எலுமிச்சை சாறு சேர்க்கும்போது---வீட்டுக்குறிப்புக்கள்
எலுமிச்சைச் சாறு சேர்க்கும் பதார்த்தங்களுக்கு பச்சை மிளகாயைச் சேர்த்தால்தான் ருசியாக இருக்கும். வற்றல் மிளகாய் ஏற்றதில்லை. உணவுப் பொருள்க...

உணவுப் பொருள்களுக்கு மஞ்சள் பொடி நல்ல நிறம் கொடுப்பதுடன் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. அது ஒரு கிருமிநாசினி.
பாலைக் காய்ச்சாமல் எதற்கும் உபயோகிக்கக் கூடாது.
மசாலாப் பொருள்கள் மணமாகவும் ருசியாகவும் இருப்பதால், அன்றாடம் சமையலில் அவற்றைப் பயன்படுத்தக் கூடாது. மசாலாப் பொருள்கள் ஜீரண நீர் சுரப்பதைப் பாதிக்கக் கூடியவை.
எலுமிச்சை சாற்றைக் சூட்டுடன் இருக்கும் பதார்த்தத்தில் சேர்க்கக் கூடாது. அதனால் சாறு கசந்து போய்விடும். சூடு ஆறிய பிறகே சாறு சேர்க்க வேண்டும்.
எண்ணெய் வைத்துப் பட்சணங்கள் தயாரிக்கும்போது காய்ந்த எண்ணெயில் கோலியளவு புளியைப் போட்டு அது கருகிய பின் எடுத்து எறிந்து விடவும். எண்ணெய்க் காறலை இது போக்கும்.
Post a Comment