வாசகிகள் கைமணம்! தயிர் வாழைக்காய் -- கிரீன் கீர் -- செண்பகப் பூ ஸ்வீட்

தயிர் வாழைக்காய் தேவையானவை: வாழைக்காய் - 4, தேங்காய் துருவல் - ஒரு கப், பச்சைமிளகாய் - 5, சீரகம் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கடு...

தயிர் வாழைக்காய் தேவையானவை: வாழைக்காய் - 4, தேங்காய் துருவல் - ஒரு கப், பச்சைமிளகாய் - 5, சீரகம் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கடுகு - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, தயிர் - ஒன்றரை கப், உப்பு - தேவையான அளவு. செய்முறை: தேங்காய் துருவல், பச்சை மிளகாய், கால் டீஸ்பூன் சீரகத்தை சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், மீதமுள்ள சீரகம், கறிவேப்பிலையை போட்டு வறுக்கவும். பிறகு இதில் அரைத்த விழுது, மஞ்சள்தூள், உப்பு, தோல் சீவி நறுக்கிய வாழைக்காயைப் போடவும். காய் வெந்ததும், தயிரைக் கடைந்து சேர்க்கவும். இதனுடன் சிறிது தண்ணீர் கலந்து, பெருங் காயத்தூள் சேர்த்துக் கிளறினால் தயிர் வாழைக்காய் தயார்! இதை சாதத்துடன் கலந்தும் சாப்பிடலாம்.. பருப்பு சாதம், சப்பாத்தி மற்றும் டிபன் வகைகளுக்கு 'சைட் டிஷ்' ஆகவும் தொட்டுக் கொள்ளலாம். தயிர் வாழைக்காய்: கொஞ்சம் தண்ணீர் அதிகமாகி விட்டால், கடலைமாவை கரைத்து ஊற்றி கொதிக்க விட்டு இறக்கலாம். -------------------------------------------------------------------------------- கிரீன் கீர் தேவையானவை: பாசிப்பயறு - ஒரு கப், கெட்டி தேங்காய்ப்பால் - ஒரு கப், தேங்காயின் இரண்டு மற்றும் மூன்றாம் பால் - 2 கப், பொடித்த வெல்லம் - 2 கப், சர்க்கரை - ஒரு கப், முந்திரி, திராட்சை - தேவையான அளவு, நெய் - 3 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், பச்சை கலர் - சிறிதளவு, காய்ச்சிய பால் - ஒரு கப். செய்முறை: நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்துக் கொள்ளவும். பாசிப்பயறை சுத்தம் செய்து இரண்டாம், மூன்றாம் தேங்காய்ப் பாலை ஊற்றி குக்கரில் குழைய வேக விடவும். கெட்டி தேங்காய்ப்பால், காய்ச்சிய பால், வெல்லம், சர்க்கரை, பச்சை கலர் இவற்றை வெந்த பயறுடன் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும். மீதமுள்ள நெய், ஏலக்காய்த்தூள், முந்திரி, திராட்சையை இதில் போட்டு, ஆறியதும் ஃபிரிட்ஜில் எடுத்து வைத்து பரிமாறவும். கிரீன் கீர்: சிறிது பாதாம், முந்திரி, பிஸ்தா அரைத்துச் சேர்த்தால் சுவை கூடுதலாக இருக்கும். -------------------------------------------------------------------------------- செண்பகப் பூ ஸ்வீட் தேவையானவை: மைதா மாவு - இரண்டரை கப், நெய் - கால் கப், சர்க்கரை - 3 கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், பால், எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: நெய்யை உருக்கி, மைதா மாவில் ஊற்றி நன்றாக பிசைந்து கொள்ளவும். பிறகு, சிறிது சிறிதாக பாலை ஊற்றி கெட்டியாக பிசையவும். சர்க்கரையை பாதுஷா பாகு பதத்தில் காய்ச்சி ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். பிசைந்து வைத்துள்ள மாவை சிறிய அப்பளங்களாக இடவும். அப்பளத்தின் நடுவில் கத்தியால் இரண்டு, மூன்று கீறல்களைப் போடவும். அப்பளத்தை பாய் போல் சுருட்டி இரு ஓரங்களையும் ஒட்டி விடவும். பிறகு எண்ணெயில் பொரித்தெடுத்து, பாகில் தோய்த்து எடுக்கவும். செண்பகப் பூ ஸ்வீட்: பார்ப்பதற்கு செண்பகப் பூவைப் போலவே இருப்பதால் இந்தப் பெயர். பால் விடும்போது ஒரு டீஸ்பூன் தயிரையும் சேர்த்துச் செய்தால் வித்தியாசமான சுவையில் இருக்கும்.

Related

சமையல் குறிப்புகள் 5509600134183291439

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item