சின்னம்மை நோய் வராமல் தடுப்பது பற்றி....

வெயில் கொளுத்தத் துவங்கி விட்டது. கூடவே, சீஸன் நோயான சின்னம்மையும் மிக வேகமாகப் பரவி வருகிறது. உடல் முழுக்க கொப்புளங்களாகத் துவங்கி, சிக்கலி...

வெயில் கொளுத்தத் துவங்கி விட்டது. கூடவே, சீஸன் நோயான சின்னம்மையும் மிக வேகமாகப் பரவி வருகிறது. உடல் முழுக்க கொப்புளங்களாகத் துவங்கி, சிக்கலில் விடுகிற இந்த சின்னம்மை வராமல் தடுப்பது பற்றியும், வந்தால் செய்ய வேண்டிய சிகிச்சை பற்றியும் விவரிக்கிறார் இதய நோய் மற்றும் பொதுநல மருத்துவ நிபுணர் டாக்டர் எஸ்.கிருஷ்ணன் எம்.டி. கடலூர் ‘‘குளிர் காலம் முடிந்து கோடை காலம் துவங்கும் இந்த சமயத்தில்தான் சின்னம்மை நோய் வேகமாக பரவுகிறது. அந்நோய்க்கான அறிகுறிகள் இவைதான்.. காய்ச்சலுடன் ஆரம்பிக்கும். காய்ச்சலோடு வயிற்றிலோ முதுகிலோ கொப்புளங்கள் தோன்றும். அடுத்த 48 மணி நேரத்தில் உடல் முழுக்க கொப்புளங்கள் பரவிவிடும். ஆரம்பத்தில் பார்த்து சிகிச்சை அளித்தால் நான்கு நாட்களில் குணமாகிவிட வாய்ப்பு உண்டு. அதனால், காய்ச்சல் வந்ததுமே மருத்துவரிடம் காட்டுவது நல்லது. சின்னம்மை நோய் வி.இஸட்.வி (V.Z.V - Varicella Zoster Virus) என்ற வைரஸினால் உண்டாகிறது. இந்த வைரஸ் மூன்று விதங்களில் பரவுகிறது. பாதிக்கப் பட்டவர்களின் மூச்சுக் காற்றில் இருந்தும், அவர்கள் உடலில் உள்ள கொப்புளங்களில் இருந்து வெளிப்படும் நீரிலிருந்தும், கொப்புளங்கள் காய்ந்து உதிரும் செதில் போன்ற பகுதியிலிருந்தும் பரவுகிறது. மிக சுலபமாக பரவக் கூடிய நோய் என்பதால்தான் இதுபோன்ற நோய்களுக்கு சிகிச்சை தர வேண்டும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் அருகில் யாரையும் விடக் கூடாது. பொதுவாகவே, தும்மல் மற்றும் இருமல் இருப்பவரின் அருகில் நெருங்காமல் இருப்பது நல்லது. ஏனெனில், இந்த வைரஸ் ஒருவரின் உடலில் சென்று பதினேழு நாட்கள் கழித்தே நோயை வெளிப்படுத்துகிறது. அதுவரை இப்படி ஒரு பாதிப்பு ஏற்பட்டிருப்பது அந்த நபருக்கே தெரியாது. இந்த இடைப்பட்ட காலகட்டத்தில்தான் அவரின் உடலில் கிருமிகள் பல்கிப் பெருகும். இதை ‘இன்குபேஷன் பீரியட்’ என்று சொல்லுவோம். இந்த சமயத்தில் அவர் இருமினாலோ தும்மினாலோ அருகில் இருப்பவர்களுக்கும் இந்த வைரஸ் பரவிவிடும். இரண்டு நாட்களுக்கு காய்ச்சல் இருக்கும். அதற்கு பாரசிட்டமால் மருந்துகளை கொடுக்கலாம். ஆனால் ஆஸ்ப்ரின் மருந்துகளை கொடுக்கக் கூடாது. கொப்புளங்கள் காய்ந்து உதிர்ந்தால், உடனுக்குடன் சுத்தம் செய்ய வேண்டும். காரமான உணவுகளைக் கொடுத்தால், கொப்புளங்களில் அதிக எரிச்சல் ஏற்படும். தண்ணீர், ஜூஸ், மற்றும் பழ வகைகளையே அதிகம் கொடுக்க வேண்டும். பொட்டாசியம் பெர்மாங்கனேட் ஒரு கிராம் எடுத்து நூறு கிராம் தண்ணீரில் கலந்து அவர்களின் உடலில் பூசி விட வேண்டும். மஞ்சள், வேப்பிலை இரண்டுமே உடலுக்கு நல்ல குளிர்ச்சியைக் கொடுப்பதால் அதை அரைத்து தடவலாம். அது கொப்புளங்களில் எரிச்சலை குறைக்கும். நோயால் பாதிக்கப்பட்டவருக்கு ‘‘Acylovir’ ’ என்ற மாத்திரையை ஒரு நாளைக்கு ஐந்து முறை கொடுக்க வேண்டும். இந்த மாத்திரையால் நோயின் தாக்குதலும் கொப்புளங்களால் தழும்புகள் ஏற்படுவதும் வெகுவாகக் குறையும். பொதுவாக, நான்கு முதல் ஏழு நாட்களுக்குள் இந்நோய் குணமடைந்துவிடும். சின்னம்மைக்கான தடுப்பூசியை குழந்தைகளுக்கு மூன்று வயதிலேயே போட்டு விடுவது நல்லது. பொதுவாக, மற்ற குழந்தைகளோடு நெருங்கி விளையாடுகிற குழந்தைகளுக்கே இந்த நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம். அம்மாக்கள் அதிக கவனத்துடன் இருக்கவும். இந்த நோயில் ஒரு சின்ன சந்தோஷம் உண்டு. ஒருவருக்கு ஒருமுறை சின்னம்மை வந்து விட்டால் அவருக்கு மீண்டும் வரவே வராது என்பதுதான் அது!’’ =================================================================== கோடைக்காலம் வந்துவிட்டது. கூடவே அழையா விருந்தாளியாக விதவிதமான அம்மை நோய்களும் சேர்ந்தே வந்துவிட்டன. இந்த அம்மை நோய்கள் எதனால் ஏற்படுகின்றன? வராமல் தடுப்பது எப்படி? வந்தபிறகு எப்படி நடந்து கொள்ள வேண்டும்? சொல்கிறார் இதய நோய் மற்றும் பொதுநல மருத்துவ நிபுணர் டாக்டர் எஸ்.கிருஷ்ணன் எம்.டி. கடலூர்... பெரியம்மை என்று சொல்லப்படக்கூடிய அம்மைதான் தான் உயிர் குடிக்கும் ஒரு அம்மையாக இருந்து வந்தது. பெரியம்மைக்கான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு இன்று அந்த அம்மையை உலகத்தை விட்டே துரத்திவிட்டோம். தற்போது என்னென்ன அம்மைகள் நமக்கு வருகின்றன?  சின்னம்மை என்றழைக்கப்படும் சிக்கன் பாக்ஸ் (கொப்புளங்களாக வருமே...)  மணல்வாரி அம்மை என்றழைக்கப்படும் மீசில்ஸ் பொன்னுக்கு வீங்கி என்றழைக்கப்படும் மம்ப்ஸ் அம்மை நோய்கள் எப்படி பரவுகின்றன? அம்மை நோய்கள் பெரும்பாலும் காற்றின் மூலமாகத் தான் பரவுகின்றன. அதனால்தான் அம்மை நோயை ‘பிராப்லெட் இன்ஃபெக்ஷன்’ என்று சொல்கிறோம். நோயாளி இருமும் போதோ, தும்மும் போதோ அவரிடமிருந்து ‘வைரஸ் கிருமிகள்’ காற்றில் வெளியேற்றப்பட்டு, மற்றவர்களைத் தாக்குகிறது. இது தவிர நோயாளியைத் தொடும்போது கூட இந்த நோய் தொற்றிக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் தான் அம்மை நோய்களை தீவிரமான ஒரு ‘தொற்று நோய்’என்று சொல்கிறோம். கர்ப்பிணிப் பெண்களுக்கு அம்மை நோய் வந்தால் பிரச்னை என்கிறார்களே? கருவுற்றிருக்கும் தாய்மார்களுக்கு அம்மை நோய் வந்தால், அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது. குறிப்பாக, கருவுற்றிருக்கும் முதல் மூன்று மாதங்களில் அம்மை நோய் வந்தால் உடனடியாக பெண்கள் மகப்பேறு மருத்துவரைச் சந்திக்க வேண்டும். சாமி குத்தம் ஆகிவிடும் என்று வீட்டிலேயே இருந்து விடக்கூடாது. ஏனென்றால், குழந்தையின் இதயம் ஐந்தாவது வாரம் வளர ஆரம்பித்து விடுகிறது. அந்த சமயத்தில் அம்மை நோயால் தாய் பாதிக்கப்பட்டாலும், சரியான ட்ரீட்மென்ட் எடுத்துக் கொள்ளாவிட்டாலும் தாயின் வயிற்றில் உள்ள குழந்தையின் இதயத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. அதுமட்டுமில்லை, ஆண் குழந்தைகள், அம்மை நோயால் பாதிக்கப்பட்டு அதற்கு சரியான ட்ரீட்மென்ட் கொடுக்கப்படாவிட்டால், விதைகள் பாதிக்கப்பட்டு அவர்கள் பெரியவர்கள் ஆனபிறகு மலட்டுத் தன்மையும்கூட ஏற்படலாம். அம்மை நோய்க்குத் தடுப்பூசிகள் இருக்கிறதா?  