சிக்கன பாலிசி... சூப்பர் பாதுகாப்பு! அட்டகாசமான 5 திட்டங்கள்!

அட்டகாசமான 5 திட்டங்கள்! சிக்கன பாலிசி... சூப்பர் பாதுகாப்பு! நெருப்பு என்று சொன்னால் வாய் வெந்துவிடப் போவதில்லை. பழமொழிதான் என்றாலும், இன...

அட்டகாசமான 5 திட்டங்கள்! சிக்கன பாலிசி... சூப்பர் பாதுகாப்பு! நெருப்பு என்று சொன்னால் வாய் வெந்துவிடப் போவதில்லை. பழமொழிதான் என்றாலும், இன்ஷ¨ரன்ஸ் பற்றிப் பேசும்போது இந்த வார்த்தைப் பிரயோகத்தைத் தவிர்க்க முடியாது. ஆரம்பத்தில் மக்களின் பாதுகாப்பு அரசாங்கத்தின் பொறுப்பு என்பதுபோல, இந்தத் துறையில் அரசு நிறுவனங்கள் மட்டும்தான் இயங்கிக்கொண்டிருந்தன. சில வருடங்களுக்கு முன்னால் தனியார் துறையும் இன்ஷ¨ரன்ஸ் துறையில் நுழையலாம் என்று அரசு அறிவித்தபிறகு, பல நிறுவனங்கள் களத்தில் குதித்தன. அதன்பிறகுதான் இன்ஷ¨ரன்ஸ் துறையில் பெரிய மறுமலர்ச்சி ஏற்பட்டது. ஆனாலும், உயிர்காக்கும் ஆயுள் இன்ஷ¨ரன்ஸ் எடுத்துக்கொண்டிருக்கும் மக்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு. வாகன இன்ஷ¨ரன்ஸ், மெடிக்ளைம் போன்ற பொதுக்காப்பீடும் இந்த நிலையில்தான் இருக்கின்றன. பொறுப்புகளைச் சுமக்கும் மனிதர்கள் அனை வருக்கும் இன்ஷ¨ரன்ஸ் தேவை என்பதை உணர்ந்தேதான் இருக்கிறார்கள். ஆனால், எந்த பாலிசி எடுப்பது, எவ்வளவு தொகைக்கு எடுப்பது என்பதில் தெளிவு இல்லாமல் இருக்கிறார்கள். இந்தக் கட்டுரை கொஞ்சம் தெளிவுபடுத்தத் தூண்டுதலாக இருக்கும். சீட் பெல்ட் போடுகிறோம், ஹெல்மெட் போடுகி றோம், கவனமாக வண்டிகளைக் கையாளுகிறோம். எல்லாமே உயிரைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளத் தானே..! அதேபோலத்தான் லைஃப் இன்ஷ¨ரன்ஸ§ம்! எல்லோருமே ஓர் ஆயுள் காப்பீட்டு பாலிசி எடுக்க வேண்டியது கட்டாயம். அந்த ஆயுள் காப்பீடு என்பது ஒருவருடைய இழப்பின்போது அவரைச் சார்ந்து இருப்பவர்களுக்குப் பொருளாதார ரீதியாகக் கைகொடுத்துக் காப்பதற்குத்தான்! அதில் லாப நோக்கம் தேவையில்லை. எனவே, ஆயுள் காப்பீட்டுக்கான பாலிசியாக எல்லோரும் தேர்வு செய்யவேண்டியது டேர்ம் இன்ஷ¨ரன்ஸ் பாலிசிகளைத்தான்! மற்றவகை பாலிசிகள் இருந்தாலும், முக்கியமாக டேர்ம் இன்ஷ¨ரன்ஸ் கையில் இருக்க வேண்டும். குறைவான பிரீமியத்தில் அதிக ரிஸ்க் கவர் தருபவை. ஆண்டு வருமானத்தைப் போல, ஏழு முதல் பத்து மடங்கு தொகைக்கான பாலிசி எடுத்துக்கொள்ளலாம். பாலிசி எடுப்பவரின் வயது, செலுத்தும் வருடங்கள், பாலிசித் தொகை போன்ற வற்றின் அடிப்படையில் பிரீமியம் இருக்கும். வயதின் அடிப்படையில் பார்க்கும்போது 18 வயது முதல் 55 வயதுள்ளவர் வரை எடுக்கலாம். இந்த வகை இன்ஷ¨ரன்ஸ்கள் அதிகபட்சம் 60 வயது