வெப்பம் தணிக்கும் வெட்டி வேர்--மருத்துவ டிப்ஸ்

வி னை தீர்க்கும் வேர்கள் பற்பல உண்டு. அதில் ஒருசில வேர்களின் மருத்துவப் பயன்பாடுகளை அறிவோமா? எட்டி நிற்போரையும் கட்டி இழுக்கும் வாசம் உள்ள...

வினை தீர்க்கும் வேர்கள் பற்பல உண்டு. அதில் ஒருசில வேர்களின் மருத்துவப் பயன்பாடுகளை அறிவோமா? எட்டி நிற்போரையும் கட்டி இழுக்கும் வாசம் உள்ள வெட்டி வேர் முதலில்!

குரு வேர், விழல் வேர், விரணம், இரு வேலி... என இதற்குப் பல பெயர்கள் உண்டு. புற்கள் வகையைச் சேர்ந்த இந்தத் தாவரத்தின் வேர்கள் மட்டுமே மூலிகை மருந்தாகப் பயன்படுகிறது.

மேல் பகுதியில் உள்ள புற்களையும் அடிப் பகுதியில் உள்ள வேர்களையும் வெட்டிய பின், நடுப்பகுதியான தண்டை மட்டும் மண்ணில் ஊன்றினாலே போதும்; மீண்டும் வெட்டிவேர் செடி தானாக வளர ஆரம்பித்துவிடும். இப்படி வெட்டி எடுத்து விளைவிப்பதாலும் 'வெட்டி வேர்’ எனப் பெயர் வந்தது.

புற்களை வெட்டி எடுத்து விட்டு, வேரை மட்டும் மண் போக நன்கு நீரில் அலசி சுத்தம் செய்து உலர்ந்த பின், மருத்துவத் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தலாம்.

வெட்டி வேரை சுத்தமான தேங்காய் எண்ணெயில் போட்டுவைத்து, தினமும் தலைக்குத் தேய்த்து வந்தால், தலைமுடி வாசமும் வளமும் பெறுவதோடு உடல் வெப்பமும் தணியும்; முடி உதிர்தலும் நிற்கும். தலைமுடித் தைலங்களோடும் இதனைச் சேர்த்துப் பயன்படுத்தலாம்.

சுத்தம் செய்த உலர்ந்த வெட்டி வேரையும் பெருஞ்சீரகத்தையும் சம அளவு எடுத்து சூரணமாக்கி ஒரு ஸ்பூன் அளவு வெந்நீரில் கலந்து உட்கொண்டு வந்தால், வெப்பத்தினால் ஏற்படக்கூடிய நீர் எரிச்சல், வயிற்றுக் கடுப்பு போன்றவை தணியும்.

195 மி.கி முதல் 600 மி.கி வரையிலான வெட்டி வேரை 30 மி.லி. முதல் 65 மி.லி. அளவு நீரில் ஊறவிட்டு, அந்த ஊறல் நீரை உட்கொண்டால், சுரம், நாவறட்சி, உடல் எரிச்சல் நீங்கும்.

கோடைக் காலத்தில் அறைகளின் ஜன்னல்களில் வெட்டி வேர் தட்டியைப் பயன்படுத்துவதால், அறையின் வெப்பம் தணிவதோடு நறுமணமும் குளிர்ச்சியும் புத்துணர்வைத் தரும்.

வெட்டி வேர் வாசம் இனி உங்கள் இல்லம் முழுக்க வீசட்டும்!


Related

மூலிகைகள் கீரைகள் 8199329953043900940

Post a Comment

2 comments

கோமதி அரசு said...

வெட்டி வேர் வாசம் இனி உங்கள் இல்லம் முழுக்க வீசட்டும்!//

வெயில் காலத்துக்கு ஏற்ற டிப்ஸ்.

பனி சூட்டுக்கும் நல்லது தான்.
நன்றி.

MohamedAli said...

Many Thanks! By A.S. Mohamed Ali

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item