வாசகிகள் கைமணம்! கோதுமை பக்கோடா:-- பயத்தம்பருப்பு தயிர்க்குழம்பு:---கொள்ளு பிஸ்கெட்:

தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப், அரிசி மாவு - ஒரு கப், நறுக்கிய வெங்காயம் - அரை கப், நறுக்கிய பச்சைமிளகாய் - 2, பெருங்காயத்தூள் - 2 சிட்டிக...

தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப், அரிசி மாவு - ஒரு கப், நறுக்கிய வெங்காயம் - அரை கப், நறுக்கிய பச்சைமிளகாய் - 2, பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு, கறிவேப்பிலை - சிறிதளவு. செய்முறை: கோதுமை மாவு, அரிசி மாவு இரண்டையும் தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசையவும். அதில் பச்சைமிளகாய், பெருங்காயத்தூள், வெங்காயம், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து பிசையவும். மாவு கலவையை எண்ணெயில் சிறிது சிறிதாக கிள்ளிப் போட்டுப் பொரிக்கவும். பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும். கோதுமை பக்கோடா: மாவு கலவையுடன் பொடியாக நறுக்கிய காய்கறிகளை சேர்த்து செய்தால் சுவை கூடுதலாக இருக்கும். _____________________________________________________________________________________ தேவையானவை: பயத்தம்பருப்பு - 4 டீஸ்பூன், சீவிய பச்சை நெல்லிக்காய் - 2, தக்காளி - 3, துருவிய தேங்காய் - அரை கப், பச்சைமிளகாய் - 6, சீரகம் - ஒரு டீஸ்பூன், வறுத்த வெந்தயப்பொடி - அரை டீஸ்பூன், தயிர் - 2 கப், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், உப்பு, கடுகு, எண்ணெய் - தேவையான அளவு, கறிவேப்-பிலை, மல்லித்தழை - சிறிதளவு, சுண்டைக்காய் வற்றல் - 10, வறுத்த உளுந்துப்பொடி - ஒரு டீஸ்பூன். செய்முறை: ஊற வைத்த பயத்தம்பருப்பு, நறுக்கிய தக்காளி, தேங்காய் துருவல், நெல்லிக்காய், பச்சைமிளகாய், சீரகம்.. எல்லாவற்றையும் ஒன்றாக அரைத்துக் கொள்ளவும். கடைந்த தயிரில் அரைத்த விழுதை சேர்த்துக் கலக்கவும். இதில் சிறிது தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து, உப்பு, மஞ்சள்தூள், உளுந்துப்பொடி, வெந்தயப்பொடி சேர்த்துக் கிளறி சூடுபடுத்தவும். சிறிது நுரை வந்ததும் இறக்கி, வறுத்த சுண்டைக்காய் வற்றல், கறிவேப்பிலை, மல்லித்தழை சேர்த்து கடுகு தாளித்துக் கொட்டவும். விரும்பினால் வேக வைத்த காய்கறிகளையும் சேர்க்கலாம். பயத்தம்பருப்பு தயிர்க்குழம்பு: சுண்டைக்காயுடன் மோர்மிளகாயையும் தாளித்து சேர்க்கலாம். சுவையும் மணமும் தூக்கலாக இருக்கும். ____________________________________________________________________________________ தேவையானவை: வறுத்த கொள்ளு மாவு - ஒரு கப், பொட்டுக்கடலை மாவு - ஒரு கப், மைதா மாவு - 2 டீஸ்பூன், எள்ளு - சிறிதளவு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: கொள்ளு மாவு, பொட்டுக்-கடலை மாவு, மைதா மாவு, எள்ளுடன் தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும். இதை சப்பாத்திமாவு போல் கொஞ்சம் தடிமனாக இட்டு, டைமன் வடிவத்தில் வெட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும். உப்புக்கு பதிலாக அரை கப் சர்க்கரை சேர்த்து இனிப்பு பிஸ்கெட்டும் செய்யலாம். கொள்ளு பிஸ்கெட்: கொள்ளுடன் முந்திரி, பாதாமை பொடித்து சேர்த்துச் செய்தால் கரகரப்பாக இருக்கும். _____________________________________________________________________________________

Related

30 வகை கேரள சமையல் ! -- சமையல் குறிப்புகள்

30 வகை கேரள சமையல் ! கேரளா என்றாலே பசுமை போர்த்திய மலைப் பிரதேசங்களுடன் நேந்திரம்  சிப்ஸ் உள்ளிட்ட ஸ்பெஷல் உணவுகளும் கண்முன்னே வந்து நிற்கும். அந்த அளவுக்கு உணவு வகைகளுக்கும் பெயர் ப...

எங்க வீட்டு டயட்! -- நெல்லிக்காய் சாம்பார்

எங்க வீட்டு டயட்! 'ரசித்துச் சாப்பிடும் உணவு ருசியாக இருந்தால் மட்டும் போதுமா? அதுவே சத்தாகவும் சகல நோய்களையும் போக்கும் அருமருந்தாகவும் இருந்தால்... ஆயுசுக்கும் ஆரோக்கியமாக வாழலாம்!’ என்பதே மர...

எம்டி (Empty) சால்னா --சமையல் குறிப்புகள்

தேவையான பொருட்கள்: வெங்காயம் - 1 பெரியது தக்காளி - 1 பெரியது மிளகாய் - 3 ஏலம்,பட்டை,கிராம்புத்தூள்- அரைக்கரண்டி சில்லிபவுடர் - 1 தேக்கரண்டி சீரகத்தூள் - அரைக்கரண்டி சோம்புத்தூள் - அரைக்கரண்டி...

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

Tuesday - Dec 3, 2024 2:21:20 AM

No. of Posts

8665 Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

16,088,498

Advertisement

Contributors

Popular PostsBlog Archive

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item