வரை காப்பீடு வழங்குகிறது. பாலிசிதாரருக்கு உயிரிழப்பு நேராதபோது, கட்டிய பிரீமியம் திரும்பக் கிடைக்காது என்பதால், பலரும் இதைத் தேர்வு செய்வதில்லை. அதோடு பிரீமியம் குறைவாக இருப்பதால், கமிஷனும் அதிகமாகக் கிடைக்காது. எனவே, ஏஜென்ட்கள் பலரும் இதை சிபாரிசு செய்வதில்லை. பாலிசியின் இறுதியில் பாலிசிதாரருக்கு உயிரிழப்பு நேராத சமயத்தில் கட்டிய பிரீமியத்தைத் தரும் (ஆர்.ஓ.பி.) பாலிசிகள் புதிதாக அறிமுகமாகி இருக் கிறது. இதனால், கட்டிய பிரீமியம் வீணாகிறதே என்ற கவலையில் டேர்ம் பாலிசியை புறக்கணிக்கும் பலரும் ஆர்.ஓ.பி. பாலிசியை தேர்வு செய்யலாம். ஆனால், இதற்கான பிரீமியத் தொகை முன்னதைவிட அதிகம். எதிர்பாராமல் நடக்கும் செயல்களையும் எதிர் பார்த்துத் திட்டமிட்டுக் கொண்டால்தான் சிறப்பாக வாழமுடியும் என்பார்கள். அப்படி திட்டமிட்டுக் கொள்வதுதான் பர்சனல் ஆக்ஸிடென்ட் இன்ஷ¨ரன்ஸ் பாலிசி! வாகனம் இருக்கிறதோ, இல்லையோ விபத்துக் காப்பீடு செய்துகொள்ள வேண்டியது அவசியம். உயிரிழப்பு என்றில்லை, விபத்தில் சிக்கி ஊன மடைந்து உழைக்கும் திறன் பாதிக்கப்பட்டால்கூட, இழப்பீடு பெற்று வாழ்க்கையைத் தொடர இது வழிவகுக்கும். இந்தியாவில் ஆண்டுக்கு சாலை விபத்தில் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 12 லட்சம் என்கிறது சமீபத்தில் டெல்லி ஐ.ஐ.டி. வெளியிட்ட புள்ளிவிவரம். நிரந்தர மற்றும் பாதி ஊனம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 20 மில்லியனிலிருந்து 50 மில்லியன்வரை என்கிறது. இதுபோன்ற விபத்துகளைச் சந்திக்க நேரும்போது வாழ்க்கையையே தொலைத்துவிட்டு நிற்காமல், காப்பாற்றுவது விபத்து பாலிசிதான். இதுபோன்ற பாலிசிகளுக்கான பிரீமியமும் மிகக்குறைவுதான்! இதற்கு மருத்துவப் பரிசோதனைகளோ, பழைய நோய் பற்றிய அறிக்கைகளோ தேவையில்லை. விபத்தில் ஒருவருக்குப் பாதிப்பு ஏற்பட்டாலோ அல்லது மரணம் சம்பவித்தாலோ காப்பீட்டுத் தொகை வழங்கப்படும். டேர்ம் இன்ஷ¨ரன்ஸ§ம் எடுத்து இதுவும் எடுத்திருக்கும் நிலையில், ஒருவர் விபத்தில் மரணம் அடைந்தால், அதற்கு இரண்டு பாலிசிகளின் காப்பீட்டுத் தொகையும் வழங்கு கிறார்கள். மாத வருமானத்தைப் போல 60\72 மடங்கு வரை எடுத்துக்கொள்ள முடியும். டேர்ம் பாலிசிக்கானதை விட, இந்த விபத்துக் காப்பீட்டு பாலிசிக்கான பிரீமியம் குறைவு என்பதால், தங்களுக்கு பெரிதாக லாபம் கிடைக்காது என்று பல கம்பெனிகள் இதைச் சீண்டுவதில்லை. ஆனால், டேர்ம் இன்ஷ¨ரன்ஸைப் போலவே எல்லோரிடமும் இதுவும் இருக்க வேண்டும். மரணத்தில் இருந்தும் விபத்துகளில் இருந்தும் பொருளாதார ரீதியாக பாது