வாசகிகள் கைமணம்! --டிலைட் சுகியன்--கதம்ப தொக்கு--வெரைட்டி உருண்டை

டிலைட் சுகியன் தேவையானவை: பச்சரிசி, உளுத்தம்பருப்பு - தலா ஒரு கப், பச்சைமிளகாய் - 6, கடுகு - 1 டீஸ்பூன், வெங் காயம் - 2, இஞ்சி - சிறு துண்...

டிலைட் சுகியன் தேவையானவை: பச்சரிசி, உளுத்தம்பருப்பு - தலா ஒரு கப், பச்சைமிளகாய் - 6, கடுகு - 1 டீஸ்பூன், வெங் காயம் - 2, இஞ்சி - சிறு துண்டு, கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவை யான அளவு. செய்முறை: உளுத்தம்பருப்பு, பச்சரிசி இரண்டையும் ஒரு மணி நேரம் ஊற வைத்து பச்சைமிளகாய், உப்பு சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும். அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். கடுகு தாளித்து அதில் சேர்க்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மாவை உருட்டிப் போட்டு, பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும். சுவையான ஈவினிங் ஸ்நாக்ஸ் இது! டிலைட் சுகியன்: சிறிது மைதா மாவை சேர்த்து செய்தால் மிருது வாக இருப்பதுடன் சுவையும் தூக்கலாக இருக்கும். -------------------------------------------------------------------------------- கலக்கல் ருசியில் கதம்ப தொக்கு! தேவையானவை: பெரிய நெல்லிக்காய் - 6, தக்காளி - 4, இஞ்சி - ஒரு பெரிய துண்டு, காய்ந்த மிளகாய் - 6, வெல்லம் - கொட்டைப்பாக்கு அளவு, பெருங்காயத்தூள், வெந்தயத்தூள், மஞ்சள்தூள் - தலா ஒரு டீஸ்பூன், நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: தக்காளி, இஞ்சியை பொடியாக நறுக்கவும். நெல்லிக்காயை கொட்டை நீக்கி, துண்டுகளாக நறுக்கி, லேசாக வதக்கவும். இதனுடன் தக்காளி, காய்ந்த மிளகாய், இஞ்சி, உப்பு, வெல்லம் சேர்த்து வதக்கவும். ஆறியதும் மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகை போட்டு தாளிக்கவும். அதில் வெந்தயத்தூள், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து, அரைத்த விழுதைக் கொட்டி சுருளக் கிளறி இறக்க வும். தயிர் சாதத்துடன் சாப்பிட ருசியாக இருக்கும்! கதம்ப தொக்கு: நான்கு சின்ன வெங்காயத்தை வதக்கி அரைத்துச் சேர்த்தால் சுவை இன்னும் கூடுதலாக இருக்கும். -------------------------------------------------------------------------------- வெரைட்டி உருண்டை தேவையானவை: சம்பா கோதுமை, ரவை, பச்சைப்பயறு, பொட்டுக்கடலை - தலா அரை கப், சர்க்கரை - ஒன்றரை கப், முந்திரி - அரை கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு. செய்முறை: சம்பா கோதுமை, ரவை, பச்சைப்பயறு, பொட்டுக்கடலை ஆகியவற்றை தனித்தனியே கடாயில் சிவக்க வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்துக் கொள்ளவும். சர்க்கரையை பொடித்துக் கொள்ளவும். கடாயில் நெய்யை சூடாக்கி, அரைத்த மாவு, சர்க்கரையை அதில் கொட்டிக் கிளறவும். கீழே இறக்கி வைத்து முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்து கலந்து உருண்டைகளாகப் பிடிக்கவும். புரதச்சத்து நிறைந்த உருண்டை இது! வெரைட்டி உருண்டை: முந்திரியை தனியாக சேர்ப்பதைவிட, பொடி செய்து சேர்த்தால், வாசனை ஊரைக் கூட்டும்.

Related

சமையல் குறிப்புகள் 4581825423335565854

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item