கைமா பொடிமாஸ்---சமையல் குறிப்புகள்
கைமா பொடிமாஸ் தேவையான பொருட்கள் : கொத்துக்கறி- கால்க்கிலோ முட்டை- நான்கு வெங்காயம்-இரண்டு கடலைப்பருப்பு- அரைக்கோப்பை பச்சைமிளகாய்-4 ...

தேவையான பொருட்கள் :
கொத்துக்கறி- கால்க்கிலோ
முட்டை- நான்கு
வெங்காயம்-இரண்டு
கடலைப்பருப்பு- அரைக்கோப்பை
பச்சைமிளகாய்-4
மிளகாய்த்தூள்-இரண்டு தேக்கரண்டி
மஞ்சத்தூள் -அரைத்தேக்கரண்டி
மிளகுத்துள்- அரைத்தேக்கரண்டி
கடுகு-அரைத்தேக்கரண்டி
கறிவேப்பிலை- ஒரு கொத்து
சோம்பு-ஒரு தேக்கரண்டி
தேங்காய்ப்பூ - ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய்-3 மேசைக்கரண்டி
உப்பு- 11/2 தேக்கரண்டி
செய்முறை :
கறியில் உப்பு மஞ்சத்தூள் போட்டு
வேகவைக்கவும்,நீர் மிகுந்திருந்தால் அவை வற்றும் வரை அடுப்பில் வைத்திருக்கவும்.
கடலைப் பருப்பை தனியாக வேகவைக்கவும்.
இஞ்சி பூண்டு வெங்காயம் பச்சைமிளகாயை பொடியாக நறுக்கவும்.
கடாயில் எண்ணெயை சுடாக்கி அதில் கடுகு சோம்பு கறிவேப்பிலையைப் போட்டு பொரியவிடவும்.
பின்பு வெங்காயம்,பச்சைமிளகாய் இஞ்சி,பூண்டை போட்டு வதக்கவும்.
பின்பு கொத்துக்கறியைப் போட்டு பொடிகளையும் போட்டு கிளறிவிடவும்.
முட்டைகளை ஒரு சிறிய கப்பில் உடைத்து உற்றி நன்கு அடித்து கைமாவில் கொட்டி கிளறவும்,
பிறகு வேகவைத்த கடலைப்பருப்பு மற்றும் தேங்காயைப் போட்டு உப்பை சரிபார்த்து நன்கு கிளறி இறக்கவும்.
Post a Comment