்பைச் சுத்தம் செய்தால், அடுப்பு பளபளப்பாகும். * ஒரு பாத்திரத் தில், சமையல் சோடா போட்டு தண்ணீர் ஊற்றிக் கலந்து, ஒரு நாள் இரவு முழுதும் பர்னரை போட்டு வைத்தால், பர்னர் அடைப்பு நீங்கி விடும். * கல் உப்பை மிக்சியில் போட்டு சிறிது நேரம் அரைத்தால், மிக்சி பிளேடு கூராகும். * பூண்டு, மசாலா பொருட்களின் வாசனை மிக்சியில் தங்கி விட்டால், ஒரு நாள் இரவு முழுதும் உப்புத் தண்ணீரை ஊற்றி வைத்து வாடையை நீக்கலாம். * புதினா நிறைய வாங்கி, வெயிலில் காய வைத்து, உப்பு, சீரகம் போட்டு பொடித்து, பிரிட்ஜில் வைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பொடியைத் தயிரில் போட்டால், திடீர் தயிர் பச்சடி ரெடி. * எலுமிச்சை பழம் வாடாமல் இருக்க, சிறிதளவு தேங்காய் எண்ணெயை எலுமிச்சை மீது தடவி பிரிட்ஜில் திறந்து வைக்க வேண்டும். ஒரு மாதம் வரை "பிரெஷ்'ஷாகவே இருக்கும். * எலுமிச்சை பழத்தின் ஒரு மூடியை மட்டும் பயன்படுத்த வேண்டி இருந்தால், மற்றொரு மூடியை, அலுமினிய காகிதத்தில் பொட்டலம் கட்டி, பிரிட்ஜில் வைக்கலாம். வாடாமல் இருக்கும். * பழைய ஊறுகாய் ருசியின்றி காணப்பட்டால், சிறிதளவு கரும்பு ஜூஸ் கலந்தால் போதும்; புதிய ஊறுகாய் போல மணக்கும். * தோசை வார்க்கும் போது சுண்டிப்போனால் கவலைப்பட வேண்டாம். தோசைக் கல்லில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு அரை ஸ்பூன் உப்புப் போட்டு கல்முமுவதும் தேய்த்து விட்டு பிறகு வார்த்தால் சுண்டாது. * பாகற்காய்ப் பொரியல் செய்யும் போதும் சிறிது கடலைப் பருப்பை ஊறவைத்து மையாக அரைத்து பின் இந்த மாவை இட்லித் தட்டில் வைத்து ஆவியில் வேக விடவும் பாகற்காயை வதக்குகையில் இந்த மாவையும் உதிர்த்துப்போட்டு கிளறினால் பொரியல் மிகவும் ருசியாகவும், மணமாகவும் இருப்பதுடன் கசப்பும் குறைவாகத் தெரியும். * நெய் அப்பம் செய்யும் போது ஆழாக்கு பச்சிரியுடன் ஒரு டீஸ்பூன் உளுத்தும் பருப்பையும் ஒரு டீஸ்பூன் உளுத்தம் பருப்பையும் சேர்த்து ஊறவைத்து அரைக்கவும். அப்பம் ரொம்பவும் மிருதுவாக வரும், அப்பக்காரலை உப்புப் போட்டுத் தேய்த்து அடுப்பில் ஏற்றிக் குழிகளைச் சிறிது நல்லெண்ணெய் விட்டுத் துடைத்துப்பின் நெய் விடவும் இப்போது சுலபமாக எடுக்க வரும். * பறங்கிக் கொட்டைகளை தூர ஏறியாமல் வெயிலில் உலர்த்தி பருப்பை உரித்து நெய்யில் வதக்கி சர்க்கரை அல்லது வெல்லமா போட்டுச் சாப்பிடலாம்.

Related

சமையல் குறிப்புகள் 5839080620549246860

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item