கேரட் கீர் தேவையான பொருட்கள் : பால் - ஒரு லிட்டர், துருவிய கேரட் - 11/2 கப், சர்க்கரை - ஒரு கப், மெல்லிய ரவை - 3 டீஸ்பூன், முந்திரிப் பரு...
கேரட் கீர்
தேவையான பொருட்கள் : பால் - ஒரு லிட்டர், துருவிய கேரட் - 11/2 கப், சர்க்கரை - ஒரு கப், மெல்லிய ரவை - 3 டீஸ்பூன், முந்திரிப் பருப்பு - சிறிது, குங்குமப்பூ - சிறிது.
செய்முறை : துருவிய கேரட்டை பாலில் நன்கு மென்மையாகும் வரை வேகவிடவும். வெந்ததும் சர்க்கரை சேர்த்துக் கரையும் வரை கிளறி விடவும். பிறகு ஸ்டவ்வை சிம்மில் வைத்து ரவையை கட்டி தட்டாதபடி, பாலுடன் கலக்கவும்.
இத்துடன் முந்திரிப் பருப்பைச் சேர்த்துக் கலவை திக்காகும் வரை கொதிக்க விடவும். பிறகு சிறிது இளஞ்சூடான பாலில் குங்குமப்பூவைக் கரைத்து, இறக்கும்முன் சேர்க்கவும். இதனைக் குளிர வைத்து பரிமாறவும்.
அன்னாசிப் பழ கீர்
தேவையான பொருட்கள் : நன்கு பழுத்த அன்னாசிப்பழம் - ஒன்று, சர்க்கரை - ஒரு கப், பாதாம் பருப்பு - 50 கிராம், பால் - 1/2 லிட்டர், பேரீச்சம்பழம் - 100 கிராம், முந்திரிப் பருப்பு, உலர் திராட்சை -தலா 25 கிராம், குங்குமப்பூ - சிறிதளவு, ஏலக்காய் பொடி - லு டீஸ்பூன்.
செய்முறை : அன்னாசிப்பழத்தை தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கவும்.பேரீச்சம்பழத்தையும் கொட்டை நீக்கி நறுக்கவும். இரண்டையும் மிக்ஸியில் அரைத்து, சாறை வடித்தெடுக்கவும். இதில் சர்க்கரையைக் கலந்து அடுப்பில்வைத்துக் கிளறிக்கொண்டே இருக்கவும். பழச்சாறு கொதித்துக் கெட்டியானதும் கீழே இறக்கவும்.
பாதாம் பருப்பை நீரில் ஊற வைத்து, தோல் நீக்கி மையாக அரைக்கவும். முந்திரி, திராட்சையை நெய்யில் வறுக்கவும். பாலை அடுப்பில் வைத்து நன்றாக காய்ச்சி அத்துடன், அரைத்த பாதாம் பருப்பு, பழச்சாறு இரண்டையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும். கடைசியாக வறுத்த முந்திரி, திராட்சை, குங்குமப்பூ, ஏலக்காய் பொடி ஆகியவற்றைப் போட்டு, சிறிது நேரம் கிளறி கீழே இறக்கிப் பரிமாறவும்.
கோதுமை கீர்
தேவையான பொருட்கள் : உடைத்த கோதுமை - 50 கிராம், சர்க்கரை - 4 டீஸ்பூன், காய்ச்சிய பால் - 21/2 கப், தண்ணீர் - ஒரு கப், க்ரீம் - 1/2 கப், ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன், பாதாம் பருப்பு - 25 கிராம், வெள்ளித்தாள் -2, நெய் - 3 டேபிள் ஸ்பூன், உலர் திராட்சை, பிஸ்தா பருப்பு - தலா 10 கிராம், பன்னீர் - சில துளிகள்.
செய்முறை : நெய்யில் பாதாம், பிஸ்தா, உலர் திராட்சை மூன்றையும் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.அதே நெய்யில் உடைத்த கோதுமையைக் கொட்டி லேசாக நிறம்மாறும் வரை வறுத்து அத்துடன் ஏலக்காய்ப் பொடி, சர்க்கரை, தண்ணீர் விட்டு வேக விடவும்.
வெந்தபின் அடுப்பிலிருந்து இறக்கி, பால், பன்னீர், க்ரீம், பொரித்த பருப்புகள் எல்லாவற்றையும் சேர்த்துக் கிளறவும். இதன் மீது வெள்ளித் தாளை விரித்து அலங்கரித்து சூடாகவோ, குளிர்ச்சியாகவோ பரிமாறவும்.
