நாட்டு வைத்தியம் ! வயிறே ரிலாக்ஸ் ப்ளீஸ்!

வயிறே ரிலாக்ஸ் ப்ளீஸ்! அசீரணத்தால் ஏற்படும் வயிற்று வலிக்கு 50 கிராம் ஓமத்தை ஒரு சட்டியில் வறுத்து அதை முறத்தில் கொட்டித் தேய்க்க உமிழ் நீ...

வயிறே ரிலாக்ஸ் ப்ளீஸ்! அசீரணத்தால் ஏற்படும் வயிற்று வலிக்கு 50 கிராம் ஓமத்தை ஒரு சட்டியில் வறுத்து அதை முறத்தில் கொட்டித் தேய்க்க உமிழ் நீங்கிச் சுத்தமாகும். அதைப் புடைத்து அம்மியில் வைத்து அத்துடன் அதே அளவு பனை வெல்லத்தையும் சேர்த்து அரைத்து அதில் சிறிதளவு காலை மாலை இரு வேளை வீதம் சாப்பிட்டு வெந்நீர் அருந்திவர வயிறு குணமாகும். உப்புசமும் நீங்கும். முருங்கை இலையை உப்புச் சேர்த்து லேசாக நசுக்கி கசக்கிப் பிழிந்து வரும் சாற்றில் இரண்டு ஸ்பூன் சாப்பிட உடனே வயிற்றுவலி நீங்கும். வெந்தயத்தை ஓர் இரவு ஊற வைத்த மறுநாள் காலையில் எடுத்து தயிரில் சேர்த்துச் சாப்பிட வயிற்றுவலி குணமாகும். சுக்கு, மிளகு, திப்பிலி வகைக்கு 10 கிராம், பனை வெல்லம் 5 கிராம் இவற்றில் சுக்கைத் தோல் நீக்கிவிட்டு பின் மற்ற சரக்குகளையும் தூளாக்கி அத்துடன் பனை வெல்லத்தையும் சேர்த்து அரைத்துக் காலையில் சிறிதளவு உள்ளுக்கு அருந்தி வர அசீரண சம்பந்த வயிற்றுவலி குணமாகும். குழந்தை வயிற்று வலியால் துடித்தால் வசம்பு சுட்ட சாம்பலுடன் சிறிது தேன் சேர்த்துக் குழைத்து நாக்கில் தடவி விடுவதோடு, வசம்பு சுட்டகரியைச் சிறிது நீர்விட்டு குழைத்து வயிற்றில் கனமான பற்று போட்டுவந்தால் குணமாகும். வயிற்றுக் கடுப்பு அதிகமாக இருக்குமானால் தொட்டால் சிணுங்கி செடியின் இலையை அரைத்து சுண்டைக்காயளவு தயிரில் கலந்து சாப்பிட குணமாகும். சிறிது பெருங்காயத்தை பொரித்து நீர் மோரில் சேர்த்து அத்துடன் கறி மஞ்சள் தூளில் ஒரு சிட்டிகை போட்டு கலக்கி ஒரு நாளைக்கு மூன்று வேளை அருந்தினால் வாயு சம்பந்த வயிற்றுவலி ந>ங்கும். வயிற்றுக்கு மசாஜ் செய்வோம் இருதயம், சுவாசகோசம், வயிறு ஆகிய உறுப்புகளைச் சூழ்ந்துள்ள தசைகள் தன்னிச்சையாக இயங்குபவை. மசாஜ் செய்வதால் அவற்றின் உடனடிப்பலன் எதுவும் ஏற்படாதது போலத் தோன்றலாம். உண்மையில் இதனால் நல்ல பலன்களே விளைகின்றன. வயிற்றில் மசாஜ் செய்வது ஜீரணத்துக்கு உதவுகிறது. ஜீரண உறுப்புகளின் நரம்புகளில் தாராளமாக ரத்த ஓட்டம் ஏற்படச் செய்து, அழிந்து போன திசுக்களையும் ஜீரணமாகாத உணவுச் சக்கைகளையும் வெளியேற்ற உதவுகிறது. உணவிலிருந்து கிரகிக்கப்பட்ட சத்துக்கள் எல்லா உறுப்புக்களையும் சென்றடைவதை விரைவு