இந்த ஃபாஸ்ட் யுகத்தில் உடலுக்குக் கொஞ்சமும் ஒத்துக் கொள்ளாத ஜங் ஃபுட்களை சாப்பிட்டு ஹெல்த்தைத் தான் கெடுத்துக் கொள்கிறோம். ஆனால் நம் முன்னோ...

இந்த ஃபாஸ்ட் யுகத்தில் உடலுக்குக் கொஞ்சமும் ஒத்துக் கொள்ளாத ஜங் ஃபுட்களை சாப்பிட்டு ஹெல்த்தைத் தான் கெடுத்துக் கொள்கிறோம். ஆனால் நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்த ‘‘உணவே மருந்து’’ என்ற கான்செப்ட்டை ஃபாலோ பண்ணிப் பாருங்கள். உங்களுக்குத் தேவையான சத்துக்கள் கிடைப்பதோடு, வியாதிகளிலிருந்தும் வருமுன் காத்துக் கொள்ளலாம்!
இதயத்தைப் பாதுகாக்க...
இதயத்தைப் பாதுகாக்கணுமா, ஒரு கைப்பிடி நட்ஸ் பாதம், பிஸ்தா... தினமும் சாப்பிடுங்கள். இதய சம்பந்தமான பிரச்னை வருவதற்கான வாய்ப்புகள் பெருமளவு குறைகிறது என்கிறது ஆராய்ச்சி. நட்ஸ§க்கும் இதயத்திற்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா? நட்ஸில் இருக்கும் ஒரு விதமான கூட்டுப் பொருள் இதய பிரச்னை வருவதற்கான வில்லனாக இருக்கும் ‘லிஞிலி’ என்கிற கெட்ட வகை கொலஸ்ட்ராலுடைய அளவைப் பெருமளவு குறைக்கிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்!
எந்த மாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்?
பூண்டு : கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும் ஒரு அற்புதமான மருந்து இது. பூண்டின் வாசனை சில பேருக்குப் பிடிக்காமல் இருக்கும். ஆனால் அதையெல்லாமல் பெரிதாக நினைக்காமல் பூண்டைப் பயன்படுத்துங்கள். உங்கள் உடம்பு கலகலவென ஆரோக்கியமாக இருக்கும்.
வெங்காயம் : வெங்காயத்தையும் அற்பமாக நினைத்து விடாதீர்கள். இதில் இருக்கின்ற ஸல்ஃபர் கூட்டுப் பொருள், ரத்தம் க்ளாட்டாவதைப் பெருமளவு தடுக்கிறது. (நம் உடலில் சீராக ஓடிக் கொண்டிருக்கிற ரத்த ஓட்டம் திடீரென்று தடைபட்டால் பிரச்னை தானே!) அதனால் உணவில் எவ்வளவுக்கு எவ்வளவு வெங்காயம் சேர்த்துக் கொள்கிறீர்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு உங்கள் உடம்புக்கு நல்லது.
ஓட்ஸ் : ஓட்ஸில் இருக்கின்ற ‘பயோஃபிளேவனாய்ட்ஸ்’ இதயத்திற்கு மிகவும் நல்லது.
திராட்சை : ‘திராட்சை’ பழத்தை சாதாரணமாக நினைப்பவரா நீங்கள்? முதலில் உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். காரணம் திராட்சைப் பழ ஜூஸ் உங்கள் இதயத்திற்கு உற்ற நண்பன். அதுமட்டுமல்ல, க்ரீன் டீயும் உங்கள் ஹார்ட்டை நீண்ட நாள் வாழ வைக்கும்.
பளிச் பார்வைக்கு
மிஸ்டர் மீன், கண்களின் க்ளோஸ் ஃபிரெண்ட். குறிப்பாக சால்மன் வகை மீன்களில் இருக்கும் ‘ஓமேகா_3’, ஃபேட்டி ஆசிட்ஸ் இதயத்திற்கும், கண்களுக்கும் அத்தனை நல்லதாம். வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று சால்மன் வகை மீன்களைச் சாப்பிடுபவர்களுக்கு வயதாகும் போது ஏற்படும் பார்வைக் குறைபாடுகள், (அதாவது படிக்க, வாகனம், ஓட்டும் போது கண்கள் சரியாகத் தெரியாமல் இருப்பது.) பெருமளவில் வராமல் தடுக்கிறதாம். அதுமட்டுமில்லை, கேட்ராக்ட் போன்ற பிரச்னைகள் வராமலும் மீன் உணவு பாதுகாக்கிறது.
கண்களுக்கு ஏற்ற உணவுகள்
பசலைக் கீரை : பசலைக் கீரையில் இருக்கும் லூடின் என்கிற பொருள், கண்களின் பார்வையைப் பாதிக்கும் ஒளிக் கதிர்களைத் தடுத்து, பளிச் பார்வையைத் தருகிறது.
ப்ரகோலி : பார்ப்பதற்கு சிறிய சைஸ் காலிஃப்ளவர் போல் இருக்கும் பச்சை நிறக் காய் இது. கேட்ராக்ட் வராமல் தடுக்கும் சக்தி ப்ரகோலிக்கு உண்டு.
ஆரஞ்சு நிறப் பழங்கள் : ஆரஞ்சு நிறப் பழங்கள் கண்களுக்கு மிகவும் நல்லது. அதேபோல் ‘கேரட்’ கூட கண்களுக்கு நல்லது.
கார்ன் : வயதான காலத்தில் ஏற்படும் பார்வைக் குறைபாடுகளைத் தடுக்க சோளம் சாப்பிடுவது நல்லது.
மூளையை ஷார்ப்பாக்க
வயது ஏற ஏற நம்முடைய ஞாபக சக்தி குறைய ஆரம்பிக்கும் என்பது ஏற்கெனவே தெரிந்த தகவல். ஆனால் தினமும் ஒரு கப் ஃப்ளூபெர்ரீஸ் சாப்பிட்டு வந்தால் வயதானாலும் ஞாபக சக்திக்கு பஞ்சமிருக்காதாம்! வெளிநாட்டில் நடந்த ஆராய்ச்சி ஒன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. ஐம்பதுகளில் இருக்கும் சிலரை தினமும் ஒரு கப் ப்ளூபெர்ரீஸ் சாப்பிட வைத்து, ஒரு மாதம் கழித்து அவர்களுடைய மூளைத் திறனை சோதனை செய்து பார்த்த போது, என்ன ஆச்சர்யம்! அவர்களுடைய மூளைத்திறன் மிகவும் ஷார்ப்பாகவும், எனர்ஜியாகவும் இருந்திருக்கிறது.
இதற்கு காரணம் அவர்கள் சாப்பிட்ட ப்ளூ பெர்ரியிலிருந்த பயோஃப்ளேவோ நாய்ட்ஸ் (Biaflavonoids) என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்!
சரி ப்ளூபெர்ரியைத்தவிர இந்த பயோஃப்ளேவோ நாய்ட்ஸ்.
பிளாக் பெர்ரீஸ், ராஸ் பெர்ரீஸ், பிளாக் டீ, க்ரீன்டீ, கீரை வகைகள் மற்றும் ஆப்பிள் போன்ற டார்க் கலர் தோலுடைய பழங்களிலெல்லாம் பயோ ஃப்ளேவோநாய்ட்ஸ் இருக்கிறது.
Post a Comment