நபிகள் நாயகம் சொல்கிறார் ! தர்மம் செய்வதின் விதிமுறை--

தர்மம் செய்வதின் விதிமுறை நபிகள் நாயகம் சொல்கிறார் ""நீர் ஆரோக்கியமாக இருக்கும் காலத்திலோ, வறுமை வந்து விடும் என்று பயப்படும் ...

தர்மம் செய்வதின் விதிமுறை நபிகள் நாயகம் சொல்கிறார் ""நீர் ஆரோக்கியமாக இருக்கும் காலத்திலோ, வறுமை வந்து விடும் என்று பயப்படும் காலத்திலோ, இன்னும் அதிக செல்வம் சேரும் என்று எதிர்பார்க்கும் நேரத்திலோ தர்மம் செய்து விட வேண்டும். அதுவே, தர்மத்தில் எல்லாம் தலைசிறந்ததாகும். அதே நேரம், உமது உயிர் தொண்டைக்குழிக்கு வந்து நீர் இறக்கத் துவங்கும் போது, தர்மம் செய்ய ஆரம்பிப்பதில் பலனில்லை. அதனால் என்னபலன் உண்டாக போகிறது? அந்த செல்வம் தான் தானாகவே இன்னொருவரைப் போய் அடைந்து விடுமே!''என்கிறார். சாகப்போகும் வேளையில் புண்ணியம் தேடிப்பயனில்லை. திருமணத்தின் அவசியம் திருமணத்தின் அவசியம் பற்றி சற்று வெளிப்படையாகவே பேசுகிறார் நபிகள் நாயகம். சந்தர்ப்ப சூழ்நிலைகளால் திருமணம் செய்ய இயலாதவர்கள் உடல் ரீதியாகக் கெட்டுப் போகிறார்கள். திருமணம் செய்து மனைவியைக் காப்பாற்றும் வசதியில்லாதவர்கள் தங்கள் உடல் வேட்கைக்காக விலைமாதர்களை நாடுகிறார்கள். இது பெரும் ஒழுக்கக்கேட்டிற்கு வழிவகுக்கிறது. நோய்களை உண்டாக்குகிறது. திருமணம் செய்ய வசதியிருந்தும், ஜாலியாக இருக்கலாம் என்பதன் அடிப்படையில், சிலர் கெட்டு அலைகிறார்கள். அதனால் நாயகம் சொன்னார். ""இளைஞர்களே! உங்களில் திருமணத்தின் பொறுப்பைச் சுமக்கும் சக்தி படைத்தவர் மணம் புரிந்து கொள்ளட்டும். ஏனெனில், திருமணம் பார்வையைத் தாழ்த்துகின்றது. வெட்கத்தலத்தைப் பாதுகாக்கின்றது. பார்வை அங்கும் இங்கும் அலைபாய்வதை விட்டும், காம இச்சை யினால் சுதந்திரமாக திரிவதை விட்டும் பாதுகாக்கிறது. திருமணத்தின் பொறுப்பைச் சுமக்கச் சக்தியற்றவர் இச்சையின் வேகத்தைத் தணித்திட அவ்வப்போது நோன்பு வைத்துக் கொள்ளட்டும்,'' என்று. திருமணம் செய்ய வசதியில்லாதவர்கள், தங்கள் உடல் இச்சையை அடக்க நோன்பு முதலானவற்றில் இறங்கி, மனதைக் கட்டுப்படுத்த வேண் டுமே தவிர, தவறான வழியில் இறங்கி விடக்கூடாது என்று சொல்கிறது இஸ்லாம். நல்ல குணம் நன்மை தரும் ஒரு பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடும் போது, அவர்கள் சரியான பெற்றோராக இருந்தால், ""மாப்பிள்ளை நல்ல அழகா?'' என்று கேட்பதை விட ""மாப்பிள்ளை நல்ல குணமா? கடைசி வரை என் பெண்ணை வைத்து குடும்பம் கழிப்பாரா?'' என்று தான் கேட்பார்கள். நற்குணமுள்ளவர்களையே நபிகள் நாயகம் விரும்பினார். ""எவரையும் துன்புறுத்தாமல் இருப்பதே நற்குணமாகும்'' என்று இஸ்லாம் சொல்கிறது. நாயகம் நற்குணம் உள்ளவராக வாழ்ந்து காட்டினார். அவரது தோழர் ஒருவர் அவரைப் பற்றிக் கூறும் போது, ""அண்ணல் நபிகள்நாயகம் வெட்கமற்ற பேச்சை தம் நாவால் பேசுவதுமில்லை. வெட்கமற்ற செயலைச் செய்வதுமில்லை. மேலும் "உங்களில் நற்குணமுடையவரே உங்களில் சிறந்தவர் ஆவார்' என்று கூறுவார்,'' என்றார். நல்ல குணம் நன்மையைத் தரும். குறையை திருத்திக் கொள்ளுங்கள் குர்ஆனில், ""உங்களில் ஒருவர் மற்றொரு சகோதரருக்கு கண்ணாடி போன்றவர்கள் ஆவர். எனவே, தம் சகோதரரிடம் ஒரு குறையைக் கண்டால், அதனைக் களைந்து விட முயற்சி செய்ய வேண்டும்,'' என்ற வசனம் இருக்கிறது. அதாவது, மனிதன் இன்னொரு மனிதனை தன் சொந்தச் சகோதரனாகவே கருத வேண்டும். தம்பி முன்னேற அண்ணனும், அண்ணனின் குறைபாட்டை தம்பியும் எடுத்துச் சொல்லி திருத்தலாம். இவர்கள் ஒரே தாய் வயிற்றில் பிறந்தவர்கள் என்பதால் சுட்டிக்காட்டுவது எளிது. ஆனால், நண்பர்கள் விஷயத்திலும், பிற உறவினர்கள் விஷயத்திலும் கொஞ்சம் கவனம் வேண்டும். சிலர் தன்னுடைய சொந்த விஷயங்களில் பிறர் தலையிடுவதை விரும்புவதில்லை. எனவே, அவர்களிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லி திருத்த வேண்டும். நாம் சொல்வதை ஒருவர் கேட்கமாட்டார் எனத்தெரிந்தால், அப்போதைக்கு ஒத்தி வைத்து விட்டு சந்தர்ப்பம் பார்த்து பேச வேண்டும். ஒருவரின் குறையை மற்றொருவரிடம் சொல்லி அவர் மூலமாக திருத்த முயற்சிப்பது தவறான முயற்சி. ஏனெனில், இது புறங்கூறுவது போல் ஆகி, பகையை உண்டாக்கி விடும். எனவே, ஒருவர் நமது குறையைச் சுட்டிக்காட்டினால், அதில் உண்மையிருக்கும் பட்சத்தில் அந்த விமர்சனத்தை ஏற்று, திருத்திக் கொள்ள வேண்டும்.

Related

அமுத மொழிகள் 6136850423811630741

Post a Comment

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement


Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item