காத்துக்கொள்வதைப் போலவே, மருத் துவச்செலவுகளில் இருந்தும் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது முக்கியம். இன்றைய சூழ்நிலையில் மருத்துவம் என்பது கொஞ்சம் பெரிய விலை கொடுக்கும் விஷயமாகி விட்டது. அதற்கு தயார்படுத்திக்கொள்ளும் முயற்சிதான் மெடிக்ளைம் இன்ஷ¨ரன்ஸ் எனப்படும் மருத்துவக் காப்பீட்டு பாலிசிகள்! வாழ்நாள் முழுக்க சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தைக் கொண்டுபோய், மருத்துவச் செலவுகளுக்குக் கொடுப்பது என்பது மிகவும் வேதனையான விஷயம். அதனால், நம்முடைய மாதாந்திரச் செலவுகளுக்கு நடுவில் மருத்துவச் செலவுகளுக்கும் திட்டமிட்டுக்கொண்டால், எதிர்பாராமல் செலவு ஏற்படும்போது தவிக் காமல் இருக்க முடியும். இதயநோய், சிறுநீரகப் பிரச்னை என்று பெரிய நோய்களால் பாதிக் கப்படும்போது ஏற்படும் செலவுகள் மிடில் கிளாஸ் சக்திக்கு மீறியதாக இருக்கிறது. அதுபோன்ற நேரங்களில் இந்த மெடிக்கல் இன்ஷ¨ரன்ஸ் துணையாக இருக்கும். இப்போது சிறுசிறு நிறுவனங்கள்கூட, தங்கள் ஊழியர்களுக்கு மருத்துவக் காப்பீட்டு வசதியைச் செய்து தருகின்றன. அதனாலேயே பலர் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களுக்கான மெடிக்கல் இன்ஷ¨ரன்ஸ் பற்றி யோசிப்பதில்லை. அலுவலகத்தில் தங்களுக்கு எடுக்கும்போதே குடும்பத்தினரையும் அதில் இணைத்துக்கொள்ளலாம். அதற்கான வசதியைக் கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும். மருத்துவக் காப்பீட்டு பாலிசி எடுக்கும்போது, இன்ஷ¨ரன்ஸ் நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் க்ளைம்களை அவை சரியான நேரத்தில் விரைவாகக் கொடுத்து வழங்குகின்றனவா என கவனிக்க வேண்டும். அத்துடன், மருத்துவமனைகளில் கேஷ்லெஸ் செட்டில்மென்ட் க்ளைம் தரும் வசதி தருகிறதா எனப் பார்க்க வேண்டும். பாலிசி எடுத்திருக்கும் காலத்தில் மருத்துவச் செலவுகள் ஏதும் ஏற்படாவிட்டால் அடுத்த ஆண்டு ஒருகுறிப்பிட்ட தொகையை போனஸாகப் பெற்றுக் கொள்ளலாம். உயிருக்கு அடுத்து எல்லோருமே முக்கியமாக நினைப்பது வீட்டைத்தான்! பலருக்கு வாழ்க்கையில் சொந்த வீடு என்பதே ஒரு லட்சியமாக இருக்கும். ஆனால், எதிர்பாராத பேரிடர் வந்து, அந்த வீட்டுக்கு ஆபத்து ஏற்பட்டால்... நிலைமை என்னாவது? மஹாராஷ்டிர மழை வெள்ளம், குஜராத் நிலநடுக்கம், சென்னை சுனாமி எல்லாம் எத்தனை பேரின் கனவு இல்லங்களைக் காவு வாங்கியிருக்கும். அதுபோன்ற சூழலில் மீண்டும் வாழ்க்கையை பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்க வேண்டியதாகி விடும். அப்போது நம்மைக் கைதூக்கிவிட, ஒரு பாதுகாப்பு நடவடிக்கை தேவை. அதுதான் ஹோம் இன்ஷ¨ரன்ஸ்... வீட்டுக் காப்பீடு! இதனை பொதுக்காப்பீட்டு