உப்பு அதிகமாகிவிட்டதா?-- வீட்டுக்குறிப்புக்கள்,

உப்பு அதிகமாகிவிட்டதா? சாம்பார் உள்ளிட்ட...

உப்பு அதிகமாகிவிட்டதா? சாம்பார் உள்ளிட்ட குழம்பு வகைகளில் உப்பு அல்லது காரம் அதிகமாகிவிட்டதா? கவலை வேண்டாம். ஒரு தக்காளிப் பழத்தை சிறு துண்டுகளாக்கி நறுக்கிப் போட்டுக் கொதிக்க வையுங்கள். உப்பு அல்லது காரம் சரியாகிவிடும். ரவா லட்டு செய்யும்போது.... ரவா லட்டு செய்யும்போது அத்துடன் அவலையும் பொடித்து, நெய்யில் வறுத்துச் சேர்த்து 3 டேபிள் ஸ்பூன் பால் பவுடரையும் கலந்து தயாரித்தால், ரவா லட்டின் சுவை மேலும் கூடும். எண்ணெய் காறலை போக்க... வடை, போண்டா தயாரித்த எண்ணெய் காறலாக இருக்கும். இதை போக்க ஒரு வழி. எண்ணெயில் கோலியளவு புளியைப் போட்டு அது கருகிய பின் எடுத்துவிடவும். இப்படி செய்தால் எண்ணெயின் காறல் குறைந்துவிடும். தக்காளி சூப் தயாரிக்கும்போது... வீட்டில் தக்காளி சூப் தயாரிக்கிறீர்களா? உங்களுக்குத்தான் இந்த டிப்ஸ். சூப் தயாரிக்கும் போது நன்றாக வேகவைத்த பீட்ரூட் துண்டு ஒன்றை அதில் போட்டு விட்டால், சூப் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். சாப்பிட சுவையாக இருக்கும். கத்தரிக்காய் வாடாமல் இருக்க... கடையில் பிரெஷ் ஆக வாங்கி வைத்த கத்தரிக்காய் வாடி வதங்கி விடுகிறதா? கத்தரிக்காயை ஹாட் பாக்ஸில் வைத்து மூடினால் காய் வாடாமல், நிறம் மாறாமல் இருக்கும். முறுக்கு, சீடை தயாரிக்கும்போது... பஜ்ஜி, பூரி, சப்பாத்தி, முறுக்கு, சீடை போன்றவை தயாரிக்கும்போது கொஞ்சமாக பேக்கிங் பவுடர் கலந்து கொண்டால் நன்றாக வருவதோடு சுவையாகவும் இருக்கும். வெண்ணெய் உருகாமல் இருக்க... தயிரை ஃப்ரிஜ்ஜில் வைத்து விட்டு, பிறகு மிக்ஸியில் கடைந்தால் வெண்ணெய் திரளும். மிக்ஸியினால் ஏற்படும் சூடு பாதித்தால் வெண்ணெய் திரளாமல் உருகிவிடும். அதனால்தான் ஃப்ரிஜ்ஜில் வைக்க வேண்டியுள்ளது. சமையலறை பிசுக்காக உள்ளதா... சமையலறையில் பிசுக்கு இருந்தால் மண்ணெண்ணெய் தொட்டுத் துடைத்தால் நன்றாகப் பளிச்சென்று விட்டுவிடும். ஆனால் சமையலறை ஜன்னல், கிரில் இவற்றில் மண்ணெண்ணெய் படக்கூடாது (பெயிண்ட் உதிர்ந்துவிடும்). வெந்நீரில் சிறிது வாஷிங் சோடாவைப் போட்டு அதைக் கொண்டு துடைத்தால் பிசுக்குப் போகும். தயிர் கெட்டியாக இருக்க... சில வீடுகளில் தயிர் பிசின் போல இருக்கும். இதற்குக் காரணம், அவர்கள் நல்ல சூட்டோடு பாலை ுறை ஊற்றுவதுதான். மிகவும் குளிர்ச்சியாக இல்லாமல், மிகச் சிறிதளவு வெதுவெதுப்பில் ுறை ஊற்றினால் கெ‌ட்டியாக கொழகொழப்பற்ற தயிர் கிடைக்கும். பால் காய்ச்சும்போது... தற்போது வரும் பாக்கெட் பால் எற்கனவே உயர்ந்த உஷ்ணத்தில் பதப்படுத்தப்பட்டுக் குளிர்விக்கப்படுகிறது. எனவே, பால் பொங்குமளவுக்கு அதை நாம் காய்ச்ச வேண்டிய அவசியமே இல்லை. மேற்பரப்பு சுருங்க ஆரம்பித்தவுடனேயே பாலை அடுப்பிலிருந்து இறக்கிவிட வேண்டும். இல்லாவிட்டால், தயிர் தோய்க்கும் போது கொழகொழப்பாக இருக்கும். புரை ஊற்ற மோர் இல்லையா? பாலில் புரை ஊற்றுவதற்கு மோர் அல்லது தயிர் இல்லையா? கவலையை விடுங்கள் 4 கா‌ய்‌ந்த மிளகாய்க் காம்புகளைப் பாலில் போட்டு வைத்து விடுங்கள். அடுத்த நாள் அந்தப் பால் நன்கு