பாஸ்போர்ட் வாங்கும் முறை பற்றி விளக்குகிறார் பிராந்திய பாஸ்போர்ட் அதிகாரி

‘‘உண்மையில் இந்த பரபரப்புக்கும் டென்ஷனுக்கும் அவசியமே இல்லை. இங்கே காலில் கஞ்சியைக் கொண்டது போல் கடைசி நேரத்தில் பாஸ்போர்ட் வாங்க வருபவர்கள...

‘‘உண்மையில் இந்த பரபரப்புக்கும் டென்ஷனுக்கும் அவசியமே இல்லை. இங்கே காலில் கஞ்சியைக் கொண்டது போல் கடைசி நேரத்தில் பாஸ்போர்ட் வாங்க வருபவர்கள்தான் டென்ஷனை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். உண்மையில் நிதானமாக விண்ணப்பித்தால், தபால் மூலமே பாஸ்போர்ட், வீடு தேடி வந்துவிடும். அலைச்சலே வேண்டாம். டென்ஷனும் வேண்டாம்.’’ எல்லோருக்கும் வெளிநாடு போகும் வாய்ப்பு இல்லாவிட்டாலும், ஒரு ஐடென்டிடி கார்டாகவாவது பாஸ்போர்ட் வாங்கி வைத்துக் கொள்ளலாம். அல்லது சிலருக்கு எதிர்காலத்தில் வெளிநாடு போகும் வாய்ப்பும் ஏற்படலாம். பாஸ்போர்ட் வாங்குவது என்பதே ரொம்ப கஷ்டமான வேலை என்ற கருத்து எல்லோருக்குமே இருக்கிறது. இதைச் சுலபமாக எப்படி வாங்குவது? முன்பு விண்ணப்பம் பூர்த்தி செய்வது கொஞ்சம் சிக்கலாக இருந்ததாக மக்கள் நினைத்ததால், இப்படித் தோன்றியிருக்கலாம் இப்போது மிக எளிதாக்கி விட்டோம். ஃபார்ம்_1 என்ற விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, 3 பாஸ்போர்ட் அளவிலான ஃபோட்டோக்கள், வசிப்பிடத்துக்கு சான்றாக, ரேஷன் கார்டு, தற்போது உள்ள பேங்க் ஸ்டேட்மெண்ட், டெலிஃபோன் பில், மின்சார ரசீது, தண்ணீர் வரி ரசீது, வாக்காளர் அட்டை, மூன்று வருடத்திற்கான வருமானவரி அசெஸ்மெண்ட் ஆர்டர், புகழ்பெற்ற கம்பெனிகளில் வேலை செய்பவராக இருந்தால், அந்த கம்பெனியின் லெட்டர் ஹெட்டில் இருக்கும் அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர் போன்று மேலே சொன்ன 8 ஆவணங்களில் ஏதாவது ஒன்றையும், வயது சான்றிதழும் இணைத்து, விண்ணப்பத்தைக் கொடுக்க வேண்டும். அரசாங்க அலுவலராக இருந்தால், தடையில்லாச் சான்றிதழையும், (No objection certificate) சேர்த்து கொடுக்க வேண்டும். இங்கே இவ்வளவு கூட்டம் இருக்கிறதே! இந்த கூட்டத்தில் விண்ணப்பிப்பது சிரமமாக இருக்காதா? இங்கே வந்துதான் கொடுக்க வேண்டுமென்பதில்லை. சென்னையைப் பொறுத்தவரை எக்மோரில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகம் அல்லது அண்ணாநகர், அடையாறு மற்றும் பூக்கடையிலுள்ள டெபுடி போலீஸ் கமிஷனர் அலுவலகம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘ஸ்பீட் போஸ்ட்’ அலுவலகங்கள், மற்றும் மாவட்ட பாஸ்போர்ட் மையங்களில் விண்ணப்பங்களை வாங்கி, பூர்த்தி செய்து அங்கேயே தந்துவிட்டுப் போகலாம்! முறைப்படி. போலீஸ் விசாரணை முடிந்ததும், எங்கள் பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு விண்ணப்பங்கள் அனுப்பப்படும். பாஸ்போர்ட் கொடுப்பதும் இங்கேயிருந்துதான்! எல்லாம் சரியாக இருந்தால் ‘ஸ்பீட் போஸ்டில்’ பாஸ்போர்ட் வீடு தேடி வந்துவிடும். இதில் எந்தப் பிரச்னையும் கிடையாது. யாருக்காவது பாஸ்போர்ட் கொடுக்க மறுப்பது உண்டா? பொதுவாக எல்லா