30 வகை குயிக் சமையல்---30 நாள் 30 வகை சமையல்
30 வகை குயிக் சமையல் . ரவா கிச்சடி தேவையானவை: ரவை - 200 கிராம், வெங்காயம் - ஒன்று, கேரட் துருவல், உரித்த பட்டாணி - தலா ஒரு கப், பொட்டுக்க...
https://pettagum.blogspot.com/2012/03/30-30-30.html
30 வகை குயிக் சமையல்
.ரவா கிச்சடி
தேவையானவை: ரவை - 200 கிராம், வெங்காயம் - ஒன்று, கேரட் துருவல், உரித்த பட்டாணி - தலா ஒரு கப், பொட்டுக்கடலை - 4 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, நெய் - 100 மில்லி, பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - சிறிதளவு, எலுமிச்சம்பழம் - ஒரு மூடி, கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு. மோர்க்களி
தேவையானவை: புழுங்கல் அரிசி (இட்லிஅரிசி) - கால் கிலோ, மோர் - 200 மில்லி, கடுகு - ஒரு டீஸ்பூன், மோர் மிளகாய் - 2, உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.குறிப்பு: இதற்கு இட்லி மிளகாய்ப்பொடி சிறந்த காம்பினேஷன்.
இஞ்சித் துவையல்
தேவையானவை: இஞ்சி - ஒரு சிறிய துண்டு (தோல் சீவி நறுக்கவும்), கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு, புளி - ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு, காய்ந்த மிளகாய் - ஒன்று, உளுத்தம் பருப்பு, எண்ணெய் - தலா 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.குறிப்பு: சூடான சாதத்தில் இந்தத் துவையல் போட்டு சாப்பிட்டால் ஜீரண சக்தி அதிகரிக்கும். சுட்ட அப்பளம் இதற்கு நல்ல காம்பினேஷன்.
பொடி தோசை
தேவையானவை: தோசை மாவு - 250 கிராம், இட்லி மிளகாய்ப் பொடி - 100 கிராம், எண்ணெய் - 100 மில்லி.குறிப்பு: இதற்கு சைட் டிஷ் தேவை இல்லை.
வெரைட்டி பஜ்ஜி
தேவையானவை: கடலை மாவு, அரிசி மாவு - தலா ஒரு கப், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், குடமிளகாய், வெங்காயம், கத்திரிக்காய், கேரட், வாழைக்காய், பஜ்ஜி மிளகாய் - தலா ஒன்று, எண்ணெய் - 500 மில்லி, உப்பு - தேவையான அளவு.செய்முறை: கடலை மாவு, அரிசி மாவுடன் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும். காய்கறிகளை வில்லை வடிவமாக நறுக்கவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி, அடுப்பை மிதமான சூட்டில் வைத்து... காய்கறியை கரைத்து வைத்திருக்கும் மாவில் தோய்த்துப் போட்டு, வெந்ததும் எடுக்கவும்.
ஃப்ரூட் தயிர்சாதம்
தேவையானவை: அரிசி - 250 கிராம், ஆப்பிள், வாழைப்பழம், மாதுளம் பழம் - தலா ஒன்று, திராட்சைப் பழம் - 100 கிராம், கேரட் துருவல் - ஒரு கப், புளிக்காத தயிர் - 2 கப், உப்பு - சிறிதளவு.குறிப்பு: தயிர்சாதம் சாப்பிடாமல் அடம் பிடிக்கும் குழந்தைகளும் இதை விரும்பி சாப்பிடுவார்கள்.
அடை மாவு குணுக்கு
தேவையானவை: இட்லி அரிசி - கால் கிலோ, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு கப், காய்ந்த மிளகாய் - 4, பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் 300 மில்லி, உப்பு - தேவையான அளவு.குறிப்பு: அடை மாவு மீந்துவிட்டால், அதைப் பயன்படுத்தியும் இதே போல் குணுக்கு தயாரிக்கலாம்.
மிக்ஸ்டு கீரைக்கூட்டு
தேவையானவை: கழுவி சுத்தம் செய்து, நறுக்கிய முளைக்கீரை, வெந்தயக் கீரை, அரைக்கீரை - தலா ஒரு கப், தேங்காய் துருவல், பாசிப்பருப்பு - தலா ஒரு கப், காய்ந்த மிளகாய் - 2, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.குறிப்பு: எல்லா கீரைகளிலும் இதே முறையில் கூட்டு தயாரிக்கலாம்.
