அழகான கண்களுக்கு.---அழகு குறிப்புகள்.
அழகான குழந்தையின் ரகசியம் இருப்பதாக கருதப்படும் குங்குமப்பூவை பயன்படுத்தி அழகான மேனியழகையும் பெறலாம். அதற்கு சில டிப்ஸ்… >குங்குமப...


குங்குமப்பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற விடவும். குங்குமப் பூவின் நிறம் முழுக்க நீரில் ஊறியதும் சிறிது வெண்ணெய் கலந்து நன்றாக குழைக்கவும். இந்த கலவையை தொடர்ந்து சில நாட்களுக்கு பூசி வர உதடுகள் செவ்வாழை நிறம் பெறும். உதடுகளின் வறட்சி இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும். முகத்தில் கரும்புள்ளிகள் இருந்தால் மறைந்து விடும்.
மேலும், நக சுத்தி வந்து அழுகிப் போன நகங்கள், உடைந்து போன நகங்கள் போன்றவற்றை குங்குமப்பூ வெண்ணை கலவையானது சீர்படுத்தி இழந்த அழகை மீட்டுத் தருகிறது.
ஒருவரது முகத்திற்கு வசீகரத்தை தருவது கவர்ச்சி மிகுந்த கண்கள்தான். அப்படிப்பட்ட கவர்ச்சியான கண்களுக்கு பளிச் அழகைத் தருவது அடர்த்தியான இமைகள். உங்களுக்கு பட்டாம்பூச்சி போல படபடக்கும் அழகான இமைகள் அமைய இந்த குங்குமப்பூ கலவையை அடிக்கடி பூசி வரலாம்.
Post a Comment