மாதுளையே... மாதுளையே... மாதுளம் பழத்தின் மருத்துவ குணங்கள்

அனைத்து பழங்களையும் போலவே மாதுளைப் பழத்திலும் மருத்துவ குணங்கள் ஏராளமாக உள்ளன. சுறுசுறுப்புக்கும், ஞாபக சக்திக்கும் மாதுளைப் பழங்கள் சிறந்து...

அனைத்து பழங்களையும் போலவே மாதுளைப் பழத்திலும் மருத்துவ குணங்கள் ஏராளமாக உள்ளன. சுறுசுறுப்புக்கும், ஞாபக சக்திக்கும் மாதுளைப் பழங்கள் சிறந்து விளங்கியதால், புத்த மற்றும் ஜைன துறவிகள் பழங்காலத்தில் அதிகமாக சாப்பிட்டனர் என்று கூறுகின்றனர் மருத்துவ ஆய்வாளர்கள். பாலைவனப்பகுதிகளை கடந்து செல்பவர்கள் தாகத்தையும், களைப்பையும் தீர்க்க மாதுளைப் பழங்களை எடுத்துச் சென்றதாக கூறுகிறது வரலாற்று நூல் ஒன்று. புழுவெட்டு என்பது தலை, கண்புருவம், தாடி, மீசை போன்ற பகுதிகளில் அரிப்பு ஏற்பட்டு, முடிகொட்டும். இது ஒருவகை கிரு மித் தொற்று. வீரியமான மருந்து மாத்திரைகளால் இப்படி ஏற்படும். இதற்கு சிறந்த மருந்து மாதுளம் பழரசம். குறிப்பாக புளிப்பு மாதுளம் பழங்களின் முத்துக்களை சேகரித்து துணியில் வைத்து கசக்கி சாறு எடுத்து, அதை புழுவெட்டு பகுதிகளில் நன்றாக தேய்க்க வேண்டும். இப்படி காலை, மாலை தேய்த்துவர, புழுவெட்டு நீங்கி முடிகள் முளைக்கும்! மாதுளம் பழச்சாறுடன் சமமாக தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், நெஞ்சு எரிச்சல், களைப்பு, மயக்கம் ஆகியவை நீங்கும். குடல் மற்றும் சிறுநீரகம் நன்கு இயங்கும். அஜீரணம் மறையும். மாதுளம்பழம் மலிவாக கிடைக்கும் சமயத்தில் தினமும் ஒன்று சாப்பிட்டுவந்தால் வயிறு தொடர்பான பிரச்சினைகள் நீங்கும். நீரிழிவு நோயாளிகள், உடல் மெலிந்த காசநோய் தாக்கியவர்கள், தீராதபசி உடையவர்கள், ஜீரண உறுப்புகள் சரிவர இயங்காதவர்கள், தீராதபேதி உடையவர்கள், அடிக்கடி பயணம் செய்பவர்கள், உஷ்ணமான இடங்களில் வேலை செய்பவர்கள் ஆகியோர் மாதுளம்பழச்சாறு அடிக்கடி சாப்பிட்டால் உடல் குளிர்ச்சி கிடைக்கும். அதேபோல், போதையில் மயங்கியவர்களுக்கு, கொஞ்சம் கொஞ்சமாக மாதுளம்பழச் சாறு கொடுத்தால் சிறிது நேரத்தில் போதை தெளிந்து விடும். உஷ்ண மிகுதியால் மூல நோய் உள்ளவர்களுக்கு அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படும். இதனால் ஆசன வாயில் அரிப்பு, மலத்துடன் ரத்தம் கலந்து வெளியேறுதல், சிறு சிறு கட்டி கள் உண்டாகுதல் போன்றவற்றால் அவதிப்படுவர். இவர்கள் மாதுளம் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மூலநோய் முற்றிலுமாக நீங்கி விடும். சில பெண்களுக்கு கருப்பையில் பல்வேறு பிரச்சினைகளால் ரணம் உண்டாகும். ரணத்தின் காரணமாக மாதவிலக்கின் போது அதிகளவில் ரத்தப்போக்கு ஏற்படும். இதனால் உடலில் ரத்த சோகை உண்டாகும். இவர்கள் தினமும் மாதுளம் பழச்சாறுடன் வென்னீர் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது.

Related

பழங்களின் பயன்கள் 3852195781686212348

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item