கம்பெனி தொடங்குவதற்கு முன் நாம் செய்ய வேண்டிய வேலைகள்

நீங்கள் ஒரு பிஸினஸ் செய்கிறீர்கள் என்றால், பொதுவாக அந்த நிறுவனத்தை கம்பெனி என்றுதான் சொல்லுவோம். ஆனால், பிஸினஸை தனி நபர் வியாபாரம், கூட்டு ...

நீங்கள் ஒரு பிஸினஸ் செய்கிறீர்கள் என்றால், பொதுவாக அந்த நிறுவனத்தை கம்பெனி என்றுதான் சொல்லுவோம். ஆனால், பிஸினஸை தனி நபர் வியாபாரம், கூட்டு வியாபாரம் மற்றும் கம்பெனி என்று மூன்று விதமாக பிரிக்கலாம். இதில் கம்பெனி என்று ஆரம்பிக்கும்போது நாம் செய்ய வேண்டிய வேலைகள் அதிகம். கம்பெனி தொடங்குவதற்கு, ரெஜிஸ்டிரார் ஆஃப் கம்பெனிஸில்தான் விண்ணப்பிக்க வேண்டும். இப்பொழுது எல்லாமே கம்ப்யூட்டர் மயமாகிவிட்டதால், ஆன்லைனிலும் விண்ணப்பித்துக் கொள்ளலாம். முதலில் ரூ.500/_ கட்ட வேண்டும் (கிரெடிட் கார்டில் கட்டிக் கொள்ளலாம்.) கம்பெனிக்கான ஐந்து பெயர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். பெயர்கள், நாம் செய்யும் பிஸினஸ§க்குத் தொடர்புடையதாக இருப்பது அவசியம். உதாரணமாக சாஃப்ட்வேர் பிஸினஸ் என்றால் கம்ப்யூட்டர் தொடர்பாகத்தான் இருக்க வேண்டும். அத்துடன் ஃபார்ம் 1கி படிவத்தைப் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். இதில் கம்பெனி ஆரம்பிக்கும் (பப்ளிக் லிமிடெட் என்றால் குறைந்த பட்சம் ஏழு பேர். பிரைவேட் லிமிடெட் என்றால் குறைந்த பட்சம் இரண்டு பேர்) இரண்டு பேரின் பெயர், முகவரியோடு கொடுக்க வேண்டும். அத்துடன் நாம் ஆரம்பிக்கப்போகும் மெயின் பிஸினஸ் பற்றி விரிவாகக் குறிப்பிட வேண்டும். நாம் தேர்ந்தெடுத்திருக்கும் பெயர்கள், நாம் செய்யப் போகும் பிஸினஸ§க்கு எப்படி தொடர்புடையது என்பதையும் நியாயப்படுத்த வேண்டும். நாம் போடப் போகும் முதலீடு (பிரைவேட் லிமிடேட் கம்பெனி என்றால் ரூபாய் ஒரு லட்சம் இருக்க வேண்டும்) எவ்வளவு என்பதையும் குறிப்பிட வேண்டும். மேலே சொன்னவற்றையெல்லாம் முடித்து, விண்ணப்பத்தைக் கொடுத்துவிட்டால், பத்து நாட்களுக்குள் அப்ரூவல் வந்துவிடும். அப்ரூவல் வந்த பிறகு, மெமோரெண்டம் ஆஃப் அசோசியேஷன்’ (மெயின் பிஸினஸ் மற்றும் அதன் தொடர்புடைய பிஸினஸ் பற்றிய விவரங்கள்), ‘ஆர்டிகிள்ஸ் ஆஃப் அசோசியேஷன் (கம்பெனி இயங்கும் விதம், பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் போன்றவை) ரெஜிஸ்டிரார் ஆஃப் கம்பெனிஸ் அலுவலகத்தில் கொடுத்து உரிய கட்டணத்தைக் கட்டி ஒப்புதல் வாங்க வேண்டும். செய்யும் முதலீடுக்குத் தகுந்தாற்போல் இந்தக் கட்டணம் மாறுபடும். கம்பெனி தொடங்குவதற்கு முன் கீழ்க்கண்ட ஆவணங்களைக் கொடுக்க வேண்டும்: மெமோரெண்டம் ஆஃப் அசோசியேஷன் மற்றும் ஆர்டிகிள்ஸ் ஆஃப் அசோசியேஷன் இரண்டையும், டைரக்டர்கள் எல்லோரும் கையெழுத்துப் போட்டு, அவர்களுடைய பெயர், முழு முகவரி, தற்போது செய்து வரும் வேலை போன்றவற்றைக் குறிப்பிட்டு கொடுக்க வேண்டும். ஃபார்ம் _1ஐ ரூ.20/_ மதிப்புள்ள ஸ்டாம்ப் பேப்பரில் (பத்திரங்கள் பதிவு செய்யும் முத்திரைத்தாள்), தேவைப்பட்ட விவரங்களைக் கொடுத்திருப்பதாக உறுதி அளித்துக் கொடுக்க வேண்டும். ஃபார்ம் _18ல் கம்பெனியின் ரிஜிஸ்டர் ஆஃபீஸ் பற்றி குறிப்பிட்டு கம்பெனியின் ஒரு டைரக்டர் கையெழுத்துப் போட்டு பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். ஃபார்ம்_32ல் டைரக்டர்கள் நியமிக்கப்பட்ட விவரத்தை, அவர்களின் கையெழுத்துடன் பூர்த்தி செய்ய வேண்டும். கம்பெனியின் பெயர் அங்கீகரிக்கப்பட்ட கடிதம். மெமோரெண்டம் ஆஃப் அசோசியேஷனில் பெயர் குறிப்பிட்ட அனைவரும் கையெழுத்துப் போட்டு டைரக்டர்களில் யாராவது ஒருவருக்கு, ‘சர்டிஃபிகேட் ஆஃப் இன்கார்பரேஷன்’ வாங்குவதற்கு அதிகாரம் அளிக்கப்பட்ட, பொது அதிகாரப் பத்திரம் கொடுக்க வேண்டும். இவையெல்லாம் கொடுத்த பிறகு, ரிஜிஸ்ட்ரார் ஆஃப் கம்பனிஸ்’ அலுவலகத்திலிருந்து ஒருநாளைக் குறிப்பிட்டு, அந்த ஆவணங்களைச் சரி பார்க்க அழைப்பார்கள். எல்லாம் சரியாக இருந்தால் ‘சர்டிஃபிகேட் ஆஃப் இன்கார்பரேஷன்’ கிடைத்துவிடும். அது வந்தவுடன் நமது பிஸினஸைத் தொடங்கிவிடலாம்.

Related

உங்களுக்கு உதவும் சட்டங்கள் 3442553595088944296

Post a Comment

1 comment

mose said...

Thanks for the information.

- Moses

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item