வாசகிகள் கைமணம்! புழுங்கலரிசி முறுக்கு-- சர்க்கரை அதிரசம்-- பொட்டுக்கடலை சீடை-- காரத்தட்டை--

ரெசிப்பிஸ் ! வாசகிகள் கைமணம்! புழுங்கலரிசி முறுக்கு தேவையானவை: புழுங்கலரிசி - 4 கப், உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன், வெண்ணெய்,...

ரெசிப்பிஸ் ! வாசகிகள் கைமணம்!
புழுங்கலரிசி முறுக்கு
தேவையானவை: புழுங்கலரிசி - 4 கப், உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன், வெண்ணெய், எள்ளு - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத் தூள் - கால் டீஸ்பூன், உப்பு, எண் ணெய் - தேவையான அளவு. செய்முறை: புழுங்கலரிசியை 2 மணி நேரம் ஊறவைத்து, நைஸாக கெட்டிப் பதத்தில் அரைத்துக் கொள்ளவும். உளுத்தம்பருப்பை பொன்னிறமாக வறுத்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். பிறகு, புழுங்கலரிசி மாவுடன் வறுத்து அரைத்த உளுத்த மாவு, எள்ளு, வெண்ணெய், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும். மாவு சிறிது நீர்த்து இருந்தால் வெள்ளைத் துணியில் போட்டு புரட்டி எடுத்தால் ஈரத்தை இழுத்து கெட்டியாகிவிடும். இந்த மாவில் சிறிது எடுத்து மெல்லிய முறுக்குகளாக சுற்றி எண்ணெயில் பொரித்தெடுக்கவும். முறுக்கு சுற்ற தெரியாதவர்கள் அச்சில் போட்டுப் பிழிந்து கொள்ளலாம். --------------------------------------------------------------------------------------------------
சர்க்கரை அதிரசம்
தேவையானவை: பதப்படுத்தப்பட்ட (அரிசியை தண்ணீர் விட்டு நன்றாக களைந்து நிழலில் உலர்த்தி அரைத்துக் கொள்ளவும்) அரிசி மாவு - ஒரு கப், சர்க்கரை - கால் கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், நெய் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: சர்க்கரையில் தண்ணீர் விட்டு பாகு வைக்கவும். பதம் வந்ததும் (பாகில் சிறிது எடுத்து தட்டில் விட்டால் முத்துப்போல நிற்கும். இதுவே சரியான பதம்) அரிசி மாவை சிறிது சிறிதாகக் கொட்டி நன்றாகக் கிளறவும். கலவை சற்று தளர்ந்து இருந்தால் பரவாயில்லை. ஆறியதும் இறுகிவிடும். பிறகு அடுப்பை அணைத்துவிட்டு ஏலக்காய்த்தூள், நெய் சேர்த்துக் கிளறி இறக்கவும். இந்த மாவில் சிறிது எடுத்து பிளாஸ்டிக் ஷீட்டில் வைத்து சற்று தடிமனாகத் தட்டி எண்ணெயில் போடவும். பிறகு அதிரசம் அழுத்தும் அச்சினால் அமிழ்த்தி எண்ணெயை எடுத்துவிட்டு, ஒவ்வொன்றாக பாத்திரத்தில் அடுக்கவும். -----------------------------------------------------------------------------------------------------------
பொட்டுக்கடலை சீடை
தேவையானவை: பதப்படுத்தப்பட்ட அரிசி மாவு - ஒரு கப், பொட்டுக்கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், வெண்ணெய், தேங்காய்துருவல், எள்ளு - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: வெறும் கடாயில் அரிசி மாவை கை பொறுக்கும் சூட்டில் லேசாக வறுத்துக் கொள்ளவும். அதனுடன், பொட்டுக்கடலை மாவு, வெண்ணெய், தேங்காய் துருவல், எள்ளு, உப்பு, பெருங்காயத்தூள் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாகப் பிசறி, சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து, சிறு சீடைகளாக உருட்டி வைக்கவும். ஈரம் காய்ந்ததும் எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும். மாவை வறுப்பதால் சீடை வெடிக்காமல் இருக்கும். --------------------------------------------------------------------------------------------------------------------------