நிறுவனங்கள் வழங்குகின்றன. இந்த வகை பாலிசிகள் பற்றிய விழிப்பு உணர்வு அதிகம் இல்லாமலே, பலரும் நிறைய இழப்பைச் சந்திக்கின்றனர். ஒரு குடும்பத்தினரின் பாதுகாப்பு எப்படியோ அதைப் போலவே, குடியிருக்கும் வீடும், அதிலுள்ள பொருட் களையும் காக்கவேண்டியது கடமை அல்லவா! எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு சிறிய விலை கொடுப்பதில் தவறில்லை. கட்டிய வீட்டுக்கு, இயற்கை மற்றும் மனிதனால் உண்டாகும் சேதத்துக்கு இழப்பீடு தருகிறது. பயன்படுத்தும் ஏரியா (பில்டப் ஏரியா) கணக்கிட்டு வீட்டின் உண்மையான மதிப்பின்படி (மார்க்கெட் வேல்யூ கிடையாது) இன்ஷ¨ரன்ஸ் வழங்கப் படுகிறது. பழைய வீடுகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் என அனைத்துக்கும் பாலிசி எடுத்துக்கொள்ளலாம். வீட்டின் ஒரு பகுதியை புதிதாகக் கட்டும்போது அதற்குண்டான காப்பீட்டையும் அதிகரித்துக் கொள்ள முடியும். இதுவே, பொருட்களுக்கு வழங்கும்போது அன்றைய மார்க்கெட் விலையை மதிப்பாக எடுப்பார்கள். தேய்மானச் செலவுகளைக் கழித்துவிடுவார்கள். இதில் தங்கம் வெள்ளி நகைகளுக்குத் தேய்மானம் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. பொருட்களுக்கு ஏற்ப இழப்பீடுகள் மாறுபடும். வீட்டில் உள்ள டி.வி., ஃப்ரிஜ் போன்றவை உடைந்தாலும், மின்சாரம் மற்றும் இன்ஜின் ரிப்பேர் ஆனாலும் அவற்றுக்குண்டான சரிசெய்யும் செலவை தேய்மானத்தைக் கணக்கில் கொள்ளாமல் நிறுவனங்கள் வழங்குகின்றன. ஒரே ஒரு விஷயம் பத்துவருடத்துக்கும் மேலான பொருட்களுக்குக் காப்பீடு வழங்குவதில்லை. மேற்சொன்ன இரண்டு காப்பீடுகளைத் தனியாகவோ அல்லது இரண்டும் சேர்த்தும் எடுத்துக்கொள்ளலாம். வாடகை வீட்டில் உள்ளவர்கள், வீட்டிலுள்ள விலை உயர்ந்த பொருட்களுக்கு காப்பீடு எடுத்துக்கொள்ள முடியும். இன்னும் என்ன விடுபட்டிருக்கிறது என்று கொஞ்சம் யோசித்தால் நீங்களே சொல்லிவிடுவீர்கள், மோட்டார் இன்ஷ¨ரன்ஸ் என்று! வாகனம் வைத்திருக்கும் எல்லோருமே வாகனக் காப்பீடும் வைத்திருக்க வேண்டும். அது அவர்களுக்கு மட்டு மல்ல... சாலையில் நடமாடும் மற்றவர்களுக்கும் நல்லது. தேர்ட் பார்ட்டி இன்ஷ¨ரன்ஸ் என்ற பிரிவைக் கொண்டிருக்கும் வாகனக் காப்பீடு, வாகனத்தில் அடிபடும் மற்றவர்களுக்கும் காப்பீடு தருகிறது. இதில் தேர்ட் பார்ட்டி இன்ஷ¨ரன்ஸ் என்பது அவசியம். இது இல்லாமல் வாகனக் காப்பீட்டு பாலிசிகள் தருவதில்லை. தனிநபர் விபத்து, வண்டி சேதம் போன்ற இன்ஷ¨ரன்ஸ் எடுப்பது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. இவற்றைத் தனித்தனி யாகவோ அல்லது மொத்தமாகவும் எடுத்துக்கொள்ள