படுத்துகிறது. உணவுச் சத்துகள் உடலுறுப்புகளுக்குப் பயன்படுத்துவதற்காகவே பலவிதமான உணவுகளை உண்கிறோம். சத்துக்கள் உடலுறுப்புகளுக்கு முழுமையாக பயன்பட மசாஜ் உதவுகிறது. உழைக்கும் போது ஏற்படும் கழிவுப் பொருள்கள் ஓரளவு மீண்டும் சர்க்கரைச் சத்தாக மாற்றப்படுவதும் உண்டு. அப்படி மாற்றப்படாதவை உடலின் நிணநீர் அமைப்பிலுள்ள வடிகட்டும் நுட்பமான முறையினால் வெளியேற்றப்பட வேண்டும். சுரக்கும் நிணநீர் பால்போல வெண்மையாக இருக்கும். கழிவுகள் இதில் வந்து போகும் போது, அதிலுள்ள தீங்கிழைக்கக் கூடிய பாக்டீரியாக்களை அழிப்பதற்காக வெள்ளை அணுக்கள் உண்டாக்கப்படுகின்றன. அதனாலேயே இவ்வாறு வெள்ளை நிறமாகத் தோன்றுகிறது. நிணநீர்க் குழாய்கள் உடல் முழுவதும் அமைந்துள்ளன. ஒரு நாளில் உடல் முழுவதும் இரண்டு லிட்டர் நிணநீரை இது சுற்றி வரச் செய்கிறது. இதைச் சுற்றி வரச் செய்வது சுருங்கி விரியும் தசைகள்தான். மசாஜ் செய்யும் போது இப்படி எளிதாகவும் விரைவாகவும் செய்யப்படுகிறது. நிணநீர்க் கேந்திரங்கள் உடலில் முக்கியமாக ஐந்து இடங்களில் உள்ளன. இரண்டு கைகளிலும், இரண்டு கால்களிலும், மார்பிலும் அவை உள்ளன. முழங்கால்கள், முழங்கைகள், கழுத்தில் சிறிய கேந்திரங்கள் உள்ளன. மார்பு, வயிறு, கை, கால்களை மசாஜ் செய்யும் போது இக்கேந்திரங்களும் விரைந்து செயல்பட தூண்டப்படுகின்றன. நிணநீர் எளிதாகப் பரவி, கழிவுகள் வேகமாக வெளியேற்றப்பட இது உதவுகிறது. உள்ளங் கையைப் பதித்து வட்டமாகச சுழற்றித் தேய்ப்பதன் மூலமும், தட்டுவதன் மூலமும் தசை அதிகமாகவுள்ள இடங்களில் மெல்லப் பிசைந்து விடுவதன் மூலமும் நிணநீர் செய்யும் வேலையை வேகப்படுத்தலாம். இயல்பாக அது தனது பணியைச் செய்து கொண்டுதான் இருக்கும் என்றாலும் மசாஜ் செய்வதால் அது மேலும் தூண்டப்பட்டு அதன் பணி விரைவு படுத்தப்படுகிறது. எலுமிச்சை குணமாக்கும் நோய்கள் பாதாம் கொட்டையின் தோலை உடைத்தெடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு அதை மைபோல அரைத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு அரைக்கப்பட்ட விழுதில் எலுமிச்சம்பழ சாற்றை சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ள வேண்டும். இந்த விழுதைக் கொண்டு அன்றாடம் பல் தேய்த்து வந்தால் பற்கள் நல்ல ஆரோக்கியத்துடன் தூய்மையான வெண்மை நிறத்துடன் காணப்படும்.

Related

நாட்டு வைத்தியம் 6661109605206711013

Post a Comment

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement


Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item