சமையல் குறிப்புகள் ! தக்காளி சால்னா--பயிறு குழம்பு-- கறிவேப்பிலை கெட்டிக் குழம்பு-- வெங்காயச் சாறு

தக்காளி சால்னா தேவையான பொருள்கள் : தக்காளி - 5, கேரட் (நறுக்கியது) - 1/2 கப், பீன்ஸ் (நறுக்கியது) - 1/2 கப், தேங்காய் எண்ணெய் - 20 மில்லி,...

தக்காளி சால்னா தேவையான பொருள்கள் : தக்காளி - 5, கேரட் (நறுக்கியது) - 1/2 கப், பீன்ஸ் (நறுக்கியது) - 1/2 கப், தேங்காய் எண்ணெய் - 20 மில்லி, தேங்காய் - 1 கப், பட்டை, கிராம்பு, ஏலக்காய் - 10 கிராம், கசகசா - 5 கிராம், அன்னாசிப்பூ - 2 கிராம், பச்சை மிளகாய் - 3, முந்திரி (அரைத்தது) - 1 கப், சோம்பு - 5 கிராம், சீரகம் - 5 கிராம், இஞ்சி, பூண்டு விழுது - சிறிது, வெங்காயம் (நறுக்கியது) - 1 கப், உருளைக் கிழங்கு - 1/2 கப். செய்முறை : கேரட், பீன்ஸை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். உருளைக்கிழங்கையும் வெட்டிக் கொள்ளவும். தேங்காய், சோம்பு, சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, பச்சை மிளகாய், கசகசா இவையனைத்தையும் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி, அரைத்துக் கொள்ளவும். பின்னர், முந்திரியை ஊறவைத்து மைய அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை ஊற்றி, அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின் அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின்பு, அதில் பொடியாக நறுக்கிய தக்காளியைச் சேர்த்து நன்றாக வதங்கியவுடன் வெட்டிய காய்கறிகளைச் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைத்த தேங்காய்க் கலவையைச் சேர்த்து நன்றாக வதக்கவும். வறுத்துப் பொடியாக்கிய தனியா மற்றும் முந்திரிபேஸ்ட் சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். காய்கறிகள் வெந்தவுடன் உப்பு சேர்த்து இறக்கினால் தக்காளி சால்னா தயார். ================================================================== பயிறு குழம்பு தேவையான பொருள்கள் : காராமணி பயிறு - 1 கப், பச்சைப் பயிறு - 1 கப், தக்காளி - 2, இஞ்சி (சிறிதாக நறுக்கியது) - 5 கிராம், பூண்டு (சிறிதாக நறுக்கியது) - 5 கிராம், பச்சை மிளகாய் - 3, கடுகு, உளுந்து - தாளிக்க, தேங்காய் (சிறிதாக நறுக்கியது) - 1 கப், மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி, பச்சரிசி (அரைத்தது) - 1/2 கப், உப்பு - தேவையான அளவு, மிளகாய்த் தூள் -10 கிராம், தனியா - 20 கிராம், நல்லெண்ணெய் - 25 மில்லி செய்முறை : காராமணி மற்றும் பச்சைப் பயிறுகளை வேகவைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் காய்ந்தவுடன் அதில் கடுகு, உளுந்து, நறுக்கிய இஞ்சி, பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். பிறகு அதில் வெட்டிய தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் சேர்த்து வதக்கவும். மற்றும் நறுக்கிய பச்சை மிளகாய், சிறிதாக நறுக்கிய தேங்காயைச் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் வேகவைத்த பயிறுகளை அதனுடன் சேர்த்து நன்றாகக் கலக்கவும். வறுத்து அரைத்த தனியா சேர்த்து நன்றாகக் கலக்கவும். நைசாக அரைத்த பச்சரிசியைச் சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். இறுதியில், உப்பு சரிபார்த்து இறக்கினால் பயிறு குழம்பு ரெடி!. ============================================================== கறிவேப்பிலை கெட்டிக் குழம்பு தேவையான பொருள்கள் : கறிவேப்பிலை - 2 கப், சின்ன வெங்காயம் - 1 கப், பச்சை மிளகாய் - 3, இஞ்சி - 5 கிராம், பூண்டு - 5 கிராம், சோம்பு - சிறிது, நல்லெண்ணெய் - 25 மில்லி, கடுகு - சிறிது, முந்திரி - 20 கிராம், வெந்தயம் - 5 கிராம், தக்காளி (அரைத்தது) - 1 கப், மஞ்சள் தூள் - சிறிது, புளித் தண்ணீர் - 1 கப், தனியா - 10 கிராம், உப்பு - தேவையான அளவு. செய்முறை : இஞ்சி, பச்சை மிளகாய், சீரகம், கறிவேப்பிலை, சோம்பு, சின்ன வெங்காயம், கடுகு, முந்திரி இவையனைத்தையும் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி நன்றாக வதக்கவும். அதைச் சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு அதில் கடுகு, சோம்பு, வெந்தயம் சேர்த்து வதக்கவும். பின்னர் அதில் சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். வதங்கியபின் அதில் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் மற்றும் வறுத்து அரைத்து வைத்த மல்லியையும் சேர்த்து வதக்கவும். புளித் தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும். பிறகு, அரைத்து வைத்த கலவையைச் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைக்கவும். இறுதியில், உப்பு சேர்த்து இறக்கினால், கறிவேப்பிலை கெட்டிக் குழம்பு ரெடி. ========================================================= வெங்காயச் சாறு தேவையான பொருள்கள் : தக்காளி - 2, சீரகம் - 10 கிராம், மிளகு - 15 கிராம், சின்ன வெங்காயம் - 1 கப், பூண்டு - 5 பல், கடுகு, உளுந்து -5 கிராம், பெருங்காயத் தூள் - சிறிது, தனியா - 10 கிராம், கறிவேப்பிலை - சிறிது, மல்லித்தழை - சிறிது, உப்பு, காய்ந்த மிளகாய் - தேவையான அளவு, எண்ணெய் - 20 மில்லி செய்முறை : வரமல்லியை (தனியா) நிறம் மாறும் வரை வறுத்துப் பொடியாக்கவும். பிறகு சீரகம், மிளகு, பூண்டு இவற்றை இடித்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். பின்னர், இடித்து வைத்த மிளகு, சீரகம், பூண்டு இவற்றுடன் சேர்த்து வதக்கவும். பின் வறுத்துப் பொடியாக்கிய தனியாவை இதனுடன் சேர்த்து வதக்கவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். பின்பு ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, சிறிது பெருங்காயத் தூள் சேர்த்து வதக்கி அதனுடன் சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து, அதில் நறுக்கிய மல்லித்தழையை சேர்த்து இறக்கினால் வெங்காயச் சாறு தயார்.

Related

சமையல் குறிப்புகள் 6369329707283044385

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item