முடியும். கார்களில் ஓட்டுநர், உரிமையாளர் தவிர, உடன் பயணம் செய்பவர்களுக்கும் இழப்பீடுகளைத் தரும் காப்பீடுகள் தனித் தனியாக உள்ளது. இவற்றையும் சேர்த்து எடுத்துக்கொண்டால், இதில் யார் பாதிக்கப் பட்டாலும் அதற்குரிய இழப்பீட்டுத் தொகையை நிறுவனம் வழங்கும். இந்த ஐந்து பாலிசிகளும் கையில் இல்லையென்றால், உடனடியாக வாங்கும் முயற்சியில் இறங்குங்கள்! சூழ்நிலையை எதிர்கொள்ள இன்ஷ¨ரன்ஸ் கேடயம் அவசியம்!& ஹோம் இன்ஷ¨ரன்ஸ் ஐ.சி.ஐ.சி.ஐ. லம்பார்ட் நிறுவனத்தின் விற்பனை பிரிவு தலைவர். ‘‘வீடு மட்டுமல்ல... டி.வி., ஃப்ரிஜ், ஏ.ஸி, வாஷிங் மெஷின், டி.வி.டி, கட்டில் போன்ற பொருட்கள்கூட, நம்முடைய உழைப்பைப் பிழிந்து வாங்கியவையாக இருக்கும். அவற்றுக்கு ஒரு சேதம் என்றால் தாங்கமுடியுமா? அந்த நிலையில் இன்ஷ¨ ரன்ஸின் உதவி ஆறுதலாகவும், அர்த்தமுள்ளதாகவும் இருக்கும். இவை வீடு மற்றும் பொருட்கள் மீது இன்ஷ¨ரன்ஸ் கவர் செய்வதோடு, பாதிப்பு (தீ, திருட்டு, இயற்கை பேரழிவு), இழப்பு ஏற்பட்டால் அதற்கான இழப்பீடு களையும் தருகிறது.’’ சாஃப்ட்வேர் நிறுவன உயரதிகாரி. ஹோம் இன்ஷ¨ரன்ஸ் பாலிசி எடுத்தவர். ‘‘எனது வீட்டுக்கும் அங்கு இருக்கும் பொருட் களுக்கும் சிறு பாதிப்பு வந்தாலும் சரிசெய்ய நிறைய செலவாகும். எனவே, வீடு மற்றும் பொருட்களுக்கு ஒரு கோடியே ஐம்பது லட்சத்துக்கு காப்பீடு எடுத் துள்ளேன். இதற்கான ஆண்டு பிரீமியம் 17,500 ரூபாய். ஒரு நாளுக்கு என்னுடைய வீடு மற்றும் பொருட்களின் பாதுகாப்புக்காக சுமாராக 50 ரூபாய் செலவழிக்கிறேன். அதனால், நானும் என் குடும்பமும் நிம்மதியாகத் தூங்குகிறோம். அதுதானே முக்கியம்.’’ மெடிக்ளைம் பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்ஷ¨ரன்ஸ் நிறுவனத்தின் சென்னை மண்டல மேலாளர். ‘‘இன்று அதிகரித்து வரும் மருத்துவச் செலவுகளைச் சமாளிப்பது பலராலும் முடியாத காரியம். அதற்கு மருத்துவ பாலிசிகள் மட்டுமே நல்ல தீர்வு! இதைக் குடும்பத்துக்கான பாலிசியாகவே எடுத்துக்கொள்வது நல்லது. பிறந்து மூன்றே மாதமான குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, இந்தக் காப்பீட்டை எடுத்துக்கொள்ள முடியும்.’’ தனியார் மருத்துவமனை டாக்டர். தன் குடும்பத்துக்கு மெடிக்ளைம் பாலிசி எடுத்திருக்கிறார். ‘‘மருத்துவமனையில் அனுமதித்து விட்டு, பணத்தைத் திரட்ட, பலர் படும் கஷ்டத்தை டாக்டர் தொழிலில் தினமும் பார்க்கிறேன். இதை மனதில் கொண்டே எனக்கும் எனது மனைவி, மகள் மற்றும் மகன் அனைவருக்கும் தலா ஒரு லட்சத் துக்கான மருத்துவ பாலிசியை எடுத் துள்ளேன்.’’ கணபதி சுப்ரமணியன், பர்சனல் ஆக்ஸிடென்ட் பாலிசி எடுத்தவர். ‘‘பத்து வருடங்களுக்கு முன்னால் ஒரு மழைநேரத்தில் பெரிய பள்ளத்தில் தவறி விழுந்துவிட்டேன். அதில் பெரிய அளவில் காயம்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டேன். அப்போது ஏற்பட்ட மருத்துவமனைச் செலவுகளுக்கு விபத்து காப்பீடுதான் உதவியாக இருந்தது. இந்த பாலிசியில் உள்ள சிறப்பே, வீதியில் மட்டுமல்ல... வீட்டுக் குளியலறையில் விபத்து நடந்தாலும் இழப்பீடு கிடைக்கும் என்பதுதான்.’’ பர்சனல் ஆக்ஸிடென்ட் பாலிசி மூத்த துணைத்தலைவர் (ரீடெய்ல் இன்ஷ¨ ரன்ஸ்) சோழமண்டலம் ஜெனரல் இன்ஷ¨ரன்ஸ் ‘‘விபத்துக் காப்பீட்டு பாலிசிகள், விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டால் மட்டுமல்ல... தற்காலிக, நிரந்தர ஊனம் ஏற்பட்டாலும் இழப்பீட்டுத் தொகை கிடைக்கும். டேர்ம் பாலிசிகளைப் போலவே, பர்சனல் ஆக்ஸிடென்ட் பாலிசிகளும் அவசியம் கையில் இருக்க வேண்டும்.’’ டேர்ம் பாலிசிகள் .ஐ.சி\யின் பிராந்திய (மார்க்கெட்டிங்) மேலாளர். ‘‘முன்பைவிட மக்க ளிடையே டேர்ம் பாலிசிகள் பற்றி நல்ல விழிப்பு உணர்வு ஏற்பட்டிருக்கிறது. அதற்கு வீட்டுக் கடனும் முக்கியமான காரணம். வீடு வாங்கும்போது, அதன் வங்கிக் கடனுக்கு இணையாக டேர்ம் பாலிசிகளை எடுத்துக் கொண்டால், கடன் வாங்கியவர் மரணமடைந்தால், வங்கிக் கடனை இந்த பாலிசி கவர் செய்துகொள்ளும்.’’ ஏழு லட்ச ரூபாய்க்கு டேர்ம் பாலிசி எடுத்திருக்கிறார். ‘‘என்னை நம்பி வயதான பெற்றோர் இருக்கிறார்கள். நாளைக்கே என்னு டைய குடும்பம் மனைவி, குழந்தை என இன்னும் விரிவடைய லாம். அப்போது என்மீது சுமத்தப்படும் பொறுப்பு களும் அதிகமாகும். நாளைக்கு என்ன லாபம் கிடைக்கும் என்று பார்த்து இன்ஷ¨ரன்ஸ் எடுப்பதைவிட, ஒரு நஷ்டம் ஏற்படும்போது அதிக இழப்பீடு கிடைக்கும் என்றுதான் பார்க்க வேண்டும்.இதுபோன்ற சூழலில் என்னைச் சார்ந்து இருப்பவர்களைக் கலங்க விடாமல் பார்த்துக்கொள்ள டேர்ம் பாலிசிதான் சரி!” மோட்டார்இன்ஷ¨ரன்ஸ் , யுனைடெட் இந்தியா அஸ்ஷ¨ரன்ஸ் நிறுவனத்தின் பொதுமேலாளர். ‘‘மோட்டார் வாகனச் சட்டப்படி, வாகனங்களுக்கு மோட்டார் இன்ஷ¨ரன்ஸ் என்பது அவசியம். ஏனென்றால் சாலையில் செல்பவர்களுக்கான (தேர்ட் பார்டி இன்ஷ¨ரன்ஸ்) பாதுகாப்பு முக்கியம். சிறிய தொகையாகத்தான் பிரீமியம் இருக்கும். ஆனால், தேவைப்படும் சூழ்நிலையில் பெரிதாகக் கைகொடுக்கும்.’’ சென்னையில் கட்டுமான நிறுவனத்தை நடத்தி வரும் திருமுருகன் விபத்துக் காப்பீடு பாலிசி எடுத்திருக்கிறார். ‘‘காரில் உட்காரும்போதே, இன்று எந்தச் சிக்கலும் இல்லாமல் வீடு திரும்ப வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் செல்வேன். ஆனால், சிக்கல் வரும்போது சமாளிக்க, மோட்டார் இன்ஷ¨ரன்ஸ் என்ற துணை இருந்தால் கூடுதல் பலம்!’’

