கணினியின் வேகத்தை அதிகரிக்க (speed up your computer)--கணிணிக்குறிப்புக்கள்
கணினியின் வேகத்தை அதிகரிக்க (speed up your computer) வணக்கம் நண்பர்களே..! சில நேரங்களில் உங்கள் கணினி உங்கள் வேகத்துக்கு ஈடு கொடுக்க ...

https://pettagum.blogspot.com/2012/05/speed-up-your-computer.html
கணினியின் வேகத்தை அதிகரிக்க (speed up your computer)
வணக்கம்
நண்பர்களே..! சில நேரங்களில் உங்கள் கணினி உங்கள் வேகத்துக்கு ஈடு கொடுக்க
முடியாமல் திணறும். பரவலாக அனைவருக்கும் இதுபோன்றதொரு நிலை ஏற்படும்.
அதற்கு நீங்கள் என்ன செய்வீர்கள். உங்கள் கணினியின் வேகம் குறைந்துகொண்டே
போகும்போது உங்களுக்கும் டென்ஷன் எகிறும். இவ்வாறு கணினியின் வேகம் குறைய
காரணம் என்ன? அதைத் தீர்பதற்கான வழிமுறைகள் என்ன ? என்பதைப் பற்றி
இப்பதிவில் பார்ப்போம்.
கணினியின் வேகம் குறைய காரணம் என்ன?
கணினியின் வேகம் குறைய முக்கியக் காரணம், எந்த ஒரு தகவலையும் அது HARD DISCலிருந்து எடுத்து தருவதுதான். கிட்டதட்ட 70% கோப்புகளை எடுக்கும் நேரத்தை, கோப்புகளுக்குள் தேடுவதிலேயே கம்ப்யூட்டர் கழிக்கிறது. இதனால் கணினியின் வேகம் குறைகிறது.
உங்கள் கணினியின் வேகத்தை அதிகரிக்க கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றிப் பாருங்கள்..
1.தடையற்ற மின்சாரம்.
மின்சாரத்தில் இயங்கும் எந்த ஒரு மின்சாதனத்திற்கும் இது பொருந்தும். தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் மின் சாதனங்கள் மின்தடையால் இயக்கத்தை திடீரென நிறுத்தும்போது அதில் சில குறைபாடுகள்(Faults) ஏற்படும். இது கணினிக்கும் பொருந்தும். தடையற்ற மின்சாரம் உங்கள் கணினிக்கு நிச்சயம் ஏற்படுத்தித் தரவேண்டும். இதற்கு நல்ல தரமான UPS வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.
மின்தாட்டுப்பாடும், அடிக்கடி மின்தடையும் எதிர்கொள்ளும் இக்காலத்தில் நீங்கள் தரமான UPS -வாங்கிப் பயன்படுத்துவது முக்கியம். இதனால் உங்கள் கணினி அடிக்கடி SHUTDONW ஆவதைத் தவிர்க்கலாம். மின்தடை ஏற்பட்டாலும் உடனே கணினியானது இயக்கத்தை நிறுத்தாமல் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கும். இது முறையாக கணினியை நிறுத்த வழி வகுக்கும். முறையாக கணினியை நிறுத்தினால் கணினியில் எந்த ஒரு தொல்லையும் வர வாய்ப்பிலை.
2. டூப்ளிகேட் கோப்புகளை கண்டறிதல்..
ஒரே கோப்பானது கணினியில் பல்வேறு இடங்களிலும் இருக்கலாம். அதாவது தேவைப்படும்போது எடுத்து வசதியாக DESKTOP போன்ற இடங்களில் வைத்திருப்போம். அதனுடைய நகல் வேறொரு இடத்தில் இருக்கும். இவ்வாறு ஒரு கோப்பான பல இடங்களிலிலும் இருந்தால் அவற்றையெல்லாம் தேடிப்பிடித்து அழிக்கலாம். இதனால் கணினியில் கணிசமான இடத்தை காலி செய்ய முடியும். எனவே கணினியானது வேகமாக இயங்குவதற்கு வாய்ப்பு ஏற்படும்.
3. தேவையில்லாத கோப்புகளை இடமாற்றம் செய்தல்.
அதேபோல் கணினியில் எப்போதாவது பயன்படுத்தக்கூடிய அதிக இடத்தைப் பிடித்திருக்க்கூடிய கோப்புகளை இணையத்தில் File sharing website-லோ அல்லது தனிப்பட்ட CD, DVD போன்ற Removable disc - களில் பதிந்து வைத்து தேவையானபோது எடுத்துப் பயன்படுத்தலாம்.
4. ரீ-சைக்கிள் பின்னிலிருந்து கோப்புகளை நீக்குதல்.
