உருளைக்கிழங்கு சாப்பிட்டால் குண்டாவது உண்மையா...பொய்யா?

உருளைக்கிழங்கு சாப்பிட்டால் குண்டாகி விடுவோம்! தேன் சாப்பிட்டால் உடல் மெலிந்து விடுவோம் - இப்படி ஆண்டாண்டு காலமாய் நாம் நம்பி வரும் சில நம...

உருளைக்கிழங்கு சாப்பிட்டால் குண்டாகி விடுவோம்! தேன் சாப்பிட்டால் உடல் மெலிந்து விடுவோம் - இப்படி ஆண்டாண்டு காலமாய் நாம் நம்பி வரும் சில நம்பிக்கைகளில் இதுவும் ஒன்று. அதேமாதிரி பலாப்பழம் சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு வரும்! இப்படி சொல்லப்படுவதெல்லாம் உண்மையா...இல்லையா? அலசுவோம்... வாருங்கள், * உருளைக்கிழங்கு சாப்பிட்டால் குண்டாவது உண்மையா...பொய்யா? பொய்! உருளைக்கிழங்குவுக்கும், உடம்பு குண்டாவதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இதில் ஒரு சதவீதம் கூட கொழுப்பு இல்லை என்பதுதான் உண்மை. கார்போஹைட்ரேட் அதிகம். இதிலுள்ள சத்துக்கள் நமது தசைகளை பாதுகாத்து வலுப்படுத்தும். உடல் இயக்கத்துக்கு தேவையான சக்தியை உருளைக்கிழங்கு வழங்கும். அதனால்தான் ஸ்போர்ட்ஸ் வீரர்கள் அதிகமாக உருளைக்கிழங்கை சாப்பிடுவார்கள். உருளைக் கிழங்கை குழந்தைகளுக்கு அதிகமாக கொடுப்பது நல்லது. * சோயா பீன்ஸ் சாப்பிட்டால் கிட்னி நோய்கள் வருமா? சோயாபீன்ஸில் புரோட்டீன் அதிகமாக உள்ளன. அதிகமான புரோட்டீனை உடைய உணவு களை நாம் சாப்பிட்டால் அவை கிட்னியை பாதிக்கும் என்பது ஓரளவு உண்மைதான்! ஆனால் சோயாபீன்ஸை தண்ணீரில் வேக வைக்கும்போது, புரோட்டீன்கள் வெளியாகி விடும். நாம் வேக வைத்த சோயாபீன்ஸை நாம் சாப்பிடும்போது பெருமளவு புரோட்டீன்கள் கிடைப்பதில்லை. சரியான முறையில் அவை செரிமானமாகி நமக்கு அவை கிடைப்பதில்லை. இப்படி ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக இருந்தாலும், அதை சாப்பிடுவதால், நமது உடலில் இருக்கும் கொழுப்பை கட்டுப்படுத்துகிறது. சோயாபீன்ஸை தொடர்ந்து சாப்பிடும் பெண்களுக்கு மார்பக புற்று நோயை கட்டுப்படுத்தும். * மரவள்ளிக்கிழங்கு சாப்பிட்டால் சோம்பேறித்தனம் வருமா? இதில் உள்ள ஹைட்ரோசயானிக் என்னும் மூலப்பொருள், சாப்பிடும்போது உள்ள சத்தை உடம்பில் சேருவதை தடுக்கும். இதனால் இதை பச்சையாக சாப்பிடாமல் வேகவைத்து சாப்பிடலாம். அதாவது மரவள்ளிக் கிழங்கை வேகவைக்கும்போது தண்ணீரில் ஹைட்ரோ சயானிக் வெளியேறிவிடும். இதில் தானியங்களைவிட சத்துக்கள் அதிகம் என்பதால் அரிசி தட்டுப்பாடு ஏற்படும்போது, நமது உடல் சிறப்பாக செயல்பட மரவள்ளிக் கிழங்கை சாப்பிடுவார்கள். * பருப்பு சாப்பிட்டால் வாய்வு தொந்தரவு ஏற்படுமா? இன்றைக்கு பெரும்பாலானவர்கள், எந்த வகையான பருப்பு சாப்பிட்டாலும் வாய்வு தொந்த ரவு வந்துடும்னு பருப்பு வகையை தொடுவதே இல்லை. சிலவகை உணவுகள் சிலருக்கு பிடிக்காமல் அலர்ஜியாவதும் உண்டு. சிலருக்கு சில உணவுகள் அலர்ஜியால் ஜீரண மாகாமல் பிரச்சினை உண்டாக்குவதும் உண்டு. எந்த வகையான உணவாக இருந்தாலும் அவை ஜீரணமாகாவிட்டால் அதனால் தொந்தரவு நிச்சயம் உண்டு. குறிப்பிட்ட உணவு களை சாப்பிடுவதால் ஏற்படும் வாய்வு தொந்தரவுகள், ஆளாளுக்கு வேறுபடும். சிலருக்கு சில உணவுகள் மிகவும் பிடிக்கும். அப்படிப்பட்ட உணவுகள் எவ்வித பிரச்சினையையும் உருவாக்காது. சிலருக்கு வாய்வுத் தொந்தரவு கொடுக்கும் உணவுகள் வேகமாக ஜீரணமாகிவிடும். ஆனால் பருப்பில் வெஜிடேரியன் புரோட்டீன் அதிகம். மாமிசம், மீன் ஆகியவற்றை சாப்பிடும் பழக்கம் இல்லாதவர்கள் கண்டிப்பாக பருப்புவகை உணவுகளை சாப்பிடவேண்டும். இதனால் உடலில் வலுவும், ஆரோக்கியமும் அதிகமாகும். அதேபோல், நார்ச்சத்துள்ள பழங்களை அதிகமாக அனைவரும் சாப்பிட வேண்டும்.

Related

ஹெல்த் ஸ்பெஷல் 8524087423142035112

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item