வாழைப் பழம் நாம் ஏன் தினமும் சாப்பிட வேண்டும்?

வாழைப்பழம்தானே...' அலட்சியம் வேண்டாம்! அன்றாட வேலைகளுக்கு பின் சோர்வை நீக்கு கிறது...ரத்த அழுத்தம் வராமல் தடுக்கிறது... மூளைக்கு சக்தி ...

வாழைப்பழம்தானே...' அலட்சியம் வேண்டாம்! அன்றாட வேலைகளுக்கு பின் சோர்வை நீக்கு கிறது...ரத்த அழுத்தம் வராமல் தடுக்கிறது... மூளைக்கு சக்தி தருகிறது...! இப்படி சொல்லிக் கொண்டே போகின்றனர் அந்த சின்ன பழத்தைப் பற்றி! அது, வாழைப் பழம் தான்! நாம் ஏன் தினமும் வாழைப் பழம் சாப்பிட வேண்டும்? இதோ, நிபுணர்கள் ஆய்வு செய்து சொல்கின்றனர், படியுங்கள்: வாழைப் பழத்தில் இல் லாத சத்துக்களே இல்லை. இதில் மூன்று வித சர்க் கரைகள் உள்ளன. அதா வது, "ப்ரக் டோஸ், க்ளூக் கோஸ், சக்ரோஸ்' ஆகி யவை. ஒரே உணவில் இவை கிடைப்பது மிக அபூர்வமானது. உடலுக்கு இந்த சத்துக்கள் அவசிய தேவை. நார்ச்சத்து, புரதச் சத்து உணவுகள் மனிதர்களுக்கு மிக முக் கியம். அவற்றை இந்த வாழைப் பழம் தருகிறது. வைட்ட மின்கள், கனிம சத்துக்கள், பொட்டாஷியம் ஆகிய சத்துக்களும் இருப் பதால், உடலில் எதிர்ப்பு சக்தி அதிகமாகவே கிடைக்கிறது. இனி எந்தெந்த நோய் வரா மல் காக்கிறது என்று பார்ப்போமா? ஸ்ட்ரோக்ஸ்: பக்க வாதங்கள் வராமல் தடுக்க வாழைப் பழம் பெரிதும் உதவுகிறது. மற்றவர்களை விட, 50 சதவீதம் அளவுக்கு பக்கவாதம் வராமல் தடுப் பதில் வாழைப் பழம் உதவுகிறது. ரத்த அழுத்தம்: வாழைப் பழத்தில், "ஷுகர்' அளவு குறைவு; பொட்டாஷியம் சத்து அதிகம். அதனால், ரத்த அழுத் தத்தை அறவே தடுத்து விடும். சோர்வு நீக்குதல்: கடும் வேலையிலும் சோர்வு வராமல் நீக்குவது வாழைப் பழம் தான். சாப்பிட்ட பின் சுறு சுறுப்பு தானாக வந்து விடும். அதன் பின், மீண்டும் சில மணி நேரம் வேலை செய்யலாம். வாழைப்பழத்தில் உள்ள, "ட்ரைப் டோபன், செரடோனின்' ஆகிய ரசாயன சத்துக்கள் தான் இதற்கு காரணம். ரத்த சர்க்கரை: வாழைப்பழத் தில், "வைட்டமின் பி6' உள்ளது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக்குவது இதுதான். நெஞ்சு எரிச்சல்: வாழைப் பழத்தில், "ஆன்டாசிட்' ரசாயனம் உள்ளதால், உணவு சாப்பிட்ட பின் சிலருக்கு ஏற்படும் நெஞ்செரிச்சலை சுலபமாக போக்கி விடுகிறது. மூளை சக்தி: காலை சிற்றுண்டியிலேயே ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது, மூளைக்கு சுறு சுறுப்பை தரும். அதனால், மதிய உணவு, மாலை வேளை நொறுக்குத் தீனி, இரவு சாப்பாடு ஆகிய வற்றுடன் வாழைப்பழம் சாப் பிட்டால், மூளை சுறு சுறுப்புக்கு கேட்கவா வேண்டும். மலச்சிக்கல்: வாழைப் பழத் தில் மிகுந்த நார்ச் சத்து உள்ளது. மலச் சிக்கல் வரா மல் தடுத்து விடுவது வாழைப்பழம் தான். ரத்தசோகை: வாழைப்பழத்தில், இரும்புச்சத்து உள் ளது. ரத்தத்தில் ஹீமோக் ளோபின் சத்து இல்லாததால் தான் ரத்த சோகை ஏற்படுகிறது. ரத்த சோகை உள்ள வர்கள், வாழைப்பழம் சாப் பிட்டு வந்தால், ரத்த சோகை போயே போச்சு. வயிற்றுப்புண்: பல பழங் களில், அமிலச் சத்து இருக்கிறது. அதனால், வயிற்றுப் புண் (அல்சர்) உள்ளவர்கள் சாப்பிட கூடாது. ஆனால், வாழைப் பழத்தில் அமிலச் சத்து இல்லவே இல்லை. அத னால், தாராளமாக சாப்பிடலாம். வயிற்றில் வாழைப் பழம் போனதும், வயிற் றில் உள்ள அமிலச் சத்தை குறைக் கிறது. அதனால், "அல்சர்' உள்ள வர்களுக்கு கை கொடுக்கிறது வாழைப்பழம். தெரிஞ்சுக்குங்க...! * வாழைத்தண்டை சிறிய துண்டுகளாக வெட்டி, ஜுஸாக்கி, காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் சிறுநீரகக் கல், சிறுநீர் பாதையில் கிருமித் தொற்று