இணையம் பயன்படுத்தும்போதும், மற்ற பயன்பாட்டு மென்பொருட்களை(Applications) பயன்படுத்தும்போதும் அவைகள் விட்டுச் சென்று தற்காலிக கோப்புகள் உங்கள் கணினியின் TEMPORARY FOLDER -ல்சேமிக்கப்படிருக்கும். இதனால் தேவையில்லாத குப்பையான கோப்புகள் உங்கள் கம்ப்யூட்டரில் சேர்ந்துவிடும். எனவே COMPUTER-ல் உள்ள RECYCLE BIN மற்றும்TEMPORARY FOLDER உள்ள தற்காலிக கோப்புகளை நேரமிருக்கும்போது அழித்துவிடுங்கள். இதன் மூலமும் உங்கள் கணினியின் வேகம் கூடும்.
தற்காலிக கோப்புகளை நீக்க
5. கோப்பு மேலாண்மை
உங்கள் கணினியில் நீங்கள் சேமிக்கும் கோப்புகளை அதற்கேற்றவாறு பிரித்து சரியான பெயரிட்டு சேமிக்க வேண்டும். உங்கள் HARD DISC - களில் Operating system அல்லாத மற்ற சேமிப்பகங்களில் (D: E: F: I) போன்றவைகளில் சேமிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். இதனால் ஆபரேட்டிங் சிஸ்டம் அமைந்துள்ள C டிரைவானது வேலைபளு குறைந்து கணினியின் வேகத்தை அதிகப்படுத்தும். ஒருவேளை உங்கள் கணினியில் பிரச்னை வந்து Format செய்யும் நிலை வந்தாலும் முக்கிய கோப்புகள் அனைத்தையும் அழியாமல் காத்துக்கொள்ளலாம்.
RECYCLE BIN உங்கள் கம்ப்யூட்டரின் குப்பைத்தொட்டி எனப்படும் 'ரீ-சைக்கிள் பின்', மற்றும் 'டெம்ப்ரவரி போல்டர்களில்' உள்ளவற்றை அவ்வப்போது அழித்துவிடுங்கள். காரணம், நீங்கள் இயக்கும் ZIP போன்ற பயன்பாட்டு மென்பொருட்கள் அவை இயங்குவதற்குத் தேவையான தற்காலிக பைல்களை அங்கெல்லாம் வைத்து இயக்கிவிட்டு அழிக்காமல் போய்விடும் தன்மை கொண்டவை. எனவே அவை அங்கெல்லாம் பெருகி மற்ற மென்பொருட்களுக்கான இடத்தை அடைத்துக்கொண்டு, நேரம் அதிகமாகச் செலவிட்டுத் தேட வைத்துவிடுவதால் கம்ப்யூட்டர் மெதுவாக இருக்கும்.
ஒருங்கமைத்தல்...
உண்மையில் பைல்கள் ஹார்டு டிஸ்க்கில் உருவாக்கப்படும் வரிசையில் அழிக்கப்படுவதில்லை. எனவே ஒவ்வொரு பைலும் அழிக்கப்படும்போது அந்த இடம் சேமிப்பகத்தில்(Storage) வெற்றிடமாக இருக்கும். அப்போது அதைவிட அதிக இடம் தேவைப்படும் பைலை சேமிக்க முயலும்போது அந்த பைலின் ஒரு சில பகுதி மட்டுமே அங்கு சேமிக்கப்படும். பின்னர் அந்த பைல் தேவைப்படும்போது அதன் பகுதிகள் எங்கெங்கு சிதறிக் கிடக்கின்றனவோ, அங்கெல்லாம் உங்களின் ஆபரேட்டிங் சிஸ்டம் சென்று தேடித் தேடி எடுக்க வேண்டியிருக்கும். அதனால், பைல்களை திறக்க அதிக நேரம் எடுத்துக்கொண்டு உங்கள் கம்ப்யூட்டர் மெதுவாக இயங்கும்.
எனவே உங்கள் விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டத்துடன் கொடுக்கப்பட்டிருக்கும் "Disk Defragment" என்ற உதவி மென்பொருளை மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது இயக்கி, ஒருங்கமைக்கலாம். (Defragment). இது, பைல்களின் பகுதிகள் ஆங்காங்கு சிதறிக் கிடப்பதை ஒன்று சேர்த்துவிடுவதால், தேவைப்படும் அந்த பைல்கள் விரைவில் படித்து எடுக்கப்படும். கம்ப்யூட்டரின் வேகமும் கூடும்.
மேற்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றும்போது உங்கள் கணினியின் வேகம் உங்களின் வேகத்திற்கு ஈடுகொடுத்து இயங்கும். கணினின் வேகம் அதிகரிக்கும். உங்களுக்கு டென்சனும் குறையும்.