இந்தியர்களும், பாஸ்போர்ட் வாங்கத் தகுதியானவர்கள்தான். ஆனால், போலீஸ் விசாரணையில் அவர்களுக்குத் திருப்திகரமாக இல்லையென்றாலோ, அல்லது அவர்கள், ஏதாவது சட்டம் மற்றும் தேச விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிய வந்தாலோ, அவர்களுக்கு பாஸ்போர்ட் தருவதில்லை. ஒரு முறை வாங்கும் பாஸ்போர்ட்டை எத்தனை வருடங்களுக்குப் பயன்படுத்தலாம்? ஒரு முறை கொடுத்த பாஸ்போர்ட்டை பத்து வருடங்களுக்குப் பயன்படுத்தலாம். மீண்டும் அதை அதற்கான கட்டணத்தைக் கட்டிப் புதுப்பித்துக் கொள்ளலாம். ஒன்பது வருடங்கள் முடிந்தவுடன் எப்போது வேண்டுமானாலும் புதுப்பித்துக் கொள்ளலாம். மீண்டும் 10 வருடங்களுக்கு வழங்கப்படும். இப்படி புதுப்பிக்கும்போது, 15 நாட்களுக்குள் புதிய பாஸ்போர்ட் கிடைத்துவிடும். வெளிநாட்டில் வசிக்கும் காலங்களில் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க வேண்டியிருந்தால் என்ன செய்வது? அந்தந்த நாட்டிலுள்ள, இந்திய தூதரகத்தில் சென்று புதுப்பித்துக் கொள்ளலாம். பாஸ்போர்ட் வாங்குவது எவ்வளவு சுலபமாக இருக்கிறது. இதற்குப் போய் எதற்காக டென்ஷனாக வேண்டும்? ரிலாக்ஸ்டாக பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுங்களேன்! ‘தட்காலில்’எப்படி பாஸ்போர்ட் வாங்குவது? முன்பு ‘தட்கால்’ முறையில் பாஸ்போர்ட் வாங்க வேண்டுமென்றால், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற ஏதாவது ஓர் உயர் அதிகாரியிடமிருந்து சான்றிதழ் வாங்கி வரவேண்டும். அவசரத்திற்காகத்தான், அதிக பணம் கொடுத்து பாஸ்போர்ட் வாங்குகிறார்கள். அந்த அவசரத்தில், இந்த சான்றிதழ் வாங்குவது சிரமமாக இருப்பதால், கீழ்வரும் 14 ஆவணங்களில் ஏதாவது மூன்றையும் நோட்டரி பப்ளிக் சான்றளித்த உறுதிமொழிப் பத்திரம் (Affidavit) ஒன்றையும் இணைத்துக் கொடுத்தால் போதும், 7 நாட்களுக்குள் பாஸ்போர்ட் கொடுக்கப்படும். போலீஸ் விசாரணை உண்டு. 1. வாக்காளர் அடையாள அட்டை 2. மத்திய அல்லது மாநில அரசு, பொதுத்துறை அரசு நிறுவனங்கள், உள்ளாட்சித்துறை அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் கொடுக்கப்படும் அடையாள அட்டை. 3. ஜாதி சான்றிதழ் (எஸ்.ஸி./எஸ்.டி./ஓ.பி.சி.) 4. தியாகி அடையாள அட்டை 5. துப்பாக்கி லைசன்ஸ் 6. அசையாச் சொத்துக்களின் ஆவணங்களான பட்டா, பதிவு செய்யப்பட்ட பத்திரங்கள் போன்றவை. 7. ரேஷன்கார்டு 8. பென்ஷன் வாங்குபவராக இருந்தால் அது தொடர்பான ஆவணங்கள். 9. ரெயில்வே அடையாள அட்டை. 10. வருமானவரி அடையாள அட்டை (Pan Card) 11. வங்கி, விவசாயி மற்றும் போஸ்ட் ஆஃபீஸ் பாஸ்புக். 12. படிக்கும் கல்வி நிறுவனத்தில் கொடுக்கப்பட்ட அடையாள அட்டை 13. ஓட்டுனர் உரிமம். 14. பிறப்பு சான்றிதழ் பாஸ்போர்ட் கட்டணம் விண்ணப்பப்படிவம் ரூ.10/_ சாரண பாஸ்போர்ட்டுக்கு ரூ.1,000/_ தட்காலுக்கு ரூ. 2,500/_ 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு ரூ.600/_

Related

உங்களுக்கு உதவும் சட்டங்கள் 8062070615140868909

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item