சின்னம்மைக்குக்கூட தற்போது தடுப்பூசிகள் வந்துவிட்டது. குழந்தைப் பருவத்தின் ஓரிரு ஆண்டுகளிலேயே போடப்படும் இந்தத் தடுப்பூசியால், வாழ்நாள் முழுவதும் நோய் பற்றிய பயம் இன்றி இருக்கலாம்.  எம்.எம்.ஆர். என்று சொல்லப்படும் முத்தடுப்பு ஊசியால் மணல்வாரி, பொன்னுக்கு வீங்கி முதலிய அம்மைகள் வராமல் தடுக்கலாம்.  குழந்தை பிறந்து ஒன்பதாம் மாதத்தில் ‘‘மீசல்ஸ் வேசின்’’ என்ற ஊசி மணல்வாரிக்காகத் தனியாகப் போடப்படுவது.  இந்த தடுப்பூசிகளை டாக்டரின் ஆலோசனைப்படி தவறாமல் போட்டுக் கொண்டாலே அம்மை பற்றிய பயமில்லாமல் இருக்கலாம். அம்மை நோய் வருவதை முன்கூட்டியே தெரிந்து கொள்வது எப்படி? சின்னம்மை வருவதற்கு மூன்று, நான்கு நாட்கள் முன்பே காய்ச்சல், ஜலதோஷம், இருமல், உடல்வலி, தலைவலி, கண் எரிச்சல் போன்றவை ஆரம்பிக்கும். பிறகு தோலில் எரிச்சலும், அரிப்பும் ஏற்படும். பிறகு முகம், கழுத்து, முதுகு, மார்பு என்று உடல் முழுவதும் கொப்புளங்கள் வரும். சின்னம்மைக்கு என்றே தனியாக மாத்திரைகள், சிரப், ஆயின்மென்ட்டுகள் இருக்கின்றன. டாக்டரிடம் முதலிலேயே காட்டி ட்ரீட்மென்ட் எடுத்துக் கொண்டால் நோயின் வீரியத்திலிருந்தும், பக்க விளைவுகளிலிருந்தும் தப்பலாம். ட்ரீட்மென்ட் சரியாக எடுத்துக் கொள்ளாத போது வயிற்றுப் போக்கு ஏற்படும். சின்னம்மை ஒரு முறை ஏற்பட்டால், அது ஆயுளுக்கும் திரும்ப வராது. மணல்வாரி அம்மை வந்தாலும் சளி, இருமல், ஜலதோஷம், கண் எரிச்சல் இருக்கும். தாடையின் உள்பகுதிகளில் சிவப்பு கலந்த வெண் புள்ளிகள் தோன்றுவதுதான் இந்த நோயின் அறிகுறி. இந்த அம்மைக்கும் சரியான மருத்துவம் எடுத்துக் கொள்ளாவிட்டால் வயிற்றுப்போக்கு, காதில் சீழ் வடிவது, நிமோனியா போன்ற பிரச்னைகள் ஏற்படும். காதின் கீழ்ப்புறம், தாடையின் கீழ்ப்புறம் காணப்படும் உமிழ்நீர் சுரப்பிகளைத் தாக்கக்கூடியது, ‘பொன்னுக்கு வீங்கி’ அம்மை. தொண்டை வலி, விழுங்குவதில் சிரமம், வாயைத் திறக்கும்போது வலி, காதின் கீழ் வலியுடன் வீக்கம் போன்றவை இதன் அறிகுறிகள். மருந்து மாத்திரைகள் மூலமே வலியையும், வீக்கத்தையும் குறைக்கலாம். அம்மையின்போது என்ன சாப்பிடலாம்? உணவில் காரம், புளிப்பைத் தவிர்ப்பது நல்லது. பழரசம், கஞ்சி, மோர், பழங்கள், இளநீர், குளுக்கோஸ் போன்றவை உடம்புக்கு மிகவும் நல்லது. எல்லாவற்றுக்கும் மேலாக, தனி நபர் சுத்தமும், சுற்றுப்புற சுத்தமும், சரியான நேரத்தில் டாக்டரின் ஆலோசனையும் உங்களை இந்த நோயிலிருந்து காப்பாற்றும்.

Related

ஹெல்த் ஸ்பெஷல் 1517963782921288260

Post a Comment

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement


Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item