ஆகி யவை நீங்கும். உடலில் தேங்கியிருக்கும் கெட்டநீர் சிறுநீர் மூலம் வெளியேறும். சிறுநீர் பிரிவது எளிதாகும். *** * உடம்பில் கை, கால் எரிச்சல் அல்லது கண் எரிச்சல் அல் லது உடலில் எரிச்சல் என்று இருந்தால் கவலை வெண்டாம். நன்றாக பழுத்த வாழைப் பழத்தை மோருடன் சேர்த்து, காலையில் சாப்பிடுங்கள். சிறிது நேரத்தில் குணமாகும். தீராத வறட்டு இருமல் போன்ற பிரச்சினைகளுக்கு கனிந்த வாழைப் பழத்தை சாப்பிட்டால் குணமாகும். *** * உடலில் சிலருக்கு சிலந்தி போன்ற கட்டிகள் ஏற்படும். இந்த கட்டிகள் மீது வாழைப்பழத்தை நன்றாகக் குழைத்து பூசி வந்தால் கட்டிகள் சீக்கிரமே பழுத்து சீழ் வெளியாகி குணமாகும். கரப்பான் நோய்க்கு வாழைப்பழத் தோலை நெருப்பினில் எரித்து சாம்பலாக்கி, அதை கடுகு எண்ணை கலந்து கரப்பான் மீது பூசினால் குணமாகும். *** * மூலம் மற்றும் பவுத்திரம் ஆகிய சிக்கல்களால் சிக்கித் தவிப்போர், நன்றாக பழுத்த வாழைப் பழத்தை பாலில் போட்டு வேகவைத்து, மசித்து, காலை, மாலை சாப்பிட்டு வந்தால், மேற்கண்ட பிரச்சினைகள் ஓரளவு கட்டுப்படும். திராட்சை சாறு, தேன், வாழைப்பழம் ஆகியவற்றை சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாத நோய்கள் கட்டுப்படும். *** * வாழை பிஞ்சுகளை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி, காலை, மாலை சாப்பிட்டு வந்தால் குடல்புண், இரைப்பை புண் மற்றும் நெஞ்சு எரிச்சல் ஆகிய பிரச்சினைகள் நீங் கும். அதேபோல், வாழைப்பழத்தை தேனில் ஊறவைத்து, அதனுடன் 2 பேரீச்சம் பழத்தை சேர்த்து, பாலுடன் கலந்து சாப்பிட்டால் குடல்புண் ஆறிவிடும். *** * ரொம்பவும் கனியாத வாழைப் பழத்தை எடுத்து, அதனுடன் ஒரு சிட்டிகை ஏல அரிசித் தூளை தொட்டுச் சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும். அதேபோல், வாழைப் பழத்துடன் சிறிது உப்பும், புளியும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி மற்றும் ரத்தபேதி நீங்கும். *** * மாதவிடாய் நிற்கும் காலங்களில், கருப்பை கிருமித் தொற்றால் பாதிக்கப்படும் போது, கருச்சிதைவு, கரு கலைதல் ஆகிய பிரச்சினைகளால் அவஸ்தைப் படும் பெண் கள், வாழைப்பூவின் மேலே உள்ள முதிர்ந்த இலைகளை நீக்கிவிட்டு, மொட்டு போல் இருக்கும் பகுதியை ஜுஸாக்கி கற்கண்டு சேர்த்து, காலையிலும், மாலையிலும் சாப் பிடுவது மிகவும் நல்லது. *** * கனிந்தும் கனியாமல் அரை குறையாக இருக்கும் வாழைப் பழத்தை பாலில் வேக வைத்து கூழ் போல் ஆக்கி, அதனுடன் பாதாம் பருப்பு, பேரீச்சம்பழம் ஆகியவற்றை துண்டுகளாக நறுக்கி போடவும். இவற்றுடன் தேனும் கலந்து வைத்துக் கொள்ளவும். இதை தினமும் காலை, மாலையில் சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி, கை, கால் நடுக்கம் ஆகியவை நீங்கும். மூளையின் ஆற்றல் திறன் அதிகரிக்கும். *** * சில குழந்தைகளுக்கு வயிற்றில் புழுக்கள் இருக்கும். குடல் புழுக்களை ஒழிக்க எலுமிச்சம் பழ சாறுடன், வாழைப் பழம், பப்பாளி பழம் ஆகியவற்றை சேர்த்து கலவை யாக்கி கொள்ளவும். அத்துடன் ஆரஞ்சுத் தோல், மாதுளம் பழத்தோல் இவற்றை கலந்து பொடியாக்கி கலந்து வைத்துக் கொள்ளவும். இதை வாரம் இரண்டு அல்லது மூன்று முறை சாப்பிட்டு வந்தால் புழுக்கள் நீங்கி குடல் சுத்தமாகும்.

Related

பழங்களின் பயன்கள் 9000197169956625400

Post a Comment

1 comment

Unknown said...

தங்களின் தகவலுக்கு மிக்க நன்றி

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item