காரத்தட்டை
தேவையானவை: பதப்படுத்தப்பட்ட அரிசி மாவு - ஒரு கப், பொட்டுக்கடலை மாவு - ஒரு டீஸ்பூன், வறுத்து அரைத்த உளுத்த மாவு, வெண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன், பச்சைமிளகாய் - 5, நறுக்கிய கொத்தமல்லி - சிறிது, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: அரிசிமாவை கை பொறுக்கும் சூட்டில் லேசாக வறுக்கவும். பச்சைமிளகாய், கொத்தமல்லி, உப்பை விழுதாக அரைத்துக் கொள்ளவும். இதனுடன் வறுத்த அரிசிமாவு, பொட்டுக்கடலை மாவு, உளுத்த மாவு, வெண்ணெய், பெருங்காயத்தூள் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். எலுமிச்சம் பழ அளவு மாவை எடுத்து வெள்ளைத் துணியில் மெல்லியதாகத் தட்டி எண்ணெயில் போட்டு கரகரப்பாகப் பொரித்தெடுக்கவும். விருப்பப்பட்டால் வேர்க்கடலையை ஒன்றிரண்டாகப் பொடித்து மாவில் சேர்த்துக் கொள்ளலாம். ---------------------------------------------------------------------------------------------------------------------------------
காசி அல்வா
தேவையானவை: துருவிய வெள்ளைப்பூசணி - 4 கப், சர்க்கரை - ஒன்றரை கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், நெய் - கால் கப், முந்திரி துண்டுகள் - சிறிது. செய்முறை: வெள்ளைப்பூசணி துருவலை ஒரு துணியில் நன்றாக மூட்டை கட்டி, நீரை கெட்டியாகப் பிழிந்து வடித்துக் கொள்ளவும். பிறகு கடாயில் நெய் விட்டு, பூசணி துருவலைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கி சர்க்கரையை சேர்க்கவும். எல்லாம் சேர்ந்து சுருண்டு வரும் பக்குவத்தில் ஏலக்காய்த்தூள், முந்திரி துண்டுகளை சேர்த்து இறக்கவும். ----------------------------------------------------------------------------------------------------------------------------------
மனோகரம்
தேவையானவை: பதப்படுத்தப்பட்ட அரிசிமாவு - 4 கப், வறுத்துப் பொடித்த உளுத்தமாவு - முக்கால் கப், வெண்ணெய் - ஒரு டீஸ்பூன், வெல்லம் - ஒன்றரை கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன். உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: அரிசிமாவுடன் உப்பு, வெண்ணெய் சேர்த்துப் பிசறி, தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். இந்த மாவை சிறிது எடுத்து தேன்குழல் அச்சில் போட்டு எண்ணெயில் முறுக்குகளாகப் பொரித்தெடுக்கவும். இதேபோல் எல்லாவற்றையும் செய்து கொள்ளவும். மற்றொரு கடாயில் வெல்லத்தைப் போட்டு ஒரு கரண்டி தண்ணீர் விட்டு அடுப்பில் வைக்கவும். வெல்லம் கொதித்து கரைந்ததும் அதில் உள்ள மண்ணை வடிகட்டி மீண்டும் கடாயில் வைத்து கெட்டிப் பாகாகக் காய்ச்சவும் (ஒரு ஸ்பூனில் எடுத்து தண்ணீரில் போட்டு, அந்த முத்தை எடுத்துத் தட்டில் போட்டால் 'டங்' என்று சத்தம் கேட்கும். இதுவே சரியான பதம்). பிறகு அடுப்பை அணைத்து விட்டு, பொரித்த முறுக்குகளை போட்டு கலந்து வைக்கவும்.

Related

சமையல் குறிப்புகள் 4171001976101041687

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item