கேரளா இறால் கறி---சமையல் குறிப்புகள்
கேரளா இறால் கறி தேவையான பொருட்கள் இறால் - 1/4 கிலோ தேங்காய் - 1 வெங்காயம் - 100 கிராம் (நறுக்கியது) தக்காளிச்சாறு - 2 டீஸ்பூன் இஞ்சி...

தேவையான பொருட்கள்
இறால் - 1/4 கிலோ
தேங்காய் - 1
வெங்காயம் - 100 கிராம் (நறுக்கியது)
தக்காளிச்சாறு - 2 டீஸ்பூன்
இஞ்சி - சிறு துண்டு
பூண்டு - 6 பல்
எலுமிச்சம் பழம் - 2
பச்சைமிளகாய் - 5 (நறுக்கியது)
தேங்காய் எண்ணெய் - 5 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை
* இஞ்சி பூண்டுவை விழுதாக்கவும், தேங்காயைப் பால் எடுக்கவும், எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து சாறுடன் இறாலை ஊற வைக்கவும்.
* கடாயில் எண்ணை ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
* இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து தொடர்ந்து இறாலைப் போட்டு வதக்கவும். பின்னர் தக்காளிச் சாறு சேர்க்கவும்.
* ஓரிரு நிமிடங்கள் கழித்து தேங்காய்ப் பாலைச் சேர்த்துக் கிளறவும். இறால் வேகும் வரை கொதிக்க விடவும்.
* வறுத்த கறிவேப்பிலையைச் சேர்த்து அலங்கரிக்கவும்.
* இந்த இறால் கறியை சாதத்துடனோ, ஆப்பத்துடனோ பரிமாறலாம்.
Post a Comment