தோய்ந்து தயிர் ஆக மாறி இருக்கும். குக்கரில் வெயிட் போடும்போது... சிலர் குக்கரை மூடியவுடனேயே வெயிட்டைப் போட்டுவிட்டு, வேலை ஆயிற்று என்று நிம்மதியாக நகர்ந்து விடுவார்கள். இது தவறு. நீராவி மூடியின் பைப் வழியாக நன்கு வெளிப்பட்ட பிறகு வெயிட்டைப் போட வேண்டும். இல்லாவிட்டால், பைப்பில் அடைப்பு இருந்தால் அது ஆபத்தில் முடியும். நீராவி வெளிவரும் வேகத்தில் அடைப்பு நீங்கி விடவும் கூடும சுத்தமான தேனா என்பதை அறிய... தேன் வாங்குகிறீர்கள். இது உண்மையான தேனா அல்லது சர்க்கரைப் பாகா என்று கண்டுபிடிக்க ஒரு சுலபமான வழி இருக்கிறது. ஒரு கப் தண்ணீரில் ஒரு சொட்டுத் தேனை விடுங்கள். அது சமர்த்தாகப் போய் முத்துப்போல் கப்பின் அடியில் உட்கார்ந்து கொண்டால் நல்ல தேன். கரைந்துவிட்டால் சர்க்கரைப்பாகு. வீட்டிலேயே பால்கோவா செய்ய... சிலருக்கு வீட்டிலேயே பால்கோவா செய்ய ஆசையும் திறமையும் இருக்கும். ஆனால், நேரம் தான் இருக்காது. இவர்கள், தினமும் கொஞ்சம் பாலை சுண்டக்காய்ச்சி, `குழம்புப்பால்' பதத்துக்கு ஃப்ரிஜ்ஜில் வைத்துக் கொண்டே வரலாம். என்றைக்கு எவ்வளவு நேரம் கிடைக்கிறதோ, அவ்வளவு நிமிடம் மட்டும் பாலைக் காய்ச்சிக் கொண்டே வந்தால், சில நாட்களில் சிரமம் தெரியாமல் பால்கோவா ரெடி! அப்பளம் பொரிக்கும்போது... எ‌ரிவாயு அடுப்பில் அப்பளம் பொரிக்கும்போது, கடைசி நிமிடம் வரை அடுப்பு எரிய வேண்டும் என்பது அவசியமில்லை. அடுப்பை அணைத்த பிறகு அந்த எண்ணெய்ச் சூட்டிலேயே ஐந்தாறு அப்பளங்கள் பொரித்து எடுத்துவிடலாம். சப்பாத்தி சுடும்போது... சப்பாத்தி இட்டு விட்டு, அதன் மீது லேசாய் எண்ணெய் தடவி முக்கோணமாக மடித்து பிறகு மீண்டும் இட்டு, பிறகு சுட்டால், சப்பாத்தி தனித்தனியாக இதழ் பிரிவது போல் பிரிந்து கொண்டு வரும். அப்பம் மிருதுவாக இருக்க... அப்பத்துக்கு மாவு கரைக்கும் போது சிறிதளவு கோதுமை மாவைச் சேர்த்துக் கொண்டால், அப்பம் மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும். டீ கமகமவென மணக்க... டீத்தூள் வைத்திருக்கும் பாட்டிலில் உபயோகித்த ஏலக்காய் தோல்களைப் போட்டு வைத்திருந்தால் டீ ஏலக்காய் மணதோடு சுவையாக இருக்கம் தேங்காய் சட்னி ருசியாக இருக்க... தேங்காய் சட்னி மிகவும் சுவையாக இருக்க நாம் அரைக்கும் சட்னியில் பாதி தேங்காயும், பாதி கொத்துமல்லியையும் சேர்த்து அரைத்தால் மிகவும் ருசியாக இருக்கும். வடகம் நன்றாகப் பொரிய... மழை, குளிர் காலங்களில் வடகம் நமத்துப் போய் நன்றாகப் பொரியாது வெறும் வானலியை அடுப்பில் வைத்து சூடேற்றி அதில் வடகத்தைப் போட்டு சற்று புரட்டி எடுத்து விட்டு எண்ணெயில் பொரித்தால் நன்றாகப் பொரியும். வெங்காய தோசை சுவையாக இருக்க... வெங்காய ஊத்தாப்பம் செய்யும்போது தோசை இருபுறமும் வெந்து இருந்தால்தான் சுவையாக இருக்கும். தோசையின் நடுப்பகுதியில் சிறு ஓட்டை செய்து எண்ணெய் ஊற்றினால் விரைவில் வெந்தும், சுவையாகவும் இருக்கும். சத்தான நிறமான தோசை வார்க்க... தோசைக்கு ஊற வைக்கும்போது 1 கிலோவிற்கு, 50 கிராம் வேர்க்கடலை 50 கிராம் பட்டாணி சேர்த்து ஊற வைத்து அரைத்து மாவுடன் கலந்து தோசை வார்த்தால் நிறமான சுவை அதிகமான, சத்து நிறைந்த தோசை ரெடி.

