இந்திய பத்திரிக்கைகளுக்கான இணைய தளம்--கணிணிக்குறிப்புக்கள்
காலையில் எழுந்ததும் நம்மில் பலருக்கு அன்றைய செய்தித் தாள்களைப் படிக்கவில்லை என்றால், எதனையோ பறி கொடுத்தது போல் இருக்கும். இப...

https://pettagum.blogspot.com/2012/03/blog-post_3655.html
காலையில் எழுந்ததும் நம்மில் பலருக்கு அன்றைய செய்தித் தாள்களைப் படிக்கவில்லை என்றால், எதனையோ பறி கொடுத்தது போல் இருக்கும். இப்போது ஏறத்தாழ அனைத்து பத்திரிக்கைகளும், தங்கள் செய்தித்தாளினை, தாங்கள் உருவாக்கிய இணைய தளங்களில் அமைத்து படிக்கத் தருகின்ற னர். சில செய்தித்தாள் நிறுவனங்கள் இதற்குக் கட்டணம் வசூலிக்கின்றன. பல வசூலிப்பதில்லை. இவற்றைப் படிக்க, இந்த செய்தித்தாள் இணைய தளங்களின் முகவரியினைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அவற்றை நம்முடைய பேவரிட் தளப் பட்டியலில் போட்டு வைத்து இன்டர்நெட் இணைப்பில் கிளிக் செய்து படிக்கலாம். இதற்குப் பதிலாக, ஓர் இணைய தளம் சென்றால், அனைத்து இந்திய பத்திரிக்கைகளின் தளங்கள் அல்லது அவற்றிற்கான லிங்க்ஸ் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். அப்படி ஓர் இணைய தளம் நமக்கு http://www.eazyhomepage.com/Indian_newspapers.html என்ற முகவரியில் கிடைக்கிறது. இந்த தளம் சென்றால், இந்தியாவின் பல மொழிகளில், ஏறத்தாழ 135 பத்திரிகை களின் இணையப் பதிப்பிற்கான தொடர்பு ஐகான்கள் தரப்பட்டுள்ளன. இவற்றில் கிளிக் செய்தால், நாம் விரும்பும் செய்தித்தாளைக் காணலாம். எவ்வளவு எளிதான வேலை பார்த்தீர்களா!
Post a Comment