ஊனத்தையும் தடுக்கும் உடற்பயிற்சி!--ஆசனம்
ஊனத்தையும் தடுக்கும் உடற்பயிற்சி! நலம், நலமறிய ஆவல். டாக்டர் விகடன் வழங்கும் ஆரோக்கியப் பக்கம்! ம ன...

https://pettagum.blogspot.com/2012/05/blog-post_3615.html
ஊனத்தையும் தடுக்கும் உடற்பயிற்சி!
நலம், நலமறிய ஆவல். டாக்டர் விகடன் வழங்கும் ஆரோக்கியப் பக்கம்!
''வயதாக ஆக நம் எலும்பில் தேய்மானம் ஏற்படும். இதனால், எலும்பில் வலிமை குறைந்து போய்விடுகிறது. தொடர்ந்து உடற்பயிற்சியின் மூலம்தான் எலும்பு தேய்மானம் அடையாமல் தவிர்க்க முடியும்.
உடற்பயிற்சி செய்வதால், எலும்பு மூட்டு மற்றும் தசை நார்கள் நன்றாக பலப்படுகிறது. தசைகளில் சுருங்கி விரியும் தன்மை அதிகரிக்கிறது. இதனால் எந்த ஒரு பொருளையும் அசால்டாக தூக்கி கையாள முடியும்.
மேலும், அலுவலகத்தில் அதிக நேரம் தொடர்ந்து பணிபுரிந்தாலும் சோர்வு என்பதே தெரியாமல், உடலின் செயல் திறன் மேம்படும்.
உடல் உறுப்பு குறைந்தால்தான் ஊனம் என்றில்லை. நடை, உடை பாவனையில் மாறுதல் ஏற்படுவதும் ஒருவித ஊனம்தான். தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வருவதன் மூலம் உடல் ஊனமும் தடுக்கப்படும்.
மூட்டுவலி பிரச்னையால் சிலர் அவதிப்படும்போது, ஒட்டு மொத்த உடலின் எடையும் ஒரே காலில் கொண்டு வந்து சாய்ந்தபடி, விந்தி விந்தி நடப்பார்கள். உடற்பயிற்சி செய்வதால், தசைநார்கள் வலிமை அடைந்து இது போன்ற பாதிப்பு வராமல் தடுத்துவிடலாம்.
புற்று நோய் திசுக்களையும் உடற்பயிற்சி கட்டுப்படுத்துகிறது. மேலும், மன அழுத்தம் மற்றும் மன இறுக்கத்தைக் குறைத்து, எந்த வேலையையும் எளிதாக செய்யக்கூடிய அளவுக்கு, உடலில் தெம்பை யும், புத்துணர்வையும் எப்போதும் தக்க வைக்கும்.’ என்றவர் 'ஜிம்’முக்கு செல்லாமலேயே உடம்பை 'ஜம்’மென்று வைத்துக் கொள்ளும் உடற்பயிற்சியை பற்றி சொன்னார்.
Post a Comment