உணர்வுகள் ஆயிரம் கதை சொல்லும் -- கவிதைத்துளிகள்
உணர்வுகள் ஆயிரம் கதை சொல்லும் உணர்வுகள் ஆயிரம் கதை சொல்லும் அது உயிர் பெறும் போது விதி வெல்லும் கனவுகள் கண்ணுள் நடை பயிலும் கண்ணிமை...

https://pettagum.blogspot.com/2012/05/blog-post_5343.html

உணர்வுகள் ஆயிரம் கதை சொல்லும்
உணர்வுகள் ஆயிரம் கதை சொல்லும்
அது உயிர் பெறும் போது விதி வெல்லும்
கனவுகள் கண்ணுள் நடை பயிலும்
கண்ணிமை மூடி மனம் துயிலும்
நரம்பின் நாளத்தில் நடனமிடும்
இதயத்தின் ஆழத்தில் புதைந்துவிடும்.
அது உயிர் பெறும் போது விதி வெல்லும்
கனவுகள் கண்ணுள் நடை பயிலும்
கண்ணிமை மூடி மனம் துயிலும்
நரம்பின் நாளத்தில் நடனமிடும்
இதயத்தின் ஆழத்தில் புதைந்துவிடும்.
உணர்வுகள் ஆயிரம் கதைசொல்லும்
அது உறக்கம் மறந்து விழிப்பு தரும்
வசந்தம் வாசலில் வட்டமிடும்
பருவம் பாதையில் வழி நடத்தும்
அன்பாய் தழுவி அரவணைக்கும்
இன்பத்தின் எல்லையில் இணைந்துவிடும்
அது உறக்கம் மறந்து விழிப்பு தரும்
வசந்தம் வாசலில் வட்டமிடும்
பருவம் பாதையில் வழி நடத்தும்
அன்பாய் தழுவி அரவணைக்கும்
இன்பத்தின் எல்லையில் இணைந்துவிடும்
உணர்வுகள் ஆயிரம் கதைசொல்லும்
அது உள்ளத்தின் எழுச்சியில் உருகிவிடும்
கடலலை போல எழுந்து வரும்
கடமைகள் மறந்து கவிதை தரும்
காதல் தழுவலில் கனிந்து விடும்
மோகத்தில் தன்னை இழந்து விடும்.
அது உள்ளத்தின் எழுச்சியில் உருகிவிடும்
கடலலை போல எழுந்து வரும்
கடமைகள் மறந்து கவிதை தரும்
காதல் தழுவலில் கனிந்து விடும்
மோகத்தில் தன்னை இழந்து விடும்.
உணர்வுகள் ஆயிரம் கதை சொல்லும்
அது உரிமையுடனே ஆட்கொள்ளும்
தனிமையில் நினைத்தால் தவிப்பு தரும்
தவிப்பினில் புதிய துடிப்பு வரும்
அமைதியில் நெஞ்சம் தடுமாறும்
அனுதினம் அதற்கு மனம் ஏங்கும்.
அது உரிமையுடனே ஆட்கொள்ளும்
தனிமையில் நினைத்தால் தவிப்பு தரும்
தவிப்பினில் புதிய துடிப்பு வரும்
அமைதியில் நெஞ்சம் தடுமாறும்
அனுதினம் அதற்கு மனம் ஏங்கும்.
Post a Comment