முக்கியமான குறிப்புகள்--வீட்டுக்குறிப்புக்கள்
ஃகாலிபிளவர், முட்டைகோஸ் முதலியவற்றை வேக வைக்கும்போது ஒரு வித நாற்றம் வரும். அதைத் தடுக்க சிறிது எலுமிச்சம் பழச்சாறு, அல்லது ஒரு சிறிய இஞ்...
https://pettagum.blogspot.com/2012/03/blog-post_2934.html
ஃகாலிபிளவர், முட்டைகோஸ் முதலியவற்றை வேக வைக்கும்போது ஒரு வித நாற்றம் வரும். அதைத் தடுக்க சிறிது எலுமிச்சம் பழச்சாறு, அல்லது ஒரு சிறிய இஞ்சித் துண்டை சேர்த்து வேகவைக்கலாம்.
மிக்ஸியில் இட்லி மாவு அரைக்கும் பெண்கள் அரிசி மாவு நன்றாக அரைபடவில்லை, நேரமாகிறது என்பார்கள். அவர்கள் கவலையை போக்க எளிய வழி புழுங்கள் அரிசியை வெந்நீரில் ஊறவைத்து அரைத்தால் சுலபமாக அரைபடும்.
தேங்காய் பர்பி தயாரிக்கும்பொழுது சில சமயம் பதம் தவறி முருகி விடலாம். அப்படி நேரும்போது அதை பாலில் ஊற வைத்து, மீண்டும் கிளறி இறக்கும் சமயம் நெய்யில் வறுத்த கடலை மாவை சிறிது தூவி இறக்கினால், பர்பி மறுபடியும் சரியான பதத்திற்கு வந்துவிடும்.
எலுமிச்சம் பழங்களை உப்பு ஜாடியில் போட்டு வைத்து விட்டால் அவை எப்போதும் புதியதாக இருக்கும். அந்த எலுமிச்சம் பழங்களிலிலிருந்து நிறையச் சாறும் கிடைக்கும்.
காய்கள், பழங்கள் வாங்கும்போது நல்ல சிவப்பு நிறமாக இருப்பதையே வாங்க வேண்டும். அவற்றில்தான் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது.

Post a Comment