Related

கம்பெனி தொடங்குவதற்கு முன் நாம் செய்ய வேண்டிய வேலைகள்

நீங்கள் ஒரு பிஸினஸ் செய்கிறீர்கள் என்றால், பொதுவாக அந்த நிறுவனத்தை கம்பெனி என்றுதான் சொல்லுவோம். ஆனால், பிஸினஸை தனி நபர் வியாபாரம், கூட்டு வியாபாரம் மற்றும் கம்பெனி என்று மூன்று விதமாக பிரிக்கலாம். இ...

கியாரண்ட்டி’ என்றால் ‘உத்திரவாதம்’ என்பது வாரண்டி என்றால் ‘சர்வீஸை’க் குறிப்பது.

கியாரண்ட்டி’ என்றால் ‘உத்திரவாதம்’ என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. ‘வாரண்ட்டி’ என்பதும் கிட்டத்தட்ட அதே பொருளைக் குறிக்கும் சொல்தான். ஆனால் சட்டத்தின் பார்வையில் ‘கியாரண்டி’ என்றால் ‘பொருளை மாற்றிக் க...

பாஸ்போர்ட் வாங்கும் முறை பற்றி விளக்குகிறார் பிராந்திய பாஸ்போர்ட் அதிகாரி

‘‘உண்மையில் இந்த பரபரப்புக்கும் டென்ஷனுக்கும் அவசியமே இல்லை. இங்கே காலில் கஞ்சியைக் கொண்டது போல் கடைசி நேரத்தில் பாஸ்போர்ட் வாங்க வருபவர்கள்தான் டென்ஷனை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். உண்மையில் நிதானமாக...

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

Sunday - Nov 24, 2024 9:21:55 AM

No. of Posts

8665 Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

16,086,608

Advertisement

Contributors

Popular PostsBlog Archive

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item