எள் சப்பாத்தி -- சமையல் குறிப்புகள்
எள் சப்பாத் தி தேவையா...

எள் சப்பாத்தி
தேவையானவை: மைதா, கோதுமை - தலா ஒரு கப், ரவை, எள்ளு, பொடியாக நறுக்கிய கீரை - தலா கால் கப், தயிர் - அரை கப், பச்சை மிளகாய் விழுது - அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: எண்ணெயை தவிர மற்ற எல்லாவற்றையும் சேர்த்து நன்றாகப் பிசையவும். தேவை யெனில் சிறிது தண்ணீர் சேர்க்கலாம். பிசைந்த மாவில் சிறிது எடுத்து சப்பாத்திகளாக இட்டுக் கொள்ளவும்.
குழிவான கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சப்பாத்தியைப் போட்டு, நன்றாக உப்பியதும் திருப்பிப் போட்டு எடுக்கவும். இதுபோல் எல்லா சப்பாத்திகளையும் செய்து கொள்ளவும்.
எள் சப்பாத்தி: எள்ளின் அளவில் பாதிக்குப் பதிலாக கசகசாவை சேர்த்துச் செய்தால் ருசி இன்னும் நன்றாக இருக்கும்.
Post a Comment