Related

தேவையான வீட்டுக் குறிப்புகள்-3

தேவையான வீட்டுக் குறிப்புகள்  வாழைக்காயை ப்ரிஜ்ஜில் வைக்கும் போது, அப்படியே வைக்காமல், இரண்டாக கட் பண்ணி வைத்தால் வாழைக்காய் கருப்பாகாமல் அப்படியே புதியது போல் இருக்கும். ...

தேவையான வீட்டுக் குறிப்புகள்-4

தேவையான வீட்டுக் குறிப்புகள்   வாழைக்காயை ப்ரிஜ்ஜில் வைக்கும் போது, அப்படியே வைக்காமல், இரண்டாக கட் பண்ணி வைத்தால் வாழைக்காய் கருப்பாகாமல் அப்படியே புதியது போல் ...

தேவையான வீட்டுக் குறிப்புகள்

வெள்ளை முடி கருமையாக...!  கடுக்காய்த்தோல், நெல்லிக்காய் இரண்டையும் கொட்டை நீக்கிக் காயவைத்துப் பொடியாக்கி வைத்துக் கொண்டு தினமும் 3 கிராம் வீதம் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை ச...

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

Wednesday - Nov 27, 2024 8:22:32 AM

No. of Posts

8665 Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

16,087,207

Advertisement

Contributors

Popular PostsBlog Archive

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item