உக்காரை ---சமையல் குறிப்புகள்
தேவையானவை: கடலைப் பருப்பு - 1 கப் வெல்லம் - 1 கப் நெய் - 5 தேக்கரண்டி ஏலக்காய்ப் பொடி - ஒரு சிட்டிகை தேங்காய் துருவல் - 2 குழிக்...

https://pettagum.blogspot.com/2012/03/blog-post_6479.html
தேவையானவை:
- கடலைப் பருப்பு - 1 கப்
- வெல்லம் - 1 கப்
- நெய் - 5 தேக்கரண்டி
- ஏலக்காய்ப் பொடி - ஒரு சிட்டிகை
- தேங்காய் துருவல் - 2 குழிக் கரண்டி
- முந்திரிப் பருப்பு - 5
- உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- கடலைப் பருப்பை நன்கு ஊறவைத்து, நீரை வடித்துவிட்டு, உப்புப் போட்டு நன்றாக அரைக்கவும்.
- இருப்புச்சட்டியில் (அடி கனத்த பாத்திரம் அல்லது கடாய்) முந்திரிப்பருப்பை கொஞ்சமான நெய்யில் வறுக்கவும். அப்படியே தேங்காய்த் துருவலையும் வறுக்கவும்.
- மீதமுள்ள நெய்யை சேர்க்கவும். பருப்பையும் சேர்க்கவும்.
- மிதமான சூட்டில் தொடர்ந்து உதிர உதிரக் கிளறவும்.
- அடுப்பில் வைக்கப்பட்ட மற்றொரு சட்டியில் ஒரு டம்ளர் நீரில் வெல்லத்தைக் காய்ச்சி பாகு எடுத்து வடிகட்டவும்.
வெகு சுவையான உக்காரை சுவைக்க ரெடி .
Post a Comment