ரத்ததானம்... செய்வது எப்படி? -- உபயோகமான தகவல்கள்
ரத்ததானம்... செய்வது எப்படி? ''ரத்ததானம் செய்ய விரும்புகிறோம். நாங்கள் அறிந்தாக வேண்டிய தகவல்கள் என்ன?'' - மணிமேக...
''ரத்ததானம் செய்ய விரும்புகிறோம். நாங்கள் அறிந்தாக வேண்டிய தகவல்கள் என்ன?''
எஸ்.சங்கர், சிறப்பு பொது மருத்துவர் மற்றும் மருத்துவக்கல்லூரி உதவிப் பேராசிரியர், புதுச்சேரி:
''ரத்ததானம் செய்ய 18 முதல் 65 வயது சரியானதாக வரையறுக்கப்பட்டுள்ளது. வயதுக்குரிய எடையில் இருப்பது அவசியம். ஹெப்படைடிஸ் பி மற்றும் சி, ஹெச்.ஐ.வி உள்ளிட்ட பால்வினை நோய்கள், மஞ்சள் காமாலை போன்ற தொற்றுகள் அற்றவராக இருக்க வேண்டும். ரத்தம் கொடுப்பதற்கு முன்பு ரத்தப்பிரிவு உறுதி செய்யப்பட வேண்டும்.
குறைந்தபட்சம் 3 மாதத்துக்கு ஒரு முறை மட்டுமே ரத்தம் தர முடியும். இதற்காக மாவட்ட தலைநகர், தாலுகா தலைநகர் போன்ற இடங்களில் இருக்கும் தனியார் ரத்த வங்கிகள் போன்ற இடங்களில் பதிவு செய்துகொள்ளலாம். ரெட் கிராஸ் சொஸைட்டி, ரோட்ராக்ட், லயன்ஸ் கிளப் போன்ற அமைப்புகளிலும் பதிவு செய்யலாம். இவற்றின் மாணவர் பிரிவுகள் உங்கள் கல்லூரியிலும்கூட செயல்படலாம். அல்லது நேரடியாக ரத்ததான முகாம் நடக்கும் இடங்களில் முதல் முறை தானம் வழங்கும்போது பதிவு செய்யப்படும் விவரங்களேகூட போதுமானது.''
Post a Comment