- உங்கள் கணினியில் Start பட்டனை அழுத்தி all programs என்பதைத் தேர்ந்தெடுங்கள்.
- அதில் என்பதில் Accessories என்பதை கிளிக் செய்து Run என்பதை தெரிவு செய்யவும்.
- இப்போது உங்களுக்கு Run விண்டோ ஓப்பன் ஆகும்.
- அதில் %temp% என தட்டச்சிடுங்கள்.
- உங்களுடைய தற்காலிக கோப்புகள் உள்ளடங்கிய Temp என்ற போல்டர் ஓப்பனாகும்.
- அதில் உள்ள கோப்புகள் அனைத்தையும் தேர்ந்தெடுத்து அழித்துவிடுங்கள்.
5. கோப்பு மேலாண்மை
உங்கள் கணினியில் நீங்கள் சேமிக்கும் கோப்புகளை அதற்கேற்றவாறு பிரித்து சரியான பெயரிட்டு சேமிக்க வேண்டும். உங்கள் HARD DISC - களில் Operating system அல்லாத மற்ற சேமிப்பகங்களில் (D: E: F: I) போன்றவைகளில் சேமிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். இதனால் ஆபரேட்டிங் சிஸ்டம் அமைந்துள்ள C டிரைவானது வேலைபளு குறைந்து கணினியின் வேகத்தை அதிகப்படுத்தும். ஒருவேளை உங்கள் கணினியில் பிரச்னை வந்து Format செய்யும் நிலை வந்தாலும் முக்கிய கோப்புகள் அனைத்தையும் அழியாமல் காத்துக்கொள்ளலாம்.
RECYCLE BIN உங்கள் கம்ப்யூட்டரின் குப்பைத்தொட்டி எனப்படும் 'ரீ-சைக்கிள் பின்', மற்றும் 'டெம்ப்ரவரி போல்டர்களில்' உள்ளவற்றை அவ்வப்போது அழித்துவிடுங்கள். காரணம், நீங்கள் இயக்கும் ZIP போன்ற பயன்பாட்டு மென்பொருட்கள் அவை இயங்குவதற்குத் தேவையான தற்காலிக பைல்களை அங்கெல்லாம் வைத்து இயக்கிவிட்டு அழிக்காமல் போய்விடும் தன்மை கொண்டவை. எனவே அவை அங்கெல்லாம் பெருகி மற்ற மென்பொருட்களுக்கான இடத்தை அடைத்துக்கொண்டு, நேரம் அதிகமாகச் செலவிட்டுத் தேட வைத்துவிடுவதால் கம்ப்யூட்டர் மெதுவாக இருக்கும்.
ஒருங்கமைத்தல்...
உண்மையில் பைல்கள் ஹார்டு டிஸ்க்கில் உருவாக்கப்படும் வரிசையில் அழிக்கப்படுவதில்லை. எனவே ஒவ்வொரு பைலும் அழிக்கப்படும்போது அந்த இடம் சேமிப்பகத்தில்(Storage) வெற்றிடமாக இருக்கும். அப்போது அதைவிட அதிக இடம் தேவைப்படும் பைலை சேமிக்க முயலும்போது அந்த பைலின் ஒரு சில பகுதி மட்டுமே அங்கு சேமிக்கப்படும். பின்னர் அந்த பைல் தேவைப்படும்போது அதன் பகுதிகள் எங்கெங்கு சிதறிக் கிடக்கின்றனவோ, அங்கெல்லாம் உங்களின் ஆபரேட்டிங் சிஸ்டம் சென்று தேடித் தேடி எடுக்க வேண்டியிருக்கும். அதனால், பைல்களை திறக்க அதிக நேரம் எடுத்துக்கொண்டு உங்கள் கம்ப்யூட்டர் மெதுவாக இயங்கும்.
எனவே உங்கள் விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டத்துடன் கொடுக்கப்பட்டிருக்கும் "Disk Defragment" என்ற உதவி மென்பொருளை மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது இயக்கி, ஒருங்கமைக்கலாம். (Defragment). இது, பைல்களின் பகுதிகள் ஆங்காங்கு சிதறிக் கிடப்பதை ஒன்று சேர்த்துவிடுவதால், தேவைப்படும் அந்த பைல்கள் விரைவில் படித்து எடுக்கப்படும். கம்ப்யூட்டரின் வேகமும் கூடும்.
மேற்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றும்போது உங்கள் கணினியின் வேகம் உங்களின் வேகத்திற்கு ஈடுகொடுத்து இயங்கும். கணினின் வேகம் அதிகரிக்கும். உங்களுக்கு டென்சனும் குறையும்.
Read more: http://www.thangampalani.com/2012/04/speed-up-your-computer.html#ixzz1vrhRdeOQ
Post a Comment