பழக்கலவை சேமியா கீர்
தேவையான பொருட்கள் : பால் - 6 கப், பொடியாக நறுக்கிய மாம்பழம், ஆப்பிள், வாழைப்பழம் (சேர்த்து) - 2 கப், சர்க்கரை - ஒரு கப், மெல்லிய உடைத்த சேமியா, ஒரு கப் க்ரீம் - ஒரு கப், நெய் - 2 டேபிள் ஸ்பூன், வெனிலா எசன்ஸ் - 1/4 டீஸ்பூன்.
செய்முறை : சேமியாவை நெய்யில் பொன்னிறமாக வறுக்கவும். பாலை சுண்டக் காய்ச்சவும். அத்துடன் வறுத்த சேமியா சேர்த்து, வேக விடவும். பிறகு ஸ்டவ்வை சிம்மில் வைத்து கொஞ்சம் கொஞ்சமாகச் சர்க்கரையை சேர்த்துக் கிளறவும். சர்க்கரை கரைந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி க்ரீம், பழக்கலவை, வெனிலா எசன்ஸ் சேர்த்துக் கிளறி, ஃப்ரிட்ஜில் ஒருமணி நேரம் வைத்துப் பரிமாறவும்.
பாதாம் கீர்
தேவையான பொருட்கள் : பாதாம் பருப்பு - 100 கிராம், சர்க்கரை - ஒரு கப், பால் - 3 கப், ஏலக்காய்ப் பொடி - ஒரு டீஸ்பூன், முந்திரிப் பருப்பு - 25 கிராம், சாரப் பருப்பு, பிஸ்தா பருப்பு - தலா 1 டேபிள் ஸ்பூன், பச்சைக் கற்பூரம், கேசரிக்கலர் - சிறிதளவு.
செய்முறை : முந்திரிப் பருப்பு, சாரப்பருப்பு, பிஸ்தா பருப்பு மூன்றையும் நெய்யில் வறுத்துக்கொள்ளவும். பாதாம் பருப்பை ஊற வைத்து, தோல் நீக்கி தண்ணீர் விட்டு நைசாக அரைக்கவும். அதனை 3 கப் நீர் விட்டுக் கலக்கி அடுப்பில் வைத்துக் கிளறவும். பச்சை வாசனை மாறியதும், சர்க்கரையைப் போட்டுக் கிளறவும். சர்க்கரை நன்றாக கரைந்தபின் பாலை ஊற்றவும்.பிறகு மற்ற எல்லாப் பொருட்களையும் போட்டுக் கிளறிக்கொண்டே இருக்கவும். கெட்டியாக வந்ததும் கீழே இறக்கவும். இதனை சூடாகவோ, குளிர்ச்சியாகவோ பரிமாறலாம்.
உளுத்தம் கீர்
தேவையான பொருட்கள் : பால் - 250 மி.லி, உளுத்தம் பருப்பு - 100 கிராம், பச்சரிசி (அ) பாஸ்மதி அரிசி - 100 கிராம், தேங்காய்த் துருவல் - ஒரு கப், துருவிய வெல்லம் - 100 கிராம், ஏலக்காய்ப் பொடி, கேசரிக் கலர், நெய், சுக்குப்பொடி - தலா 1/2 டீஸ்பூன், முந்திரிப்பருப்பு- தேவையான அளவு.
செய்முறை : உளுத்தம் பருப்பை நெய்யில் சிவக்க வறுத்து, அரிசியுடன் சேர்த்து ஊற வைக்கவும். முந்திரிப் பருப்பையும் நெய்யில் வறுக்கவும். தேங்காய்த் துருவலை அரைத்துப் பாலெடுக்கவும். சக்கையை பிழிந்து தனியே வைக்கவும்.ஊறிய உளுத்தம் பருப்பு மற்றும் அரிசியுடன் தேங்காய் சக்கையைச் சேர்த்து, தண்ணீர் விட்டு நைசாக அரைக்கவும்.
அரைத்த விழுதைப் போல், இரண்டு மடங்கு தண்ணீரை அடிகனமான பாத்திரத்தில் விட்டுக் கொதிக்க விடவும். அதில் அரைத்ததை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து கட்டிபிடிக்காமல் கிளறவும்.கூடவே வெல்லத்தையும் சேர்த்துக் கிளறிக் கொண்டே இருக்கவும்.
பத்து நிமிடம் கொதிக்க வைத்து கீழே இறக்கி, ஏலக்காய்ப் பொடி, முந்திரிப் பருப்பு, கேசரிக்கலர், சுக்குப்பொடி சேர்த்துக் கலக்கவும். கடைசியாக தேங்காய்ப் பாலையும் சேர்த்துக் கலக்கவும். இந்த உளுத்தம் கீர் உடலுக்கு மிகுந்த பலத்தைக் கொடுக்கும்
Post a Comment