உலக வாழ்க்கைக்கு நீ உரிமையாளன் அல்ல! --அமுத மொழிகள்
நிலையற்றது இந்த உலக வாழ்க்கை. இங்கே தற்காலிகமாக கிடைக்கும் சுகத்தில் அதிக பற்று வைக்கக் கூடாது. ந...

https://pettagum.blogspot.com/2012/05/blog-post_8486.html
நிலையற்றது இந்த உலக வாழ்க்கை. இங்கே தற்காலிகமாக கிடைக்கும் சுகத்தில்
அதிக பற்று வைக்கக் கூடாது. நிலையற்ற இம்மையை நாம் நம்பினால், அது
மறுமையின் கொடிய துன்பத்தை அழைப்பதற்கு ஒப்பான செயலாகும்.
மூஸா(அலை) அவர்களுக்கு இறைவன் ஒரு எச்சரிக்கை அனுப்பினான். அதைக் கேளுங்கள்.
""உலக வாழ்க்கையில் அதிகமாகப் பற்றுதல் கொள்ளாதீர். அது மிகப்பெரிய குற்றம். அதை விட பெரிய குற்றத்தை என்றைக்குமே
உம்மால் செய்ய முடியாது,''.
ஒருமுறை மூஸா (அலை) அவர்கள், ஒரு தெருவில் நடந்து கொண்டிருந்தார்கள். தெருவோரத்தில், யாரோ ஒருவர் அழுது கொண்டிருந்தார். அவர் இறைவனிடம் ஏதோ ஒன்றைக் கூறி முறையிட்டவாறு புழுங்கிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்தபடியே, மூஸா (அலை) அவர்கள், தன் வேலையின் பொருட்டு அங்கிருந்த நகர்ந்து விட்டார்கள். வெகுநேரம் கழித்து, அதே தெரு வழியே திரும்பி வந்தார்கள்.
அப்போதும், அந்த மனிதர் அழுது கொண்டிருந்தார். ""இறைவனே! உன்னுடைய அடியான உன்னை எண்ணி நடுங்குகிறான்,'' என்றார்கள். அதாவது, ""இவ்வளவு நேரம், ஏதோ ஒரு காரணத்தால் அவர் உன்னைப் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறாரே! அவர்
குரலுக்கு ஏன் செவி சாய்க்கவில்லை?'' என அவர்கள் கேட்டார்கள்.
இறைவனின் தீர்ப்பு (பதில்) உடனே கிடைத்தது.
""அவன் கண்ணீர் விட்டுக் கதறட்டும். அழுது அழுது அவன் கண்கள் இருண்டாலும், அவன் மூளை மழுங்கினாலும், கையேந்திக் கையேந்தி அவன் கரங்களிரண்டும் நிலை குலைந்தாலும், நான் அவனை மன்னிக்கமாட்டேன். ஏனெனில், அவன் மனதில் உலக இன்பம் பற்றிய ஆசை வளர்கிறது,'' என்றான்.
உலக வாழ்க்கை என்பது மனிதனுக்கு இறைவனால் தரப்பட்ட ஒரு அடைக்கலப்பொருள். அதற்கு மனிதன் உரிமையாளனல்ல. அதற்கு கேடு ஏற்படாமல் காப்பாற்றி இறைவனிடம் ஒப்படைத்து விட வேண்டும். இது மனிதனின் கடமை.

Post a Comment