புளிப்பொங்கல்
தேவையானவை: உடைத்த அரிசி ரவை - 200 கிராம், புளி - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 2, கடுகு, கடலைப்பருப்பு, மஞ்சள்தூள் - தலா அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு,குறிப்பு: வடகம், வற்றல் இதற்கு சிறந்த காம்பினேஷன்
வெஜிடபிள் சாபுதானா
தேவையானவை: ஜவ்வரிசி - 250 கிராம், பொடியாக நறுக்கிய குடமிளகாய் - ஒரு கப், பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்), வறுத்த வேர்க்கடலைப் பொடி, கேரட் துருவல் - தலா ஒரு கப், கடுகு - ஒரு டீஸ்பூன், பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, நெய் - 100 மில்லி, எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.குறிப்பு: இது, வட இந்திய ஸ்பெஷல். இதில் விரும்பிய காய்களை சேர்க்கலாம்.
லெமன் ரைஸ்
தேவையானவை: பாசுமதி அரிசி - கால் கிலோ, எலுமிச்சம்பழம் - 2, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, கடுகு - அரை டீஸ்பூன், பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன், வறுத்த வேர்க்கடலை - ஒரு கப், பச்சை மிளகாய் - 2, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.குறிப்பு: சாதம் குழையக் கூடாது. உதிரியாக இருந்தால்தான் கலப்பது எளிது. விருப்பப்பட்டால் முந்திரியும் சேர்க்கலாம்.
வேர்க்கடலை சட்னி
தேவையானவை: வேர்க்கடலை - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 2, கடுகு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.குறிப்பு: இது இட்லி, தோசைக்கு சூப்பர் காம்பினேஷன்.
தக்காளி ஜாம்
தேவையானவை: தக்காளி - கால் கிலோ, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 2, வெல்லம் - ஒரு சிறிய துண்டு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - சிறிதளவு. செய்முறை: தக்காளியை வேகவிட்டு தோல் உரித்து... இஞ்சி, பச்சை மிளகாய், பொடித்த வெல்லம், உப்பு சேர்த்து அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு அரைத்ததை சேர்த்துக் கிளறவும்.
வெரைட்டி பயறு சுண்டல்
தேவையானவை: முளைகட்டிய கொண்டைக்கடலை, முளைகட்டிய பச்சைப் பயறு, முளைகட்டிய கொள்ளு, முளைகட்டிய சோளம், துருவிய கேரட் - தலா ஒரு கப், நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
விசில் விட்டு இறக்கவும். துருவிய கேரட், கொத்தமல்லி சேர்த்துக் கலக்கவும்.
குறிப்பு: இந்த வெரைட்டி பயறு சுண்டலை வெள்ளரிக்காய், தக்காளி கலந்தும் தயாரிக்கலாம்.
மிக்ஸ்டு வெஜிடபிள் கூட்டு
தேவையானவை: பொடியாக நறுக்கிய கேரட், குடமிளகாய் - தலா ஒரு கப், உருளைக்கிழங்கு, கத்திரிக்காய் - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்), துவரம்பருப்பு - ஒரு கப், பச்சை மிளகாய் - 2, தேங்காய் துருவல் - ஒரு கப், கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.குறிப்பு: சூடான சாதத்தில் நெய்விட்டு இந்தக் கூட்டு கலந்து சாப்பிட்டால்... சுவை அபாரமாக இருக்கும். இதற்கு அப்பளம் சிறந்த காம்பினேஷன்.
மாங்காய் சாதம்
தேவையானவை: அரிசி - 250 கிராம், மாங்காய் - ஒன்று, பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, கடுகு - ஒரு டீஸ்பூன் பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. துவரை மொச்சை கிரேவி
தேவையானவை: உரித்த துவரைக்காய், தோல் உரித்த மொச்சை - தலா ஒரு கப், தக்காளி - 4, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 2, எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. உடனடி உப்புமா
தேவையானவை: அரிசி மாவு 100 கிராம், பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், பெருங்காயத்தூள் - சிறிதளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள், அரை டீஸ்பூன், எண்ணெய் - 100 மில்லி, புளித்த மோர் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.குறிப்பு: திடீர் விருந்தினர்களை சமாளிக்க இந்த உப்புமா உதவும்.
அப்பளக் குழம்பு
தேவையானவை: புளி - ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு, அப்பளம் (சிறியது) - 2, சாம்பார் பொடி - 3 டீஸ்பூன், கடுகு, வெந்தயம், கடலைப்பருப்பு தலா - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு, எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. வெஜிடபிள் இட்லி
தேவையானவை: இட்லி மாவு - அரை கிலோ, துருவிய கேரட், பச்சைப் பட்டாணி, பொடியாக நறுக்கிய குடமிளகாய் - தலா ஒரு கப், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.செய்முறை: காய்களை எண்ணெய் விட்டு வதக்கி, உப்பு சேர்த்து மாவுடன் கலந்து இட்லித் தட்டில் ஊற்றி வேகவிட்டு எடுக்கவும்.
தக்காளி பருப்பு
தேவையானவை: பாசிப்பருப்பு - ஒரு கப், தக்காளி - 2, பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), பொடியாக நறுக்கிய இஞ்சி - சிறிதளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.குறிப்பு: இது, சப்பாத்திக்கு சிறந்த காம்பினேஷன்
புதினா சாதம்
தேவையானவை: அரிசி - கால் கிலோ, புதினா - ஒரு கட்டு, வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று, நெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.குறிப்பு: புதினா சீஸனில் புதினா சாதம், சட்னி, வடை, துவையல் என்று பலவிதமாக தயாரிக்கலாம். புதினாவுக்கு மருத்துவ குணம் உண்டு.
மோர் ரசம்
தேவையானவை: மோர் - 500 மில்லி, காய்ந்த மிளகாய் - ஒன்று, கடுகு, வெந்தயம், சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, அரிசி மாவு - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.குறிப்பு: இதை கொதிக்க வைக்கக் கூடாது.
வெங்காய துவையல்
தேவையானவை: சின்ன வெங்காயம் (உரித்தது) - 20, காய்ந்த மிளகாய் - 4, உளுத்தம்பருப்பு 4 டீஸ்பூன், புளி - ஒரு சிறிய நெல்லிக் காய் அளவு, எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, வெங்காயத்தை நன்கு வதக்கி வைத்துக் கொள்ளவும். உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை வறுத்து... புளி, உப்பு, வதக்கிய வெங்காயம் சேர்த்து அரைக்கவும்.
வெஜிடபிள் ஊத்தப்பம்
தேவையானவை: இட்லி மாவு - அரை கிலோ, பொடியாக நறுக்கிய குடமிளகாய், கேரட் துருவல், பச்சைப் பட்டாணி - தலா ஒரு கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.குறிப்பு: இதற்கு சட்னி சிறந்த காம்பினேஷன். விருப்பமான காய்களை சேர்த்துக் கலந்து தயாரிக்கலாம்.
பாசிப்பருப்பு பெசரட்
தேவையானவை: புழுங்கல் அரிசி (இட்லி அரிசி) - 100 கிராம், பாசிப்பருப்பு - 200 கிராம், காய்ந்த மிளகாய் - 4, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, எண்ணெய் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.குறிப்பு: பாசிப்பருப்பு வயிற்றுப் புண்ணை ஆற்றும் குணமுடையது.
தயிர் சேமியா
தேவையானவை: வறுத்த சேமியா - 100 கிராம், புளிக்காத தயிர் - 500 மில்லி, கடுகு - ஒரு டீஸ்பூன், வெண்ணெய் - ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு, எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.குறிப்பு: தயிர் சாதத்துக்கு பதில் இப்படி தயாரிக்கலாம்.
வெஜிடபிள் ஜூஸ்
தேவையானவை: துருவிய கேரட் - ஒரு கப், திராட்சைப் பழம் - 100 கிராம், மாதுளை முத்துக்கள், சர்க்கரை - தலா ஒரு கப், தக்காளி - ஒன்று.குறிப்பு: தக்காளிக்குப் பதில் எலுமிச்சம்பழச் சாறு சேர்க்கலாம்.
எள்ளுப்பொடி ரைஸ்
தேவையானவை: அரிசி - 250 கிராம், எள்ளு - 100 கிராம், உளுத்தம்ருப்பு - 4 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. பருப்பு பக்கோடா
தேவையானவை: கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, அரிசி மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம் - தலா ஒரு கப், பச்சை மிளகாய் - ஒன்று, இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு.குறிப்பு: சோளத்தை அரைத்துச் சேர்த்தும் இந்த பக்கோடா தயாரிக்கலாம்.

Post a Comment